19.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
🫨சாரி டியர்ஸ் யூடி தர லேட் ஆகிடுச்சு... லாஸ்ட் அப்டேட்ஸ் நிறைய எமோஷன்ஸ் அண்ட் நிறைய நிறையன்னு டைப் செய்து கம்பிளீட்டா பிளான்க் ஆகிட்டேன்... அதில் கொஞ்சம் கேப் ஆகிடுச்சு... மன்னிச்சு... 🙂↕️ அத்தியாயம் -19 இரண்டு வாரங்கள் கடந்த நிலையில்… “நான் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் குறிஞ்சி. ஒரு வருஷம் தான் எக்ஸ்பீரியன்ஸ்னு. உறுதியா வேண்டாம் சொல்லிட்டாங்க. நீ எதுவும் ஏஜென்சி மூலம் முயற்சி செய்து பாரேன்…”, என்றார் குறிஞ்சியுடன் வேலைப் பார்க்கும் செவிலியர். அதில் “சரிங்க க்கா” என்று முகம் வாட கூறியவள்… திரும்பி தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டாள். அவர்கள் மருத்துவமனையில் வேலையில் இருக்கும் ரோஹன், கனடா போன்ற வெளி நாடுகளுக்கு வீட்டில் இருந்தே பணிப்புரிய செவிலியர்களை, இங்கு தமிழ்நாட்டில் இருந்து எடுத்து அனுப்புவது உண்டு. மாதா மாதம் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவனுக்கு கமிஷனாக தந்துவிட்டால் போதும். மாதத்திற்கே மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை சம்பளமாக வரும் என்று கூற… தனக்கு அவ்வேலை கிடைத்தால்… இங்கு அன்னையை மருத்துவ வசதியுடன் கூடிய ஹோம் மாதிரியான இடத்தில் சேர்த்துவிட்டு கூட சென்று ப...