22.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻🎼
🔴🌸ஹாய் டியர்ஸ்... இன்னைக்கு அத்தியாயம் 22-ல் பாதி தான் போட்டு இருக்கேன்... மீதி டைப் செய்துட்டு இருக்கேன்... சிலர் இன்னும் தூங்காமல் வெயிட் பண்ணதால் டைப் செய்த வரை போட்டு இருக்கேன்🌸🔴 and இன்னொரு முக்கியமான விஷயம் நிறைய பேர் அத்தியாயம் 21 இன்னும் வாசிக்கலை... மிஸ் பண்ணவங்க அதை வாசித்துவிடுங்க... அத்தியாயம் 21 லிங்க் - https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/211.html
அத்தியாயம் -22
ஈத்தன் வீட்டில் இருந்து, எப்படி மருத்துவனையை சென்று அடைந்தாள் என்று கேட்டால் குறிஞ்சிக்கு தெரியாது…
கால் போன போக்கில் எப்படியோ சரியாக சென்று சேர்ந்துவிட்டு இருந்தாள்…
இன்னும் நெஞ்சில் தோன்றிய படபடப்பு நிற்கவில்லை…
அவ்வளவு அவமானமாக இருந்தது…
‘அம்மாடி… அவ்வளவு கோபம் வரும் மாதிரியா நாம பேசிட்டோம்…’
‘கடவுளே…’ என்று தன் கண்களை மூடி மூடித்திறந்தாள்…
இதற்கே ஈத்தன் அவளை கத்தவோ, திட்டவோயில்லை…
ஆனால் அவன் அடித்துவிட்டது போல், உடல் முழுவதும் அவளுக்கு காய்ச்சல் அடித்தது…
இருந்தும் ‘அவருக்காக தானே சொன்னோம்… இதில் என்ன தப்பு…’ என்று எங்கோ மூலையில் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே தான் இருந்தது… பின்னே அவன் மட்டும் அவளுக்கு நல்லது என்று நிறைய செய்யலாம்… ஆனால் அவள் செய்தால் அது ‘that's none of your business’ என்றால் எப்படி… மனசாட்சி அவளை தட்டி கொடுக்க…
தன் தலையில் தானே கொட்டிக்கொண்ட குறிஞ்சி, ‘நீதான அவரை தேடிப்பிடிச்சு உன் விஷயத்தை சொல்லி உதவிக்கேட்ட… அவர் ஒன்னும் உன்னை தேடிவந்து அவர் வீட்டு பிரச்சனையை உன்கிட்ட சொல்லலையே…’ என்று அவளின் மனசாட்சியை எதிர்த்து, அவளே ஈத்தனுக்கு வக்காலத்து வாங்க…
சாந்தினி இருந்த அறையின் கதவை திறந்துக்கொண்டு உள் நுழைந்தாள் குறிஞ்சி.
அங்கு அவளுக்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா, குறிஞ்சியின் வாடிய முகத்தை பார்த்து… “என்னடி… உன் ஃபிரண்ட் ஆட்டோகிராஃப் வாங்கி தரலையா… இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த… அத்தனை வாட்டி கூப்பிட்டும் ஃபோனும் எடுக்கலை…” என்று திட்ட ஆரம்பித்தவள்…
“என்னையவே ஏமாத்த பார்க்கிறாயாடி…” என்று கத்த…
முற்றிலும் சோர்ந்து போனாள் குறிஞ்சி.
‘எல்லாம் இந்த ஐஸ் அக்காவால தான்’ என்று நினைத்துப்படியே… அவசர அவசரமாக தன் பை ஜிப்பினை திறந்து… அவள் கொடுத்தனுப்பிய கார்டினை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டாள்…
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே குறிஞ்சியின் உயிரை போட்டு அப்படி எடுத்து இருந்தாள் ஐஸ்வர்யா…
அவளின் தோழிகளிடம், ஈத்தனை பார்த்த விஷயத்தை குறித்து அவள் பகிர்ந்திருக்க…
“சும்மா கதை விடாத டி… ஈத்தனை உண்மையில் நீ பார்த்து இருந்தா… அது எப்படி ஒரு செல்ஃபி… இல்லை அட்லீஸ்ட் ஆட்டோகிராஃப் கூட வாங்காம நீ விட்டு இருப்ப…” என்று அவளை கேலி செய்துவிட…
அன்று இருந்த ஓவர் எக்ஸைட்மெண்டில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்த ஐஸ்வர்யா, நண்பர்களின் கேலியில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டு இருந்தாள்…
அதில், குறிஞ்சியிடம் வந்தவள், அவளை ஈத்தனுடைய வீட்டிற்கு அழைத்துச்செல்ல கூறி அடம் பிடித்தவள்…
உடனே எனக்கு அவருடன் செல்ஃபி வேண்டும்… ஆட்டோகிராஃப் வேண்டும் என்று ஆட…
“ஐயோ அக்கா… அவங்க வீட்டுக்கு அப்படியே எல்லாம் போக முடியாது… உள்ளேயே விட மாட்டாங்க… என் ஃபிரண்ட் தான் என்னை அப்ப எப்படியோ கூட்டிட்டு போனா… உதவின்றனால தான் விட்டாங்க… அதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம்” என்று ஏதேதோ கதைகளை குறிஞ்சி கூறியும் ஐஸ்வர்யா சற்றும் மசியவில்லை…
“எனக்கு ஆட்டோகிராஃப் வேணும். ஏற்பாடு பண்ணு. இல்லைன்னா நான் உண்ணாவிரதம் இருந்தாச்சும் ஈத்தன் சாரை பார்த்து… உன் அம்மா பத்தி எல்லாம் சொல்லிடுவேன்… அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லை… உன் அம்மாவோட லட்சணம் தெரிஞ்ச பிறகு அவர் ட்ரீட்மெண்ட்க்கு உதவி செய்றதை அப்படியே நிறுத்திப்பார்…”, என்று மிரட்டியவள்…
“நீயா ஏற்பாடு பண்றியா… இல்லை நானே ஏற்பாடு பண்ணிக்கவா…” என்று கழுத்தில் கத்தி வைக்க…
ஆடிப்போனாள் குறிஞ்சி…
‘ஐயோ இந்த சின்ன விஷயத்துக்கா இந்தக்காக்கு இவ்ளோ வன்மம்…’, என்று மருகியவள்…
ஐஸ்வர்யா எதையும் செய்ய கூடியவள் என்பதால் வேறுவழியின்றி அவள் கேட்டதை செய்ய முடிவெடுத்துவிட்டு இருந்தாள்…
பின்னே உலகில் யாருமே சாந்தினியின் விஷயம் தெரிந்தப்பிறகு, அவர் பக்கம் ஒரு நியாயம் இருக்குமென்று யோசித்துக் கூட… குறிஞ்சி பார்த்ததில்லையே…
அதிலும் ஈத்தனிடம் சாந்தினியின் மதிப்பு இறங்குவதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…
“நான் என் ஃபிரண்ட் கிட்ட பேசிட்டு சொல்றேன் க்கா… தயவுசெஞ்சு அவசரப்படாதிங்க” என்றவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
அவளை பொறுத்தவரை இந்த ஆட்டோகிராஃப் எல்லாம் ஒரு விஷயமே இல்லை…
‘போயும் போயிட்டு கையெழுத்து வேண்டும்னு எப்படி நிக்கிறது… எவ்ளோ பெரிய தொந்தரவு… நம்மளை பத்தி சார் என்ன நினைப்பார்… அது மட்டுமில்லை இந்த ஐஸ்வர்யா அக்கா அங்க போயிட்டு வேண்டும்னு அம்மா பத்தி எதுவும் சொல்லி, ட்ரீட்மெண்ட்டை கெடுத்துட்டா…’ என்று பலவாறு யோசித்து…
மறுநாள் ஐஸ்வர்யாவிடம், “அக்கா, என் ஃபிரண்ட் எனக்காக, வேற ஒருத்தங்க கிட்ட ஹெல்ப் கேட்டு தான் அந்த சாரை பார்க்க ஏற்பாடு செய்திருந்தா… இந்த வாரம் அவங்க வேற யாருக்கோ உதவி கேட்க திரும்ப ஈத்தன் சார் வீட்டுக்கு போறாங்களாம்… அவங்கக்கிட்ட வேண்டும்னா ஆட்டோகிராஃப் கேட்டு கொடுத்து அனுப்பலாம் சொல்றா… மத்தப்படி ஃபேன்ஸ் யாரையும் அவர் தனிப்பட்ட முறையில் பார்க்கிறது இல்லையாம்…” என்றுக்கூற…
“அதெல்லாம் முடியாது…” என்று ஆடிய ஐஸ்வர்யா… பிறகு எப்படியோ சரியென்று மலையிறங்கி வந்து இருந்தாள்…
அதில் அப்பாடா என்று நிம்மதி ஆன குறிஞ்சி… அன்றே கூகுள் ஆண்டவரின் உதவி மூலம் இதற்கு முன்பு ஈத்தன் போட்டு தந்திருந்த ஆட்டோகிராஃப்களை டவுன்லோட் செய்து… அவன் கையெழுத்தினை போட எப்படி எப்படியோ முயற்சித்து பார்த்தது எல்லாம் தனிக்கதை…
E தவிர ஒன்றும் அதில் புரியவில்லை…
‘பேரை எழுத சொன்னா… இந்த சார் அவரோட ஈசிஜி ரிப்போர்ட்டை வரைஞ்சி இருக்கார்… கடவுளே…’ என்று நொந்தவள்…
ஐஸ்வர்யா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் வேறுவழியின்றி ஈத்தன் வீட்டிற்கு சென்று… இதோ அவள் கேட்ட கையெழுத்தினை வாங்கிவந்தும் கொடுத்து விட்டாள்…
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் நட்புகளே 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/222.html
கருத்துகள்
கருத்துரையிடுக