20.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️
ஈசி… ஈசி… ஒன்னுமில்லை… எல்லாம் சரியாகிடும்… ரிலாக்ஸ் கேர்ள்…” என்று அவளுடைய முதுகில் லேசாக அவன் தட்டி கொடுக்க…
மேலும் அழுதாள் அவள்…
தன் துக்கங்களை பகிரக்கூட ஆள் இல்லாமல் கிடந்தவளுக்கு… ஈத்தனின் அணைப்பும், வார்த்தைகளும்… அடிவயிற்றில் இருந்து சொல்ல முடியாத உணர்வுகளை கிளப்பி கொண்டு வந்தன…
ஆண் பெண் வித்தியாசங்கள் எதுவும் அங்கு இல்லை…
அவனின் அரவணைப்பும், அவளின் அடைக்கலமும் தான் அங்கு இருந்தன…
அவளை கொஞ்ச நேரம் அழவிட்டவன்… அதற்கு மேல் முடியாது…
“இப்படி அழுதுட்டே இருந்தா உடம்பு என்ன ஆகும் குறிஞ்சி… போதும்… கன்ட்ரோல் பண்ணு” என்று அவளின் முகத்தை பிடித்து நிமிர்த்தினான்…
முதல் சந்திப்பு தொடங்கியே, ஏதோ காலேஜில் முதல் வருட ஜூனியரை, கடைசி வருட சீனியர் பார்க்கும் பார்வை தான் அவனுக்கு அவளிடம்…
அவனுடைய மார்பளவு உயரத்தில் குட்டையாக இருந்தவள், அப்படி தான் தெரிந்தாள்…
அதிலும் அவளின் சிறிய வட்ட முகம், இப்பொழுது கசங்கி காணப்பட்டதில்… அவன் நெஞ்சில் அவ்வளவு இரக்கம் அவளுக்காக சுரந்தது…
அழும் குழந்தையை யாரால் அப்படியே பார்த்தும் பார்க்காதவாறு கடக்க முடியும்…
எட்டி, அங்கே டிஷ்ஷூ பாக்சில் இருந்து டிஷ்ஷூ ஒன்றை எடுத்தவன்…
“இங்க பாரு கேர்ள்…” என்று அவள் கண்களை மெல்ல துடைத்து விட… அவன் துடைக்க துடைக்க மீண்டும் அவள் கண்களில் நீர் உற்பத்தியாவதை பார்த்து…
“அழக்கூடாது…
அம்மாக்கு ஒன்னும் ஆகாது… நான் சொல்றேன் இல்ல…
நம்பு…
முதல்ல இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்படுறதை நிறுத்து குறிஞ்சி…
மெடிக்கல் ஃபீல்டுல தானே கேர்ள்… நீ இருக்க…
டாக்டர்ஸ் அவங்க பாதுகாப்புக்கு அப்படி தான் சொல்லுவாங்க…
இங்க இருக்க சீஃப், உன் அம்மாவை விட பெரிய கேஸ் எல்லாம் அசால்ட்டா ஹேண்டில் பண்ணி இருக்கார்…
நான் எல்லாம் விசாரிச்சு தான் இங்க சேர்க்க ஏற்பாடு பண்ணேன்…
நீதான் உன் அம்மாக்கு நிறைய நம்பிக்கை கொடுத்து, ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணனும்… அதை விட்டுட்டு, நீயே இப்படி அழுதுட்டு இருந்தா என்ன அர்த்தம்…” என்று கேட்டவன்…
அடுத்த பத்து நிமிடத்திலேயே அவளை… ஆப்ரேஷனுக்கு சம்மதம் கூற வைத்து இருந்தான்…
நெருக்கமாக இருந்தவனின் பர்ஃபியூம் மணம், அவளின் நாசி வழியாக அவளும் மொத்தமாக ஊடுருவி அவளை அமைதிப்படுத்தி வைத்திருக்க…
அவனின் அணைப்பில் இருந்த கதகதப்பு, அவளுக்கு தேவையான பாதுகாப்பை தர…
அவன் மென் குரல்… அவளின் மூளையை மயக்கி… தன் வசப்படுத்தி… அவன் கூறுவதை கேட்க வைக்க…
அவளின் கண்களுடன் பிணைந்திருந்த அவன் கண்களோ… மொத்தமாக அவளை அதனுள் சிறையெடுத்து வைத்திருக்க…
ஈத்தனின் கையில் தலையாட்டி பொம்மையாகிவிட்டு இருந்தாள் குறிஞ்சி…
அதில், “குட் கேர்ள்…” என்று அவள் கன்னம் தட்டி கூறியவன்…
அவளை அழைத்துக்கொண்டு சாந்தினி இருந்த அறைக்கு வர…
அங்கு அவனை பார்க்கவே, பிரபுவுடன் காத்துக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா…
“ஹலோ ஈத்தன் சார், உங்களை நான் இன்னைக்கு நேரில் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை… நான் உங்களோட குரலுக்கு தீவிர விசிறி… உங்க பாட்டுனா எனக்கு உயிர்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்று குதிக்க ஆரம்பித்துவிட…
“Thank you so much. That means everything to me” என்ற ஈத்தன்… அங்கிருந்த மேனேஜரை திரும்பி பார்க்க… “குறிஞ்சி அவங்களோட சிஸ்டர் சார். சித்தி பொண்ணும், அவங்க ஹஸ்பெண்ட்டும்” என்றார்…
அதில், “ஓ! கூல்…” என்ற ஈத்தனின் பார்வையில்… ஐஸ்வர்யா மீது மரியாதை கூடியது… குறிஞ்சி குடும்பத்திற்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்து இருப்பதாக அல்லவா அவனிடம் குறிஞ்சி கூறி வைத்திருந்தாள்…
அதில் வந்த மரியாதை தான்…
“நைஸ் டூ மீட் யூ போத்” என்ற ஈத்தன்… அவர்கள் இருவருக்கும் கைக்கொடுக்க…
ஐஸ்வர்யா அங்கிருந்து வானிற்கு பறந்தே சென்றுவிட்டு இருந்தாள்…
அவனுடைய பாடல்களில் எதுவெல்லாம் அவளுக்கு அதிகமாக பிடிக்கும், என்பதையெல்லாம் அவனிடம் அவள் கூறி முடிக்க…
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஈத்தன், “குறிஞ்சியை கூடவே இருந்து பார்த்துக்கோங்க ஐஸ்வர்யா… ரொம்ப பயந்து போய் இருக்கா… நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை…” என்றவன்… “எந்த உதவி வேண்டும்னாலும் தயங்காமல் உங்க சிஸ்டரை எனக்கிட்ட கேட்க சொல்லுங்க…” என்று கூற…
“என் தங்கச்சியை நான் பார்த்துக்கிறேன் சார்… நீங்க எதுக்கும் கவலை படாதிங்க…” என்ற ஐஸ்வர்யாவின் தேன் தடவிய பேச்சில்… பிரபுவிற்கே விட்டால் மாரடைப்பு வந்துவிடும் போல் இருந்தது…
குறிஞ்சிக்கோ சொல்லவும் வேண்டுமா..?
விரைவாகவே அவளிடம் “வரேன் கேர்ள்…” என்றுவிட்டு ஈத்தன் கிளம்பிவிட…
இன்னும் ஈத்தனை பார்த்த பிரமிப்பில் இருந்து வெளிவராது நின்றிருந்த ஐஸ்வர்யாவை, நைட் ஷோவிற்கு பிரபு இழுத்துச்சென்று விட்டான்…
அனைவரும் சென்ற பிறகும்…
ஈத்தன் கொடுத்திருந்த நேர்மறை அலைகள், அவனின் பர்ஃபியூம் மணம் போலவே குறிஞ்சியை சுற்றிக்கொண்டிருக்க…
தெளிந்த மனதுடன் அமைதியாக சென்று படுத்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி.
____________________________
மறுநாள் காலை என்றும் இல்லாத உற்சாகத்துடன் எழுந்தவள், ஈத்தன் கூறியப்படியே அனைத்தையும், நல்லதே நடக்கும் என்ற மனநிலையுடன் தைரியமாக செய்ய…
இதோ வெற்றிகரமாக சாந்தினிக்கு அறுவை சிகிச்சை முடித்து… அனைத்து ஆபத்து கட்டங்களையும் அவர் தாண்டி… ஐசியூவில் இருந்து முன்பிருந்த சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுவிட்டு இருந்தார்…
அதில் குறிஞ்சியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…
இனி எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்…
அவ்வளவு தைரியம்…
இனி அவள் அன்னை அவளுடனே இருப்பாரே…
ஈத்தன் மட்டும் அன்று நேரில் வந்து பேசாதிருந்தால்… இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை… என்று நினைத்தவளின் எண்ணங்கள் மெல்ல ஈத்தனையே சுற்றி வர…
அங்கு ஈத்தன் தன் வாழ்வில் முதல் முறை, ரெக்கார்டிங்ல் தொடர்ந்து அத்தனை டேக் வாங்கியும், அவர்கள் கேட்டப்படி பாடலை பாடி தர முடியாது, வீடு வந்து சேர்ந்து இருந்தான்…
அவனுடைய இரண்டு கண்களில் ஒன்றான உமையாள், ஏற்கனவே அவனை விட்டு பிரிந்து சென்றிருக்க…
இப்பொழுது இசையும்…
____________________________
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
👏👏👏
பதிலளிநீக்குMam story super Eagar ya waiting for another ud
பதிலளிநீக்குEthan ku unmai eduvum teriathu la terimji irunda aiswarya kitta pesi iruka matan, evlo kevalama pesitu iruka pakki kurimji avamgalai vittu velila vanda dan nimmadi ah irupa, ethan Ennachi en disturb ah iruka
பதிலளிநீக்குStory superb
பதிலளிநீக்குWowwwww... Ipdilam pasanga irupangala!!!! Amazing writing.. Next episode pls....
பதிலளிநீக்கு