20.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘

அவரும் என்ன ஏது என்று விசாரித்துவிட்டு… “சார் கிட்ட சொல்லாம நீங்களே ஏன்மா இவ்வளவு பெரிய முடிவை எடுத்தீங்க…” என்று கிட்டத்தட்ட திட்ட…

மிரண்டுப்போனவள்…

“வேற என்ன சார் செய்ய சொல்றீங்க… ஆப்ரேஷன் பண்றதே ரிஸ்க் எடுக்கிறதுன்றாங்களே… அதைவிட இவங்க ஹாஸ்பிட்டல் கட்டுன மொத்த காசையும் எனக்கு பில்லா போட்டு தராங்களே… நான் என்ன செய்றது” என்றாள் அழாத குறையாக.

அதற்கு, “அது எதுவா இருந்தாலும் நீங்க சார் கிட்ட சொல்லி இருக்கனும்… இல்லை என்கிட்ட சொல்லி இருக்கனும்… சாருக்குலாம் இவ்ளோ செலவு ஆகும்னு ஏற்கனவே தெரிஞ்சு தான் இருக்கும்… இப்ப உங்களால் நான் தான் திட்டு வாங்க போறேன்… கொஞ்சம் லேட்டா வந்ததில் எவ்வளவு பெரிய பிரச்சனையை எனக்கு இழுத்துவிட்டுட்டீங்க” என்றுவிட்டு சென்றவர்…

ஒருசில நிமிடங்களிலேயே அவளிடம் தன் அலைப்பேசியை எடுத்துவந்து ஈத்தன் லைனில் இருப்பதாக கூறியப்படியே நீட்டி இருந்தார்… உடன் தான் சாந்தினியுடன் இருப்பதாக சொல்லி, அவளை வெளியே சென்று பேசிவிட்டு வரக்கூறி அனுப்ப…

மருத்துவமனை லாபிக்கு சென்ற குறிஞ்சி, “ஹலோ சார்…” என்றாள் ஃபோனை காதில் வைத்து…

அதற்காகவே காத்திருந்த ஈத்தன், “என்ன கேர்ள் செய்து வச்சிருக்க…?” என்று எடுத்ததும் சற்று காரமாக ஆரம்பித்தவன், “இவ்ளோ பெரிய முடிவு எடுத்திருக்க… என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணனும்ற பேசிக் மேனர்ஸ் உன்கிட்ட கொஞ்சமும் இல்லையில்ல…” என்று நேரடியாகவே கேட்க…

திக்கென்றானது குறிஞ்சிக்கு…

ஏற்கனவே காலை மருத்துவர்களை சந்தித்ததில் இருந்து நொந்து இருந்தவளை, பிரபுவின் திட்டும், மேனேஜரின் திட்டும், மேலும் நோகடித்து இருக்க…
 
இப்பொழுது ஈத்தனும் திட்ட… என்ன செய்வாள்… அதுவும் எப்பொழுதும் அவளிடம் மென்மையாக பேசும் அவனின் இந்த குரல்… அவளுக்கு பயத்தை கொடுத்து இருந்தது…

அவனுக்கு இதற்கு மேல் தொல்லை தரக்கூடாது, அது தப்பு என்று தானே அமைதியாக இருந்தாள்… அதுவும் அவனுடைய உயரத்திற்கு நானெல்லாம் ஒருவிஷயமும் இல்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தாளே… ஆனால் அவனோ அனைத்திற்கும் விதிவிலக்காக வந்து நின்று, கேள்வி கேட்டால் என்ன செய்வது…

வினாடிகள் பல கடந்தும், அந்தப்பக்கம் இருந்து பதில் எதுவும் வராமல் போனதில்… “லைன்ல தானே கேர்ள் இருக்க…?” என்று ஈத்தன், காதில் இருக்கும் ஃபோனை எடுத்து, லைன் கட் ஆகிவிட்டதா என்று பார்த்துவிட்டு கேட்க…

“இருக்கேன்ங்க சார்…” என்றாள் குறிஞ்சி உள்ளே சென்ற குரலில், மூக்கை உறிஞ்சியப்படி… பல மணி நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் அதன் எல்லையை கடந்துவிட்டு இருந்தது…

அதில், “ஓ மை காட்…” என்ற ஈத்தன், “ஹே குறிஞ்சி! அழறியா… அழக்கூடாது… சாரி நான் கொஞ்ச ஹார்ஷா பேசிட்டேன்” என்றவன் குரல் பழையப்படி மென்மையாகிவிட… “பயந்துட்டயா?” என்று கேட்டான் கனிவாக…

அதற்கு “ம்…” என்றவள் மீண்டும் மூக்கினை போட்டு உறிஞ்ச…

“அழக்கூடான்னு சொன்னேன் இல்ல குறிஞ்சி உன்னை…” என்றான் ஈத்தன் மீண்டும் சற்று அழுத்தமாக…

அதற்கு, “நானும் அழக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன் சார்…”, என்று தேம்பியப்படியே கூறிய குறிஞ்சி, “ஆனா அழுகை வந்துட்டே இருக்கு… நிறுத்த முடியலை… என்ன பண்றது…” என்று அவனிடமே அவள் அதற்கு தீர்வு கேட்க…

என்ன சொல்வான் அவன்…

“நல்லா டீப்பா மூச்சை உள்ளே எடுத்து வெளியே விடு குறிஞ்சி…” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே…

“எல்லாம் ரெடி ஈத்தன்… ஸ்டார்ட் பண்ணலாம்…” என்ற குரல் அவன் பின்புறம் இருந்து கேட்டது…

அதில் அவசர அவசரமாக ஈத்தன், “நான் திரும்ப கூப்பிடறேன் குறிஞ்சி… பேசலாம்… இப்ப வொர்க் இருக்குமா… சாரி…” என்றவன்… “அழக்கூடாது…” என்றுவிட்டு வைத்துவிட…

அழுதுக்கொண்டே அறையை அடைந்து, மேனேஜரிடம் அவர் ஃபோனை கொடுத்திருந்தாள் குறிஞ்சி… 

அவர் அதை வாங்கிக்கொண்டு, டாக்டரை சென்று பார்க்க போவதாக கூறிவிட்டு வெளியேறிவிட…

அங்கு சுற்றி நடப்பது எதையும் உணராது நல்ல உறக்கத்தில் இருந்த சாந்தினியை பார்த்த குறிஞ்சிக்கு, மேலும் அழுகை கூடியது…

எத்தனையை தான் அவளே தனியாக சமாளிப்பது…
____________________________

நேரம் யாருக்கும் காத்திராமல், இரவு எட்டை கடந்துச்செல்ல…

மருத்துவமனையில் கொடுத்த உணவினை சாந்தினிக்கு ஊட்டிவிட்டு, அவருக்கான மருந்தைக் கொடுத்து தூங்கவைத்த குறிஞ்சி…

உடன் இருக்கும் அட்டன்டரான அவளுக்கும் அவர்கள் கொடுத்திருந்த உணவினை உண்டு முடித்துவிட்டு வந்து… அழுததில் வந்த கண்ணெரிச்சல் தாங்காமல் படுக்க…

சரியாக அந்நேரம் பார்த்து ஐஸ்வர்யா பிரபுவுடன் அங்கு வந்து சேர்ந்தாள்…

வந்தவள், “பூஜாக்கு நாளைக்கு மன்த்லி ஃபீஸ் கட்டனும்னு… உனக்கு தெரியாதா குறிஞ்சி… அப்படியே மறந்த மாதிரியே இருந்துக்கலாம்னு பார்க்கிறயா… என்ன ஜென்மமோ நீயெல்லாம்… வார்த்தையில் நாணயம் கொஞ்சம் கூட இல்லை…” என்று அவளை திட்டியவள்… “நாளைக்கு அங்க எங்கேயும், எங்க வீட்டுப் பக்கம் வந்துடாத” என்று வேறு கூற…

“ஐயோ அக்கா… சாமி சத்தியமா எனக்கு மறந்துப்போச்சு க்கா… நான் வேண்டும்னு எதுவும் பண்ணலை”, என்று குறிஞ்சி பதற…

சில நிமிடங்கள் அவளை கெஞ்ச வைத்த ஐஸ்வர்யா…

“சரி சரி… மாமா கூட போய், ஏடிஎம்-ல இருந்து பணம் எடுத்துட்டு வந்து கொடு…”, என்று அவளை விரட்டினாள்…

அதில், வேறுவழியின்றி பிரபுவுடன் கிளம்பிய குறிஞ்சி… அவர்களுக்கு மாதா மாதம் கொடுக்கும் எட்டாயிரம் ரூபாயை எடுத்து பிரபுவிடம் கொடுக்க…

அவளை அழைத்துக்கொண்டே, அங்கு அருகில் இருந்த பெரிய அசைவ உணவகத்திற்குள் நுழைந்த பிரபு… பரோட்டா, பிரியாணி, சிக்கின் வறுவல் என்று அனைத்திலும் ஒன்றை அவள் கொடுத்த பணத்தில் சோடா பாட்டிலுடன் சேர்த்து வாங்கிக்கொள்ள… மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்…

அங்கு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும், மாலில் இருந்த தியேட்டரில், இரவு 11 மணி ஷோவிற்கு, கணவனும் மனைவியும் படம் பார்க்க டிக்கெட் போட்டு இருந்தார்கள்…

பிரபுவும், குறிஞ்சியும் உள்ளே நுழைந்ததும், “பசியில் உயிர் போகுது மாமூ… வர இவ்ளோ நேரமா…” என்ற ஐஸ்வர்யா… 

அங்கு சாந்தினி இருந்த அறையில் போட்டிருந்த சிறிய மேஜையிலேயே, அனைத்து பார்சலையும் வைத்து பிரிக்க ஆரம்பித்துவிட்டாள்…

அதில் டாக்டர் யாரும் வந்து பார்த்தால் என்ன ஆகும், அதைவிட மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை இந்த வாசனைகள் வேறு தூண்டிவிடுமே… என்ற பயத்தில் குறிஞ்சி… அங்கிருந்த ரூம் ஸ்ப்ரேவை எடுத்துச்சென்று வெளியே முழுவதும் அடித்துவிட்டு… உள்ளே வர…

அவளிடம், இன்று என்ன ஆனது, என்று ஐஸ்வர்யா ஒருமுறை விசாரித்துவிட்டு…

“நல்லா வேண்டும் உங்களுக்கு எல்லாம்… அதுவும் இந்த பொம்பளைக்கு போயிட்டு ஈத்தன் சார் உதவி செய்யறார்னதும்… எனக்கு அவ்வளவு அதிர்ச்சி… கடவுளுக்கு கண்ணே இல்லைன்னு நினைச்சேன்… பரவாயில்லை கடவுள் இருக்கிறார்… இவ எல்லாம் பண்ண பாவத்துக்கு… இப்படி தான் வலியோட வாழ்ந்து, கொஞ்சம் கொஞ்சமா சாவனும்… சொந்த தங்கச்சி குடும்பத்தை கெடுக்க பார்த்த பாவி…” என்ற ஐஸ்வர்யா… அடுத்தடுத்து வீசிய சொல் அம்புகளின் தாக்கத்தில், குறிஞ்சியின் கண்கள் வழக்கம் போல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தன…

ஐஸ்வர்யா சொல்வது போல் தானே, தன் அன்னைக்கு அனைத்தும் நடக்கிறது… என்ற இயலாமையும்… இனி வரும் காலங்கள் தங்களுக்கு எவ்வாறு இருக்குமோ என்ற பயமும்… அவளை முழுவதுமாக துவண்டு போக செய்த நேரம் அது…

திடீரென்று, “டக் டக்” என்று இரண்டு முறை மெல்ல கதவு தட்டும் ஓசை… அதைத்தொடர்ந்து… “குறிஞ்சி, ஓப்பன் த டோர். இட்ஸ் ஈத்தன்.” என்ற குரல் மெல்ல கேட்க…

இங்கு குறிஞ்சிக்கு அவளுடைய இதயம் ஒருமுறை எகிறி குதித்து நிற்க…

அன்னிச்சையாக ஓடிச்சென்று கதவை திறந்துவிட்டாள்…

முதல் முறை அவள் ஈத்தனை பார்த்தப் பொழுது அவன் இருந்த அதே தோற்றம்… கண்களில் கூலர்ஸ்… முகத்தில் பாதியை மறைத்த மாஸ்க்… என்று சுத்தமாக தன் அடையாளத்தை மறைத்தப்படி நின்று இருந்தவன்…

“அம்மா என்ன பண்றாங்க குறிஞ்சி” என்று மெல்ல கேட்டான்…

“தூங்கறாங்க சார்… நீங்க இங்க…” என்று அவனை சுத்தமாக எதிர்பார்த்திராத அவள் ஏதோ கேட்க வர…

“உன்னை அழக்கூடாதுன்னு சொன்னேன் தானே… என்ன இது குறிஞ்சி…?” என்று கேட்டான், அவளின் கொவ்வைப்பழம் போல் சிவந்து கலங்கியிருந்த இரண்டு கண்களை பார்த்து…

அதில், “அது அ து…” என்றவளுக்கு அப்பொழுது தான் ஐஸ்வர்யா மற்றும் பிரபுவின் நினைவு வந்தது… அதில் அவள் திரும்பி உள்ளே பார்ப்பதற்குள்… “என் கூட வா கேர்ள்… உன்கிட்ட பேசனும்…” என்று அவள் கை பிடித்த ஈத்தன்…

“இங்க மேனேஜர் பார்த்துப்பார் வா…” என்று அப்படியே அவள் கை பிடித்து விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட…

அவன் வேகத்திற்கு இழுப்பட்டு நடந்த குறிஞ்சிக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை…

அவளை அதே லாபியில் இருந்த, ஒரு வெற்று அறைக்குள் அழைத்துச்சென்று விட்ட ஈத்தன்… 

கதவினை தாழ் போட்டுவிட்டு, தன் கூலர்ஸ் மற்றும் மாஸ்கினை எடுத்தப்படியே அவளருகே வந்தவன்…

அவளின் சிவந்த விழிகளை நெருக்கமாக பார்த்து…

“மேனேஜர் கிட்ட பணம் இல்லைன்னு சொன்னயாமே குறிஞ்சி… நான் தான் உன் அம்மா ட்ரீட்மெண்ட்-க்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னேனே… அப்புறம் என்னமா? என் வார்த்தை மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? அதுக்கு தான் அழுதுட்டு இருக்கயா” என்றுக்கேட்க…

“அச்சோ சார்… இது ரொம்ப பெரிய வார்த்தை… உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை… நான் உங்கக்கிட்ட கேட்டது பத்து லட்சம்… ஆனா இங்க ஆப்ரேஷனுக்கு அதை விட அதிகமா கேட்கிறாங்க… அதுமட்டுமில்ல சார் மேல ஒருவருஷத்துக்கு வச்சி இருக்கனும் வேற சொல்றாங்க… எல்லாம் சேர்த்து 75 லட்சம் கிட்ட கேட்கறாங்க… அதை தான் மேனேஜர் கிட்ட சொன்னேன் சார்… தயவு செய்து தப்பா எடுத்துக்காதிங்க…” என்று அவள் பதறி… படபடக்க…

அதற்கு, “சோ வாட் குறிஞ்சி…”, என்ற ஈத்தன், “இன்னும் மேல கூட செலவு ஆகட்டும்… நான் கட்டுறேன்… ஒரு உயிரை விட பணம் எனக்கு முக்கியமில்லை… இதைவிட அதிகமா நாங்க செய்திட்டு இருக்கோம்” என்றவன், “நாளைக்கு ஸ்டெம் செல்ஸ் கலெக்ட் பண்ண சொல்லிடு… டூ டேஸ்ல சர்ஜரிய முடிச்சிடலாம்… இதுவே டூ லேட்” என்றுக்கூறிக்கொண்டே போக…

அவனுடைய வேகத்தில் அதிர்ந்தவள், “இல்லைங்க சார்… ப்ளீஸ் இப்ப எதுவும் வேண்டாம்… நாளைக்கு நான் அம்மாக்கூட வீட்டுக்கு போறேன்… மன்னிச்சுடுங்க… உங்க நேரத்தை நிறைய வீணாக்கிட்டேன்” என்றாள்… தலைக்குனிந்து…

அவ்வளவு தூரம் போராடியவளின் இந்த முடிவு அவனுக்கு வியப்பளிக்க…

“ஏன் குறிஞ்சி… என்ன ஆச்சு… அம்மா வேண்டாமா உனக்கு” என்று அவன் கேட்க…

அதில் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள்…

“எனக்கு அம்மா வேண்டும் சார்… என் கூடவே எப்பவும் வேண்டும் சார்…” என்றவளின் கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க…

மூச்சினை உள்ளிழுத்து அதனை அடக்க பார்த்தவள், அது முடியாது, “ரொம்ப பயமா இருக்குங்க சார்…” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்…

அவன் பார்த்த நாள் முதற்கொண்டு இதே அழுகை தான்‌ அவளிடம்…

அதில் “காட்…” என்றவன்…

“அழாத கேர்ள்… சொல்றேன் இல்ல… இங்க பாரு அம்மாக்கு ஒன்னும் ஆகாது…” என்றவனுடைய பேச்சு அவளை எவ்விதத்திலும் சமாதானம் செய்யவில்லை… சிறிது நேரத்திற்கு முன்பு ஐஸ்வர்யா விட்ட சாபங்கள் தான் அவளின் மனதில் நின்று இருந்தன…

அதில், “ப்ச்… குறிஞ்சி” என்ற ஈத்தன்… ஷாலினால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்தவளின் கையினை பிடித்து ஒரே இழுப்பில், அருகே இழுத்து…

தன் மற்றொரு கரத்தினை அவளின் தோளை சுற்றி போட்டு… தன் மார்புடன் அவளை சேர்த்து அணைத்து பிடித்துக்கொண்டான்…

🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻