18.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

ஈத்தன் வெளியே கிளம்புவதை பார்த்த, வீட்டு ஒருங்கிணைப்பாளர் ஓடிவந்து, குறிஞ்சி வந்து காத்திருப்பதை குறித்து கூற…

“காட்… எப்படி மறந்தேன்…” என்று தன் வாட்சை திருப்பி பார்த்த ஈத்தன்…

குறிஞ்சி இருந்த அறையை நோக்கி நடந்தான்…

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு மேலாக, மணியை பார்த்தவாறே, அவ்வளவு பெரிய அறையில், தனியாக அமர்ந்திருந்த குறிஞ்சி, திடீரென்று பரப்பரப்பானாள்…

காற்றில் மிதந்து வந்த ஈத்தனின் பர்ஃபியூம் மணத்தை அவளின் நாசி சரியாக உணர்ந்து மூளைக்கு செய்தி அனுப்பிவிட்டு இருக்க…

“ஹாய்…” என்றப்படியே ஈத்தன் அவ்வறைக்குள் நுழைந்து இருந்தான்…

அதில் பட்டென்று கையில் இருந்த பையுடன், எழுந்து நின்றுக்கொண்ட குறிஞ்சிக்கு, பதட்டத்தில் குப்பென்று வியர்க்க ஆரம்பித்து இருந்தது…

“சாரி குறிஞ்சி. நீ வந்து அதிக நேரம் ஆகுதுப்போல. காக்க வச்சிட்டேன்” என்ற ஈத்தன்… “குறிஞ்சி தானே பேர்…” என்று கேட்க…

“ஆமாம் சார்” என்றவள், “நீங்க சரியான நேரத்திற்கு தான் சார் வந்திருக்கீங்க… நான் தான் சீக்கிரம் வந்துட்டேன்… சாரி”, என்றாள் சங்கடத்துடன் புன்னகைத்தப்படியே…

“ஹே கூல்…” என்றவன், “வெல்கம் டூ அவர் ஹோம்” என்று அவளை வரவேற்கும் விதமாக கூறியவன், அவளுக்கு கைக்கொடுக்க…‌ தன் கரத்தினை நீட்டி இருந்தான்…

அதில், “தேங்க் யூ சார்” என்றவள்… தயக்கத்துடன் தன் கரத்தினை ஈத்தன் கரத்துடன் இணைக்க…

அவளின் கரத்தில் சிறு அழுத்தம் கொடுத்து மெல்ல குலுக்கியவனுக்கு…

அவளின் உள்ளங்கை ஈரமும்… நடுக்கமும்…‌ தளர்வாக அவன் கையுடன் அவள் தன் கையினை இணைத்திருந்த விதமும்… அவளின் பதட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட…

“ஹேய் பயப்படுறியா குறிஞ்சி…‌ ப்ளீஸ் ஃபீல் ரிலாக்ஸ் மா…” என்றவன்… “உட்காரு கேர்ள்” என்றுவிட்டு… அமர…

‘எப்படி கண்டுபிடித்தான்…’, என்ற ஆச்சரியத்துடன் ஈத்தனை பார்த்தப்படியே அமர்ந்தவள்…

“நீங்க கேட்டது எல்லாம் எடுத்திட்டு வந்து இருக்கேன் சார்” என்று ஃபைலை நீட்டினாள்…

“யா…!” என்று அதனை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தவன்…

“வீட்டில் நீயும் அம்மாவும் மட்டும் தானா? அப்பா?” என்று கேட்க.

“அப்பா எங்க கூட இல்லைங்க சார். பிரிஞ்சிட்டாங்க” என்றவளை, ஈத்தனின் விழிகள் பட்டென்று நிமிர்ந்து பார்க்க…

“சித்தி குடும்பம் கூட தான் சார் நாங்க இருக்கோம்” என்றவள்… அடுத்தடுத்து அவன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் டான் டான் என்று பதில் கூற…

அனைத்தையும் உன்னிப்பாக கேட்டுக்கொண்ட ஈத்தன்…

தன் மொபைலை எடுத்து… அவள் கொடுத்த ரிப்போர்ட்டினை ஸ்கேன் செய்து யாருக்கோ அனுப்பிவிட…

அடுத்த பத்து நிமிடத்தில், அவள் சாந்தினியை காட்டும் அரசு மருத்துவமனையில், அவள் கூறுவது உண்மையா என்று க்ராஸ் வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு அவனுக்கு தகவல் வந்து சேர்ந்து இருந்தது…

அதைத்தொடர்ந்து ஈத்தன், உமையாளை அனுமதித்திருந்த அதே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சாந்தினி குறித்து பேசியவன்… அவரின் ரிப்போர்ட்களை அவர்களுக்கும் அனுப்பிவிட்டு…

குறிஞ்சியை பார்த்தான்…

அவனையே தான் அவளும் பார்த்துக்கொண்டு இருந்தாள்…

அவன் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவள் முகத்தில், தாயிற்கு சிகிச்சை நடக்க போகிறது என்பதில் பெரும் மகிழ்ச்சி…

“ரொம்ப நன்றிங்க சார்…” என்றாள் கண்கள் கலங்க…

அதில், “ஈஸி கேர்ள்… அழக்கூடாது… அம்மாக்கு சீக்கிரம் சரியாகிடும்… இன்னைக்கே அட்மிட் பண்ணிடலாம்… ஓகே” என்றவனுக்கு ஏனோ அவளின் சிறிய முகம் அழுகையில் சுருங்குவதை பார்க்க பார்க்க மனதை போட்டு பிசைந்தது…

முதலில் என்னவென்று பேசி, ரவியிடம் குறிஞ்சியின் பொறுப்பை கொடுத்துவிட வேண்டும் என்று தான் நினைத்து வந்து இருந்தான்…

ஆனால் அவளின் தந்தை, அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாக அவள் கூறியதும், தன்னை போலவே அவளும் என்று நினைத்தவன், அவளுக்காக அவனே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து இருந்தான்.

ஏனோ அவளின் வலியை அவனால் உணர முடிந்தது…

நேற்றும் அப்படி தான் அவனுக்கு இருந்தது…

“ரொம்ப எக்ஸ்பிரஸிவான ஃபேஸ்” என்று நினைத்துக்கொண்டவன்…

மணியை பார்த்தப்படியே, மருத்துவ மனையில் இருந்து வரும் காலிற்காக காத்திருக்க…

அவ்வளவு தான்… தன் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்… என்று முழு நம்பிக்கையுடன் குறிஞ்சியும் அமர்ந்திருக்க…

“சார் எமர்ஜென்சி….” என்றப்படி அங்கு ஓடிவந்த அவனின் பாதுகாவலர்… 

“உமையாள் மேடம் பல்ஸ் ரொம்ப அப்நார்மலா இருக்கு சார்… திடீர்னு குறைஞ்சிட்டே போகுது… Things are getting critical” என்று படப்படக்க…

“வாட்…” என்று அதிர்ந்து எழுந்த ஈத்தன், அவன் கையில் இருந்த சாந்தினியின் ரிப்போர்ட் அனைத்தையும் அப்படியே கீழே போட்டுவிட்டு… உமையாள் இருந்த அறையை நோக்கி ஓட…

குறிஞ்சியும் அதிர்ந்துவிட்டாள்…

யாருக்கோ எதுவோ ஆபத்துப்போலவே என்று அவளும் அவன் பின்பு ஓட…

அங்கு மருத்துவருடன் பேசியப்படியே அவர் கூறிய மருந்தினை ஊசியில் ஏற்றிய செவிலியர், உமையாளுக்கு போட்டுவிட்டு…

அடுத்து ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டரை இழுத்துக்கொண்டு வர…

குறிஞ்சி ஓடி அவருடன் இணைந்துக்கொண்டாள்…

ஈத்தனுக்கோ நடப்பது எதுவும் புரியவில்லை… எங்கோ நடப்பது போல் அனைத்து காட்சிகளும் மங்கலாகி போனது…

குளிர்ந்து விட்டிருந்த உமையாளின் கையினை பற்றியப்படியே உறைந்து விட்டான்…

உமையாளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது…

அதில் விடுவிடுவென்று அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க்கை பொறுத்தியவர்கள்… அவரை ஸ்டெச்சரில் தூக்கி வைத்து தள்ளிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்…

ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர் மெஷினை தன் கையில் ஏந்தியப்படியே குறிஞ்சியும் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப ஓடி வண்டியில் ஏற… 

வண்டி வேகமெடுத்தது…

ஈத்தனுக்கு தலையெல்லாம் சுற்றியது…

அவனின் இதயம் அவனுக்கே கேட்கும் அளவிற்கு அவ்வளவு வேகமாக துடிக்க…

உமையாளின் கரத்தினை இறுக்கமாக பிடித்தது அவன் கரங்கள்…

அந்த நேரத்திலும் அவனின் தவிப்பை உமையாளின் நெஞ்சம் உணர, “சமரா….” என்றார்… திக்கி திணறி…

அதில் “பாட்டி…” என்றவனின் குரல் மொத்தமாக உடைந்துவிட்டு இருந்தது…

ஆக்ஸிஜன் மாஸ்க்கை சற்று ஒதுக்கியவர்… 

“தள்ளி போடாம… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ சமரா…”, என்று திக்கி திணறியவர்… 

“ல ட் டு லட்டு பொண்ணு உன்னை பார்த்துப்பா சமரா… தனிக்கட்டையா மட்டும் நின்னுடாதையா… பாட்டி நெஞ்சு வேகாது…” என்று திக்கியவரால்… அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை… 

மெஷின் கீங் கீங் கீங் என்று கத்த ஆரம்பிக்க…

அவனைப்பார்த்தப்படியே மெல்ல தன் கண்களை அவர் மூட…

“நோ… நோ… நோ…” என்று கத்திய ஈத்தன்… அவர் முகத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “என்னை ஏமாத்திட்டாதிங்க பாட்டி… கூடவே இருப்பேன்னு சொன்னீங்க இல்ல… ப்ளீஸ்… ப்ளீஸ்…”, என்று அழ…

மருத்துவமனை வளாகத்திற்குள் அவர்கள் வண்டி சென்று நின்று இருந்தது…

🦋அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

கருத்துகள்

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻