22.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

கார்டினை வாங்கி பார்த்த ஐஸ்வர்யாவின் முகம்… சுவிட்ச் போட்டது போல்… அப்படியே பூத்துவிட்டது…

“வாவ்… வாங்கிட்டயா… இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடி… உன் அம்மா மாதிரி உனக்கும் கேடா என்ன…” என்றப்படியே ஈத்தனின் கையெழுத்தில் தன் இதழ்களை பதித்தவள்…

“அச்சோ என்னால நம்பவே முடியலயே…” என்று ஈத்தனின் கையெழுத்தை வருடி பார்த்து… உடனே அதனுடன் செல்ஃபி ஒன்றை எடுத்து… காலேஜ் வாட்ஸ் அப் குருப்பில் அதனை ஷேர் செய்துவிட்டு…
அனைத்து சோஷியல் மீடியாவிலும் உள்ள அவளின் கணக்குகளில் பதிவு செய்துக்கொண்டே வர… 

அதற்குள் அவளின் தோழிகள் மாறி மாறி அவளுக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டு இருந்தனர்…

அது ஒரு தனி உலகம்… குறிஞ்சி அறியாத உலகம்…

‘ஒரு கையெழுத்தில் போயிட்டு என்ன தான் இருக்கோ… அட போங்கடா’ என்று நினைத்தவள்… அதற்காக சென்று… தான் வாங்கிய மண்டக படியை நினைத்தப்படியே சாந்தினியை சென்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்…

என்ன தான் அவன் கண்டித்து அனுப்பி இருந்தும்… அவளின் கண்முன் ஈத்தனின் தூக்கிய கன்னத்து எலும்பு வந்து வந்து அவளை ஒருவழி செய்தது… 

முன்பும் ஈத்தன் ஒன்றும் பெரிதாக 6 பேக்… 8 பேக்… என்று எதுவும் வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தது இல்லை தான்… அவன் வயதுக்கேற்ற திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் அமைப்பு மட்டுமே அவனிடம்… 

ஆக்ரோஷமான உடற்பயிற்சிகள் எல்லாம் தொண்டை தசைகளில் அழுத்தம் கொடுக்கும்… அது குரலின் மென் தன்மையை பாதிக்க செய்யும் என்பதால் அவன் சாதாரணமா உடற்பயிற்சிகள் தவிர வேறு எதுவும் செய்வதில்லை… அவனுக்கு அதற்கு நேரமும் இருந்தது இல்லை…

அதனாலேயே, அவனின் உடல் இளைப்பு அப்பட்டமாக வெளியில் தெரியும் வண்ணம் இருந்தது…

அன்று அவன் உணவு அருந்தியதை கவனித்து இருந்தவள் உள்ளே, “ஏற்கனவே நம்மளை விட கம்மியா தான் சாப்பிடுவார்… இப்ப அதுவும் இல்லையோ…” என்ற எண்ணங்கள்…

அவன் கண்டித்தும் அவனை பற்றிய சிந்தனைகளை அவள் கொஞ்சமும் விடவில்லை…

அன்று தொலைக்காட்சியில் அவன் குடும்பம் பற்றி கூறிய தகவல்கள் மனதினுள் ஓட… பல கீறல்கள் விழுந்த… இப்பவோ அப்பவோ என்று இருக்கும்… தன்னுடைய ஃபோனை எடுத்து அதில் ஈத்தன் பற்றிய தகவல்களை மேலும் ஆராய ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…

“சாருக்கு அவங்க அம்மா அப்பா பிரிஞ்சுட்டதால் தான் கல்யாணம் மேல நம்பிக்கை இல்லை போல… அதனால் தான் கல்யாணம் இல்லாமல் குழந்தை கேட்டாங்களோ… 

இதெல்லாம் பாட்டிமாக்கு தெரிஞ்சிருக்குமோ… அதனால் தான் அவரை கடைசி நேரத்திலும் கல்யாணம் செய்துக்க சொல்லி இருக்காங்க போலயே…” என்று சரியாக கணித்தவள்…

“சார் ரொம்ப பாவம்…

அவங்க அம்மா, அப்பா இப்பவாச்சும் அவங்கக்கூட அவரை அழைச்சுக்கலாம் இல்லை…

என்ன செலவா வைக்க போறார்…

ஏன் இப்படி இருக்காங்க…?

இவங்களால் கல்யாணம்ற வார்த்தையே அவருக்கு பிடிக்காமல் போயிடுச்சு போல…

அதனால் தான் எனக்கு திட்டிவிட்டுட்டார்…”

சிந்தனைகள் அதுப்பாட்டுக்கும் கட்டுபாடுகள் எதுவும் இல்லாமல் ஓடியது…

“பாட்டிக்காகவாச்சும் சமர் சார் கல்யாணம் பத்தி யோசிக்கலாம். அவ்வளவு பெரிய வீட்டில் எப்படி தான் தனியாவே இருப்பாரோ… 

டாக்டரும் அவர் ஆசையா கேட்ட குழந்தையை தர முடியாதுன்னு சொல்லிட்டாங்களே…

என் அப்பா போல ஆட்களுக்கு எல்லாம் குழந்தையை தரும் கடவுள்… சமர் சாருக்கு தரலாம் இல்ல… நிச்சயம் நல்லா பார்த்துப்பாரே…” என்று நினைத்தவள்…

“ப்ளீஸ் சாமி… அம்மாக்கு ஹெல்ப் கிடைக்க ஒருவழி காட்டின மாதிரி… சமர் சாருக்கும் நல்ல வழி ஒன்னை காட்டுங்க சாமி… எனக்கு மனசே சரியில்லை…” என்று வேண்டியவளுக்கு… அவளை மீறி கண்ணோரம் கண்ணீர் துளிகள் இறங்கியது…

ஈத்தனுக்கு குறிஞ்சி, அவனிடம் உதவி பெற்ற பலரில் ஒருத்தி…

ஆனால் குறிஞ்சிக்கு ஈத்தன், அவள் உதவி கேட்ட பலரில், உதவி கரம் நீட்டிய ஒருவன்…

இரண்டுக்கும் மலையளவு வித்தியாசங்கள் உண்டே…

அவனை எவ்வாறு அவளால் எளிதில் கடக்க முடியும்…

இத்தனை காலம் சாந்தினி தான் அவளுக்கு எல்லாமுமாக இருந்தார்… ஆனால் இப்பொழுது அவளின் எல்லாமுமான சாந்தினியை காப்பாற்றி கொடுத்த ஈத்தனும் அவளுக்கு முக்கியமாகிப்போனான்…

அதேநேரம் அங்கு ஈத்தன், அவளின் இவ்வளவு நேர வேண்டுதலுக்கு பலனாக, உமையாள் கொடுத்திருந்த ஜாதகங்கள் அடங்கிய பையினை எடுத்து… அதிலிருந்த ஃபைல்களில் ஒன்றை வெளியே எடுத்து இருந்தான்…

குறிஞ்சி வந்து ஞாபகப்படுத்திவிட்டு போனப்பிறகு… உமையாள் இறுதி நாட்களில் செய்தவைகள் எல்லாம் நினைவுகளாக… அவனுக்குள் அலையடிக்க ஆரம்பித்து இருந்தன…

அதிலும் அந்த லட்டுக்குட்டி… கற்பனையிலேயே அவ்வளவு தித்திப்பு…

உமையாள் அம்மையார் வசதியையை முதன்மையானதாக பார்க்காது, நல்ல குடும்பமா என்று மட்டுமே ஆராய்ந்து… ஈத்தனுக்காக பெண் வரன்களை தேர்ந்தெடுத்து வைத்து இருந்தார்…

அதில் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்த ஈத்தனுக்கு… யாரின் மீதும் சிறு சலனமும் வரவில்லை…

எப்படி வரும்…

இந்த பெண் நம்முடன் இறுதிவரை இருப்பாளா…? நம்பளாமா…? திடீரென்று ஹன்டர் சித்ரலேகாவை விட்டது போல் நம்மை விட்டுவிடுவாளா…? என்று துப்பறிவாளர் போல் பூதக்கண்ணாடி கொண்டு உத்து உத்து அவன் பார்த்து வைத்தால்… எங்கிருந்து சலனம் வரும்…

அதிலும் திடீரென வரும் மனைவி பிரிந்துவிட்டால்… அவன் மட்டும் பாதிக்கப்பட மாட்டானே… குட்டி லட்டுவும் அல்லவா அவனை போலவே அன்னையை தேடி மனம் உடைந்து போகும்…

நேரம் ஆக ஆக… மீண்டும் பழைய சாத்தானே அவனுக்குள் புகுந்து… வேதம் ஓத…

மொத்த ஜாதகத்தையும் தூக்கி மீண்டும் உள்ளே எறிந்து விட்டு… படுக்கையில் படுத்துவிட்டான்…

அதேநேரம் அங்கு சாந்தினி உறங்கிய பிறகு சென்று, தனது உடைகளை அலசி, மருத்துவ மனையில் அதற்கு என்றே இருந்த இடத்தில் உலர்த்திவிட்டு வந்த குறிஞ்சியும்… படுக்கையில் விழவும் சரியாக இருந்தது…

தலைமாட்டில் ஃபோனை வைத்துவிட்டு… கழுத்து வரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டு… அவள் கண்களை மூடப்போக…

ஃபோனில் மெஸேஜ் வந்ததற்கான சத்தம்…

உடனே ஃபோனை எடுத்து திறந்தாள்…

பார்க்காமலேயே அவள் உள்மனம் கூறியிருந்தது அது யாரென்று…

அதன் படியே…

Kurunji, I'm sorry for speaking harshly. What you did wasn't right, but I shouldn't have reacted that way. Let's forget about that and move on. Don't think I won't help you if you need it in the future; and don't hesitate to ask. Good night.
-Ethan

இதழ்களின் ஓரம் புன்னகையில் விரிய… படுக்கையில் இருந்து அப்படியே எழுந்து அமர்ந்திருந்துவிட்டாள் குறிஞ்சி…

தன்னுடைய பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு இருந்தவன்… அதே சமயம் அதனால் அவள் செய்தது சரியென்று ஆகிவிடாது என்பதையும் நாசுக்காக சுட்டிக்காட்டி… இருவரும் நடந்ததை மனந்துவிடலாம் என்றிருந்தவன்… உடன் இதை வைத்து நான் உனக்கு உதவி செய்ய மாட்டேன் என்று நினைக்கவேண்டாம்… நீயும் கேட்க தயங்க கூடாது என்று அனுப்பியிருக்க…

என்ன மாதிரியான மனிதன் இவன்… வியந்து போனாள் குறிஞ்சி…

எங்கோ ஒரு மூலையில் ஈத்தன் கோபத்தில்… உதவியை நிறுத்திவிடுவானோ… என்ற பயம் அவளுக்கு இருந்தது உண்மையே… 

‘அது எப்படி இவருக்கு தெரிஞ்சு இருக்கும்…’ என்று நினைத்தவள் விரல்கள் வேக வேகமாக டைப் செய்ய ஆரம்பித்தன…

“தப்பு மொத்தமும் என்மேல் தான் சார். உங்க நல்ல மனசுக்கு, நீங்க நல்லா சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா வாழனும்றது தான் என்னோட ஆசை சார்… அதில் தான் நான் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமா பேசிட்டேன்… உங்க மனசையும் வருத்திட்டேன்… மன்னிச்சுடுங்க சார்… உடம்பை பார்த்துக்கோங்க… உதவி செய்யறேன்னு சொன்னதுக்கு நன்றி சார்… மெஸேஜ் அனுப்பினதுக்கும் நன்றி சார்… குட் நைட்”, என்று அவள் அனுப்பி வைக்க…

இப்பொழுது ஈத்தனின் இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை…

ஒளிவு மறைவு இல்லாத அவளின் வெள்ளை அன்பும்… அக்கறையும்… அவனுள் இதமாக இதம் பரப்பின…

அதில், “You are so kind and sweet kurunji, thank you.” என்று அனுப்பியவன்… அத்துடன் ஃபோனை அனைத்து வைத்துவிட்டு கண்களை மூடிக்கொள்ள…

இங்கு குறிஞ்சியோ… அடுத்த ஒரு மணி நேரத்திற்கு… 

“நீங்க தான் சார் ரொம்ப ஸ்வீட்” என்பதையே மாற்றி மாற்றி டைப் செய்து பார்த்து… இதை அனுப்பினால் அதிக படி ஆகிவிடுமோ… என்று பயந்து, இறுதியில் ஒன்றும் பதில் அனுப்பாமலேயே படுத்துக்கொண்டாள்…
_______________________________

📌அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻