21.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
மறுநாள் காலை, ரவியை வீட்டிற்கு வரக்கூறிய ஈத்தன், அந்த வாரம் மீதமிருந்த ரெக்கார்டிங் அனைத்தையும் உடனே கேன்சல் செய்யக்கூறிவிட்டு… தொடர்ந்து யோகாவில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக்கொண்டவன்…
பத்து நாட்கள் கடந்த நிலையில், தன்னுடைய தனிப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தனியாக பாடி பார்க்க… அதுவும் தோல்வியே…
அதற்குள் மற்ற பட பிரொடியூசர்கள் வேறு அவனுக்கு நெருக்கடி கொடுக்க… என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை…
குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்க பழக, கௌன்சிலிங் கூட தினமும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டு இருந்தவனை… அன்று நேரில் பார்த்து பேச என்று ப்ரொடியூசர் வீட்டிற்கே வந்துவிட்டு இருந்தார்…
தமிழ் சினிமா உலகில் அவர்களின் ஓம் பிரொடக்ஷனுக்கு நிகரான ஆள் என்றால் அவர் மட்டும் தான்…
அன்று அவருடைய படத்திற்கு பாடப்போய் தான்… ஈத்தன் சொதப்பிவிட்டு திரும்பி வந்துவிட்டு இருந்தான்…
அவர்களுக்கு ரிலீஸ் நாள் நெருங்க ஆரம்பித்துவிட்டு இருந்ததில்… ஈத்தன் ‘தன்னால் பாடி தர முடியாது’ என்று அட்வான்ஸ் பணத்துடன், அவர்களுக்கு சட்டப்படி அறிக்கை அனுப்பி இருந்தவன்… நஷ்ட ஈடாக என்ன கேட்கிறார்களோ அதை தந்துவிடுவதாகவும் கூறிவிட்டு இருந்தான்…
அதில் தான் அவனை நேரில் பார்க்க அவர் வந்து இருந்தது…
என்ன ஆனது என்று விசாரித்தவரிடம்… “கொஞ்சம் மூட் அவுட் சாரங்கன்…” என்றவன்… காரணம் என்னவென்று சொல்லாமல் விட்டாலும்… அவரின் அனுபவம்… அவனின் நாடியை பிடித்து இருந்தது…
அவன் தோளில் தட்டியவர்… “உன்னை மாதிரி நிறைய பேரை இந்த துறையில் நான் பார்த்திருக்கேன் ஈத்தன்… எத்தனை டைரெக்டர்ஸ்… ஆக்டர்ஸ்… ரைட்டர்ஸ் எல்லாம்… பல குடும்ப பிரச்சினைகளை, துரோகங்களை, தோல்விகளை தாண்டி சீனிமா துறையில் மின்னிட்டு இருக்காங்க தெரியுமா…” என்றவர்…
“தாய்லாந்தில் எனக்கு தெரிஞ்ச ரெசார்ட் ஒன்னு இருக்கு ஈத்தன்… அங்க ஒரு மாசம் போய் தங்கிட்டு வா… நிச்சயம் மன மாறுதல் உனக்கு வரும்… அதுக்கு அப்புறம் வந்து பாடி கொடு… நாங்க வெயிட் பண்றோம்…” என்றவரை அவன் ஆழ்ந்து பார்க்க…
“பயப்படாத ஈத்தன்… உன் குரலுக்கு எந்த பாதிப்பும் அங்க வராது… எல்லாம் இயற்கையா தான் இருக்கும்…”, என்றவர் அடுத்து சொன்னதில்…
“சாரங்கன்…” என்று கத்தி அவரை நிறுத்தி இருந்தான் ஈத்தன்…
என்றுமே அவன் பெண்களை போதை பொருட்களாக பார்த்ததே இல்லை… அப்படி இருக்கையில் எப்படி, அவனால், அவர்களில் தன்னை மறந்து மூழ்க முடியும்…?
அதிலும் யாரென்று தெரியாதவர்களுடன் எல்லாம்…
நினைக்கவே அருவருப்பாக இருந்தது…
“யக்…” என்றான் வாய்விட்டே…
அதில் சத்தமாக சிரித்துவிட்ட சாரங்கன்…
“இதில் தப்பு எதுவும் இல்லை ஈத்தன்… அங்க யாரையும் நாம ஒன்னும் கட்டாயப்படுத்த போறது இல்லையே… யோசிச்சு முடிவெடு… நான் சொன்னது கண்டிப்பா சரியா வரும்… அப்புறம் வந்து நீயே எனக்கு நன்றி சொல்லுவ…” என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்…
பலரை பொருத்தவரை மன அழுத்தம் என்றால், மதுவும், மாதுவும் தானே இங்கு தீர்வு…
பாடகனான அவனால் மதுவை எடுக்க முடியாது என்னும் போது… மாதுவை அவனுக்கு அவர் பரிந்துரை செய்துவிட்டு செல்ல…
நம் நிலை அவ்வளவு கீழே சென்று விட்டதா என்று மேலும் மன அழுத்தம் கூடி நின்றிருந்த ஈத்தனை நெருங்கிய வீட்டு ஒருங்கிணைப்பாளர்…
குறிஞ்சி வந்து அவனை பார்ப்பதற்காக காத்திருப்பதாக கூற…
முன்கூட்டி தகவல் எதுவும் தராமல் அவள் வந்திருப்பதில்… தன் புருவத்தை சுருக்கிய ஈத்தன்… ஏதேனும் அவளுக்கு அவசரமோ என்று… அவள் காத்திருக்கும் வரவேற்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…
____________________________
வரவேற்பறைக்குள் அமர்ந்திருந்த குறிஞ்சி, ஈத்தனிடம் எப்படி இதை கேட்பது, என்ற யோசனையுடன், “கடவுளே” என்று அமர்ந்திருந்தவள்… பதட்டத்தில் தன் ஷாலின் நுனியை விரலில் சுற்றுவதும்… பிறகு அதை கழட்டுவதுமாக இருக்க…
ஈத்தனின் நறுமணம் மெல்ல அவளை சூழ ஆரம்பிக்க… அடுத்த சில வினாடிகளிலேயே, “ஹாய் குறிஞ்சி…”
என்றப்படியே ஈத்தன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்…
அதில் பட்டென்று எழுந்து நின்றிருந்தவள்… இத்தனை நாட்கள் அழுது வடிந்தது போல் இல்லாமல்… மலர்ந்த முகத்துடன்…
“ஹாய் சார்…” என்றப்படியே நிமிர்ந்து அவன் முகம் பார்க்க… அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மெல்ல அவளிடம் இருந்து பிரிந்து காணாமல் போயி விட்டது…
“அச்சோ! உங்களுக்கு உடம்பு சரியில்லைங்களா சார்…?” என்றாள் அவசரமாக குறிஞ்சி பதறி…
“இல்லை கேர்ள்… நான் நல்லா தான் இருக்கேன்… நோ வொர்ரீஸ்” என்ற ஈத்தன்… அவளை அமர கூறிவிட்டு அவளுக்கு எதிரில் அமர்ந்தவன்…
“அம்மா இப்போ எப்படி இருக்காங்க. எதுவும் பிரச்சனையா” என்று விசாரிக்க…
“பிரச்சனை எதுவும் இல்லைங்க சார்… உங்க உதவியால் இப்போ அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க சார்... நேத்து கொஞ்ச நேரம் உட்கார கூட வச்சாங்க…” என்றவள், “அதுக்கு உங்களுக்கு நன்றி சொல்ல தான் வந்தேன்…”, என்றாள்… அவனின் முகத்தை தீவிரமாக ஆராய்ந்தப்படியே…
அவள் முன்பு அமர்ந்திருப்பது… இத்தனை முறை அவள் பார்த்த ஈத்தன் இல்லவே இல்லை… அவன் எவ்வளவு அழகாக அவளுக்கு கைக்கொடுத்து வரவேற்று… ஒவ்வொன்றாக விசாரிப்பான்… இந்த ஈத்தனோ பட்டும் படாமல் அல்லவா பேசுகிறான்…
அதைவிட அவனின் அந்த சோர்ந்த விழிகளும்… பளீரென்று பளபளக்காத சருமமும்… அவளை மேலும் அவனை ஆராய வைக்க… உடல் கூட அவன் இளைத்துப்போய் இருப்பது கண்ணில் பட்டது…
‘இவருக்கு என்ன ஆனது’ என்ற யோசனையில் குறிஞ்சி மூழ்கிவிட…
அவள் நன்றி கூற வந்திருப்பதாக கூறியதில்…
“ஓ… நோ பிராப்ளம் குறிஞ்சி… வேற எதுவும் உதவி தேவைப்பாட்டா தயங்காமல் கேளுமா” என்றான் ஈத்தன் கனிவாக…
“இதுக்கு மேல என்ன உதவி சார் இருக்கு நீங்க செய்ய… இதுக்கே நான் எப்படி திரும்ப கைமாறு செய்ய போறேன்னு தெரியலை” என்றவள்… எதுவோ அவனிடம் சரியில்லை என்பதில் உறுதியாகி, “உண்மையிலேயே உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையில்ல சார்… பார்க்கவே ரொம்ப சோர்வா தெரியறீங்களே…” என்று அவன் மீது அவள் கொண்ட அக்கறையில் விசாரிக்க…
சட்டென்று ஈத்தனிடம் ஒரு இறுக்கம்…
“ஒன்னும் இல்லைன்னு சொன்னேனே கேர்ள்” என்றவன்… “வேற எதுவும் பேசனுமா…?” என்று கேட்க…
அவனின் அந்த இறுக்கத்தை துல்லியமாக கவனித்துவிட்டிருந்த குறிஞ்சி… மேற்கொண்டு எதுவும் அதைப்பற்றி கேட்கவில்லை…
தன் பையில் இருந்த ஒரு அட்டையை எடுத்து அவனிடம் தயக்கத்துடன் நீட்டியவள்…
“ஐஸ்வர்யா அக்கா… உங்கக்கிட்ட இதில் ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வர சொன்னாங்க சார்… ப்ளீஸ் போட்டு தரீங்களா…” என்று கேட்க…
“ஓ யெஸ்…” என்று உடனே வாங்கியவன்… அதில் தன் கையெழுத்தினை போட்டுவிட்டு அவளிடம் நீட்ட…
அவனையே தவிப்புடன் பார்த்தப்படி அமர்ந்திருந்த குறிஞ்சி, “ரொம்ப நன்றிங்க சார்” என்று அதை வாங்கி உள்ளே வைத்துக்கொள்ள…
அவ்வளவு தான் என்னும் விதமாக ஈத்தன் எழுந்து நின்று விட்டு இருந்தான்…
இதுவும் அவனின் இயல்பு கிடையாதே என்று நினைத்தப்படியே எழுந்துக்கொண்ட குறிஞ்சி…
அடுத்து அவனை பார்த்து கேள்வியில்… முதல் முறை அவனுடைய இன்னொரு முகத்தை பார்த்திருந்தாள்…
“கடைசியா ஒன்னே ஒன்னுங்க சார்… அதை மட்டும் கேட்டுட்டு கிளம்பிடறேன்…” என்றவள்…
தயங்கி தயங்கி “எப்ப சார் நீங்க கல்யாணம் செய்துக்க போறிங்க” என்று கேட்டு வைக்க…
“அதை பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண எனக்கு விருப்பம் இல்லை குறிஞ்சி” என்றான் ஈத்தன் பட்டென்று… முடிந்தளவு நாகரிகம் காத்து மெல்லிய புன்னகையுடனே…
அதை கொஞ்சமும் புரிந்துக் கொள்ளாத குறிஞ்சி, “அன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு பேபி கேட்டு வந்திருந்தீங்களே சார்… அப்புறம் உங்க பாட்டிமா கூட உங்களை சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொல்லி இருந்தாங்களே சார்… அதனால் தான் கேட்டேன்…”, என்றவள்… “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க சார்… உங்களுக்கு பிடிச்ச மாதிரியே உங்களுக்கு சீக்கிரம் பேபி கிடைக்கும்…” என்று வேறு கூற…
“It's none of your business” என்று இருந்தான் ஈத்தன் அழுத்தமாக…செயற்கை புன்னகை எதுவும் இல்லாது… அவளுக்கு அவளுடைய எல்லையை கூறும் வகையில்…
அதில் முகமே இருண்டு போனது குறிஞ்சிக்கு…
“மன்னிச்சுடுங்க சார்… நான் கேட்டு இருக்கக்கூடாது… தப்பு தான்” என்றவள்…
“நான் கிளம்பட்டுங்களா சார்” என்று அப்பொழுதும் அவனிடம் அனுமதி வேண்டி நின்றவள்… அவன் தலையசைத்ததும்… “நன்றிங்க சார்”, என்றுவிட்டு விடுவிடுவென்று வெளியேறியவள்... கேட்டை நோக்கி பயத்தில் ஓடவே ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…
____________________________
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் நட்புகளே 🪻
Ethan ku Ennachi en edai ninaichi kavalaya iruka, kurimji en unaku inda velai nee sonna madiri kuzhandai ah pethu kudu ma
பதிலளிநீக்குVery nice pavam ethan and kurunji also...
பதிலளிநீக்குSituation semma critical than
பதிலளிநீக்கு