19.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
🫨சாரி டியர்ஸ் யூடி தர லேட் ஆகிடுச்சு... லாஸ்ட் அப்டேட்ஸ் நிறைய எமோஷன்ஸ் அண்ட் நிறைய நிறையன்னு டைப் செய்து கம்பிளீட்டா பிளான்க் ஆகிட்டேன்... அதில் கொஞ்சம் கேப் ஆகிடுச்சு... மன்னிச்சு... 🙂↕️
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில்…
“நான் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் குறிஞ்சி. ஒரு வருஷம் தான் எக்ஸ்பீரியன்ஸ்னு. உறுதியா வேண்டாம் சொல்லிட்டாங்க. நீ எதுவும் ஏஜென்சி மூலம் முயற்சி செய்து பாரேன்…”, என்றார் குறிஞ்சியுடன் வேலைப் பார்க்கும் செவிலியர்.
அதில் “சரிங்க க்கா” என்று முகம் வாட கூறியவள்… திரும்பி தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டாள்.
அவர்கள் மருத்துவமனையில் வேலையில் இருக்கும் ரோஹன், கனடா போன்ற வெளி நாடுகளுக்கு வீட்டில் இருந்தே பணிப்புரிய செவிலியர்களை, இங்கு தமிழ்நாட்டில் இருந்து எடுத்து அனுப்புவது உண்டு. மாதா மாதம் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவனுக்கு கமிஷனாக தந்துவிட்டால் போதும்.
மாதத்திற்கே மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை சம்பளமாக வரும் என்று கூற… தனக்கு அவ்வேலை கிடைத்தால்… இங்கு அன்னையை மருத்துவ வசதியுடன் கூடிய ஹோம் மாதிரியான இடத்தில் சேர்த்துவிட்டு கூட சென்று பணம் சேமிக்கலாமே என்று தோன்ற… அவனிடம் ஓடி பேசிப்பார்த்தாள்…
அவன் அவளிடம் மறுத்துவிட… இதோ ரெக்கமென்டேஷனுக்கு எப்படியோ ஆள் பிடித்து அனுப்பினாள்…
அதுவும் தோல்வியே…
என்ன செய்வது…
எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் சாந்தினிக்கு, முழு சிகிச்சைக்கான காப்பீடு தொகையை தருவாகவும் இல்லை…
இறுதி முயற்சியாக மருத்துவமனை ஓனரையும் நேரில் சென்று பார்த்து, முன்பணமாக தன் சம்பளத்தை அக்ரிமெண்ட் போட்டு தரமுடியுமா, என்று உதவி கேட்டு பார்த்துவிட்டாள்… ‘இது தனியார் மருத்துவமனையம்மா… அப்படி எதுவும் தருவது இல்லை’ என்று அவரும் அனுப்பிவிட்டுவிட…
சரி சரியென்று… அடுத்து அடுத்து என்று… ஏதாவது ஒரு வழி தனக்கு கிடைக்குமா என்று தேடி, அவளின் மூளை ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்க…
மனம் தான் சோர்ந்து போனது…
வெறும் தரையில் எவ்வளவு நாள் தான் அவளும் நீச்சல் அடிப்பது… சிறு முன்னேற்றமும் இல்லையே…
எப்பொழுதும் இரவு படுத்ததும் வரும் உறக்கம் கூட இன்று அவளுக்கு வரவில்லை…
மெல்லிய விளக்கில், சுவரில் சாய்ந்தமர்ந்து, எதிரில் அவள் வாழ்க்கை போலவே, வெறுமையாக இருந்த சுவற்றை அவள் வெறித்தப்படியே இருக்க…
அவளின் ஃபோனில் மெஸேஜ் வந்ததற்கான சத்தம்…
அதில் சிந்தனை கலைந்தவள்… ஃபோனை எடுத்து பார்க்க…
Hi Kurunji, it's Ethan. How's your mom doing now? I'm deeply sorry I forgot to follow up and I want to make it right. I'm committed to helping with her treatment. Please call me whenever you're free. I'll be waiting to hear from you.
ஈத்தனிடம் இருந்து செய்தி…
கடும் தாகத்தில் இருந்தவள் மீது ஒற்றை மழைத்துளி!
கண்களை தேயித்துவிட்டுக்கொண்டு மீண்டும் ஒருமுறை அதனை படித்தவள்…
நேரங்காலமெல்லாம் பார்க்கவில்லை…
உடனே அவனுக்கு அழைத்து விட்டாள்?
ஈத்தனும் அழைப்பை உடனே ஏற்று இருந்தான்…
“ஹே ஹலோ…” என்ற ஈத்தன், “அம்மா இப்ப எப்படி இருக்காங்க குறிஞ்சி. ஒன்னும் பிரச்சினை இல்லையே” என்று விசாரிக்க…
“ஒன்னும் பிரச்சினை இல்லைங்க சார்” என்றவள், “ஆனா அப்படியே தான் இருக்காங்க” என்று இழுக்க…
“சாரி ம்மா. நான் சுத்தமா மறந்துட்டேன். எதிர்பார்த்திருப்ப இல்ல. என் தப்பு தான்” என்றான் ஈத்தன் அவளை புரிந்தவனாக.
அதில் பதறிய குறிஞ்சி, “ஐயோ சார்… நீங்க என்ன தப்பு செய்தீங்க… மன்னிப்பு எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை… உங்க சூழ்நிலையில் நீங்க திரும்ப ஃபோன் பண்ணினதே பெரிய விஷயம்…” என்றவள், ‘எப்பொழுது உதவி செய்வான்’ என்று எப்படி கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள்…
தெரியாதவரிடம், வெட்கத்தை விட்டு வாய்திறந்து உதவி கேட்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லையே… அதுவும் அவன் இப்பொழுது இருக்கும் நிலையில்… தன்னை சுயநலவாதியாக நினைத்துவிட்டால், குறிஞ்சிக்கு மிகவும் பயமாக இருந்தது…
ஆனால் அவளுக்கு ஈத்தன் அந்த கஷ்டத்தை சிறிதும் தரவில்லை.
“இந்த வீக், நான் வீட்ல தான் இருப்பேன் குறிஞ்சி. உனக்கு எப்ப முடியுமோ அப்ப வரலாம்” என்றுவிட்டான்.
விட்டால் இப்பொழுது கூட அவள் கிளம்பி செல்ல தயார் நிலை தானே இங்கு…
அதில், “நா ன்… நான் நாளை காலை வரவா சார். அன்னைக்கு மாதிரியே…” என்று தயங்கி தயங்கி அவள் கேட்க…
“கண்டிப்பா குறிஞ்சி. உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்” என்ற ஈத்தன், “வேறெதுவும் பேசனுமா?” என்று கேட்க.
எப்படி ஆரம்பிப்பது என்று குறிஞ்சிக்கு தெரியவில்லை. அதற்காக விட்டுவிட முடியாதே… தன்னை நிலைப் படுத்திக்கொண்டவள்…
“சாரி சார். நான் முதல்லயே கேட்டு இருக்கனும். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவள், “எந்த வார்த்தையும் உங்களை இப்ப ஆறுதல் படுத்தாதுன்னு தெரியும் சார். மன்னிச்சுடுங்க” என்றாள்.
அதற்கு, “ம்…” என்ற ஈத்தன், “I am fine Kurunji. Thank you for your concern. நாளைக்கு பார்க்கலாம்” என்றுவிட்டு அழைப்பையே துண்டித்து விட்டான்.
ஈத்தனின் நிலை புரிந்திருக்க… குறிஞ்சி எதுவும் தவறாக எண்ணவில்லை…
“கடவுளே அவருக்கு இதை கடந்து வர நிறைய மன திடத்தை கொடுங்க…” என்று வேண்டிக்கொண்டவள்… மணியை பார்க்க… விடியற்காலை நான்கு…
இதற்கு பிறகு எங்கிருந்து படுப்பது…
நேரமே வேலைகளை முடித்துவைத்துவிட்டு கிளம்பலாம் என்று எழுந்துக்கொண்டாள்…
அங்கும் அப்பொழுது தான் மணியை பார்த்திருந்த ஈத்தன்…
“காட்…” என்று அதிர்ந்து இருந்தான்…
உமையாள் அம்மையாருக்கு, காரியம் முதற்கொண்டு அனைத்தும் முடிந்திருக்க… வந்திருந்த முக்கிய சொந்தங்கள் அனைவரும் கிளம்பிவிட்டு இருந்தார்கள்…
மாலை தான் சித்ரலேகாவும் கிளம்பி இருந்தார். ஈத்தனை அமெரிக்காவிற்கு அவர்களுடன் வந்துவிட கூறினார். ஆப்ரஹாமுமே அழைத்தார். இங்கு ரெக்கார்டிங் இருக்கும் சமயத்தில் மட்டும் வந்துச்செல்லலாம் என்றார்கள்…
“வரேன் மாம். கொஞ்சம் கமிட்மென்ட்ஸ் இருக்கு அதை மட்டும் முடிச்சுட்டு வரேன்” என்றான் ஈத்தன்…
என்றுமே அவனின் அந்த கமிட்மென்ட்ஸ் முடியாது என்று சித்ரலேகாவிற்கு தெரியாது போகுமா… “ஏன் ஈத்தன் இப்படி பண்ற” என்றவரின் ஆதங்கத்திற்கு…
“சாரி மாம்” தவிர அவன் வாயில் இருந்து எதுவும் வரவில்லை…
அவன் மீது கோபமாக தான் சித்ரலேகா கிளம்பி இருந்தார்.
அது ஈத்தனுக்கு அதிக வருத்தத்தை தந்தாலும், அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை…
அதிலும் உமையாளின் பிரிவில், இன்னுமே அவனுடைய மனம் மெல்லிய கண்ணாடியாகிவிட்டு இருந்தது… எளிதில் உடைந்துவிடும்… அதனாலேயே அதைச்சுற்றி பல வேலிகளை பாதுகாப்புக்கு போட்டு, யாரையும் நெருங்கவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தவன்…
அவன் வெறுக்கும் தனிமையை, அவனே இழுத்து போர்த்திக்கொண்டு இருந்தான்…
அதில், ஆழ்கடலினுள் தூக்கி சென்று வைத்துவிட்டது போல் வீடே அவ்வளவு அமைதியாக இருக்க…
இரவுணவை முடித்துக்கொண்டு, தோட்டத்திற்கு வந்திருந்த ஈத்தன், சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்துவிட்டு… பூங்காற்றின் ஓசையை கேட்டப்படியே, அப்படியே அங்கிருக்கும் கல் இருக்கையில் அமர்ந்துவிட்டவன்… நேரம் போனதையே உணரவில்லை…
அப்பொழுது தான் சிறு வயது ஞாபகங்களின் தாக்கத்தில் இருந்தவனுக்கு, திடீரென்று குறிஞ்சியின் ஞாபகம்…
“காட் எப்படி மறந்தேன்” என்று குற்ற உணர்விற்கு ஆளானவன். நேரம் காலத்தை பார்க்காமல் அவளுக்கு செய்தி அனுப்பியிருக்க… அவளும் நேரம் காலம் பார்க்காமல் அவனுக்கு அழைத்து பேசிவிட்டு இருந்தாள்…
அதில், “பாவம் அந்த பொண்ணும் தூங்கலை போலயே…” என்று நினைத்தப்படியே தன்னறைக்கு வந்து சேர்ந்த ஈத்தன், “மார்னிங், அந்த பொண்ணுக்கு எல்லாம் செட்டில் பண்ணிடனும்…” என்ற எண்ணத்துடன் படுத்து கண்களை மூடிக்கொள்ள…
உறக்கம் வருவேனா என்றது…
கட்டாந்தரையோ, பஞ்சு மெத்தையோ, நிம்மதி இருந்தால் தானே நிம்மதியாக உறங்க முடியும்.
ஆழ் மூச்சுக்களை எடுத்தெடுத்து வெளி விட்டவன்… எப்படியோ உறங்க தொடங்கினான்…
___________________________
📣அடுத்த பாகத்தை படிக்க உடனே கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🦋
கருத்துகள்
கருத்துரையிடுக