18.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

ஈத்தனின் தாத்தா மயில்வானத்தின் கதையில் ஆரம்பித்து, உமையாள், சித்ரலேகா, ஹன்டர், அவர்களின் காதல், திருமணம்… என்று சொல்லிக்கொண்டே போக…

“அம்மாடி…” என்று குறிஞ்சிக்கு கேட்கும் போதே அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது…

மேலும் தொடர்ந்து, ஈத்தனின் சிறு வயதிலான பல தகவல்களை சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் காட்ட…

“பொம்மையெல்லாம் இவரை பார்த்து தான் செய்திருப்பாங்களோ…” என்று நினைத்தவளின்… கண்கள்… அவனின் நீல கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தது…

அழகான காணொளி என்று அவள் நினைத்து முடிக்கும் முன்பே, அவனுடைய பெற்றோர்களின் திடீர் பிரிவு, அவர்களின் மறுமணம் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகள், ஈத்தன் இங்கேயே தாத்தா பாட்டியுடன் வந்து வசிக்க ஆரம்பித்தது என ஒன்றுவிடாமல் அனைத்து தகவல்களையும் புகைப்படத்துடன் கூற கூற…

அழகான கோலம் கலைந்த உணர்வு…

‘அச்சோ… இதனால் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி, குழந்தை மட்டும் கேட்டாரா…?

நமக்காவது கூட அம்மா இருக்காங்க… பாவம் சமர் சார்… 

இப்ப பாட்டியும் வேற இல்லையே… கடவுளே’ என்று நினைத்தவளுக்கு…

இப்பொழுது உமையாள் அம்மாவின் இறுதி வார்த்தைகளும்… ஈத்தனின் தவிப்பும், அழுகையும்…. புரிய…

ஏற்கனவே பாரமேறிய நெஞ்சில் இன்னும் பாரம் கூடிய உணர்வு…

ஏன் தான் இந்த கடவுள் இப்படியெல்லாம் பண்றாரோ… காசு இருந்தா போதும்னு நினைச்சா… அதுமட்டும் போதாதுன்னு வேற பிரச்சனையை கொடுத்துடுறாரே…

ஈத்தனின் முதல் பாடல் முதல்… இப்பொழுது வரையிலான அவனின் தமிழ் மற்றும் ஆங்கில ஹிட் பாடல்கள்… அவன் வாங்கிய விருதுகள்… என்று கூறப்பட…

இவ்வளவு மன கஷ்டத்தையும் தாண்டி… இவ்வளோ உயரம் வந்திருக்காரே சமர் சார்… 

அதுவும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் நம்மகிட்ட எப்படி தன்மையா பேசினார்…

என்று நினைத்தவளுக்கு… கடைசி நேரத்தில் அவன் சென்றுவிட்டது நினைவிற்கு வர… 

அன்றைய அனுபவங்கள், தன் அன்னையும், தன்னை தனியாக விட்டுவிட்டு இப்படி பிரிந்துவிடுவாரோ… என்ற எண்ணத்தை தோன்ற வைக்க…

ஒருவித பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தவளின் தேகம் முழுதும் பய அலை பரவி கவ்வி பிடித்தது‌…

அதில், “இல்லை… இல்லை… நிச்சயம் அம்மா பழையப்படி நல்லா ஆகிடுவாங்க… என் கூடவே இருப்பாங்க…” என்று அவளுக்கு அவளே கூறி, எதிர்மறை சிந்தனைகளை நிறுத்த பார்க்க…

இங்கு பணம் இல்லை என்றால் ஒன்றுமில்லை, என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது…

அதில் கண்களில் இருந்து பெருகிய நீர், சர சரவென வழிந்து ஓட…

ஐஸ்வர்யாவின் மீது பட்டுவிட போகிறது என்று பயந்தவள், மாறி மாறி தன் உடையிலேயே அதனை துடைத்துக் கொள்ள…

தொலைக்காட்சியின் வழியே அவளிடம் மிதந்து வந்த ஈத்தன்… 

விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்…

என்று ஆறுதலாக வந்து அவளை அடைய…

என்ன இது, எனக்காகவே இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டது போலிருக்கே…

முதல் முறை இசையின் வரியை ஆழ்ந்து கவனித்து இளைப்பாறியவள்… மெல்ல இசையையும் கவனிக்க தொடங்கி… பாடுபவனின் உடல் மொழியையும் கவனிக்க ஆரம்பிக்க…

“ஏய் போதும் போ… அப்படியே நின்னு நேரத்தை கழிக்காம வேலையை பாரு” என்ற ஐஸ்வர்யா… அப்படியே சரிந்து பிரபுவின் மடியில் படுத்துக்கொள்ள…

வேடிக்கை பார்த்ததில், மானசீகமாக தன் தலையில் கொட்டிக்கொண்ட குறிஞ்சி…

துணிமணிகளை அள்ளிக்கொண்டு விரைந்தாள்…

நேற்றை விட இன்று அலைச்சலில் உடல் அசதி கூடுதலாக இருக்க… மலையை முதுகில் கட்டி இழுப்பது போல் இருந்தது வேலை பார்ப்பது…

அதில் எப்படியோ உருண்டு தவழ்ந்து என்று அனைத்தையும் முடித்துவிட்டு வந்தவள்… நொடிக்கூட தாமதிக்காமல் சுருண்டு படுத்துவிட… அவளை விட வேகமாக அவளுடைய விழிகள் இரண்டும் இறுக்கமாக மூடிக்கொண்டன…
___________________________

அத்தியாயம் -19

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில்…

“நான் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் குறிஞ்சி. ஒரு வருஷம் தான் எக்ஸ்பீரியன்ஸ்னு. உறுதியா வேண்டாம் சொல்லிட்டாங்க. நீ எதுவும் ஏஜென்சி மூலம் முயற்சி செய்து பாரேன்…”, என்றார் குறிஞ்சியுடன் வேலைப் பார்க்கும் செவிலியர்.

அதில் “சரிங்க க்கா” என்று முகம் வாட கூறியவள்… திரும்பி தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டாள்.

அவர்கள் மருத்துவமனையில் வேலையில் இருக்கும் ரோஹன், கனடா போன்ற வெளி நாடுகளுக்கு வீட்டில் இருந்தே பணிப்புரிய செவிலியர்களை, இங்கு தமிழ்நாட்டில் இருந்து எடுத்து அனுப்புவது உண்டு. மாதா மாதம் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவனுக்கு கமிஷனாக வந்துவிடும்.

மாதத்திற்கே மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை சம்பளமாக வரும் என்று கூற… தனக்கு அவ்வேலை கிடைத்தால்… இங்கு அன்னையை மருத்துவ வசதியுடன் கூடிய ஹோம் மாதிரியான இடத்தில் சேர்த்துவிட்டு கூட சென்று பணம் சேமிக்கலாமே என்று தோன்ற… அவனிடம் ஓடி பேசிப்பார்த்தாள்…

அவன் அவளிடம் மறுத்துவிட… இதோ ரெக்கமென்டேஷனுக்கு எப்படியோ ஆள் பிடித்து அனுப்பினாள்…

அதுவும் தோல்வியே…

என்ன செய்வது…

மருத்துவமனை ஓனரையும் நேரில் சென்று பார்த்து, முன்பணமாக தரக்கூடிய, உதவி கேட்டு பார்த்துவிட்டாள்… இது தனியார் மருத்துவமனையம்மா… அப்படி எதுவும் தருவது இல்லை என்று அனுப்பிவிட்டுவிட…

சரி சரியென்று… அடுத்து அடுத்து என்று… ஏதாவது ஒரு வழி தனக்கு கிடைக்குமா என்று தேடி, அவளின் மூளை ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்க…

மனம் தான் சோர்ந்து போனது…

வெறும் தரையில் எவ்வளவு நாள் தான் அவளும் நீச்சல் அடிப்பது… சிறு முன்னேற்றமும் இல்லையே…

எப்பொழுதும் இரவு படுத்ததும் வரும் உறக்கம் கூட இன்று அவளுக்கு வரவில்லை…

மெல்லிய விளக்கில், சுவரில் சாய்ந்தமர்ந்து, எதிரில் இருந்த சுவற்றை அவள் வெறித்தப்படியே இருக்க…

அவளின் ஃபோனில் மெஸேஜ் வந்ததற்கான சத்தம்…

அதில் சிந்தனை கலைந்தவள்… ஃபோனை எடுத்து பார்க்க…

Hi Kurunji, it's Ethan. How's your mom doing now? I'm deeply sorry I forgot to follow up and I want to make it right. I'm committed to helping with her treatment. Please call me whenever you're free. I'll be waiting to hear from you.

ஈத்தனிடம் இருந்து செய்தி…

கண்களை தேயித்துவிட்டுக்கொண்டு மீண்டும் ஒருமுறை அதனை படித்தவள்…

நேரங்காலமெல்லாம் பார்க்கவில்லை…

உடனே அவனுக்கு அழைத்து விட்டாள்?

📣அடுத்த பாகத்தை படிக்க உடனே கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🦋 

கருத்துகள்

  1. Ayyo paatti um illaiye ethan pavam panam irunthum manaduku santosham illa, nalla velai Ethan kurimji ah marakala

    பதிலளிநீக்கு
  2. Ipppothavathu velicham thonruma

    பதிலளிநீக்கு
  3. பாவம் ஈத்தன் 😭

    பதிலளிநீக்கு
  4. நான் கூட பாட்டிய சமாதானம் செய்ய கல்யாணம் செய்து கொண்டான் நினைத்தேன் ஆனால் அதுவும் இல்லை.கதை நல்லா போகுது . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻