29.5 அந்திப்போர் 🪻😘📽️
குறிஞ்சிக்கு, மாதம் கூடக்கூட, குழந்தையின் அளவிற்கு ஏற்ப கர்ப்பப்பை விரிவடைந்துக்கொண்டே செல்வதில்… இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப்பை சுருங்கிவிட…கொஞ்சம் சாப்பிட்டாலே கழுத்துவரை உணவு இருப்பது போல் இருந்தது… அதில் அசதியாக இருந்தாலும்… சாப்பிட்டதும் உடனே படுக்க முடிவதில்லை… அதிலும் வீட்டிலும் ஒரு வேலையும் அவளுக்கு இல்லையே…. அதில் இரவு உணவிற்கு பிறகு கையுடன் மாடிக்கு ஈத்தனுடன் சென்றுவிடுவாள்… இன்றும் அவ்வாறே சென்று… நிலாவையும், நக்ஷத்திரங்களையும், தூரத்தில் தெரியும் கடற்கரையையும் பார்த்தப்படியே ஒரு அரைமணி நேரம் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டு இருக்க… ஈத்தன் அங்கிருந்த ரோஜா செடிகளில் இருந்த காய்ந்த இலைகளை அப்புறப்படுத்திக்கொண்டும்… ட்ரிம் செய்துக்கொண்டும் இருந்தான்… ஒருவழியாக குறிஞ்சி, அங்கிருந்த நீச்சல் குளத்திற்கு அருகே போட்டிருந்த சாய்வு நாற்காலியில்… நடந்தது போதும் என்று அப்படியே மூச்சுவாங்க ஓய்வாக அமர்ந்துவிட… “குறிஞ்சி மலருக்கு இந்த ஈத்தனோட கடைசி பரிசு…” என்று ஈத்தன் தன் பாக்கெட்டில் இருந்த கொலுகளை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்… குறிஞ்சி கேட்டது போலவே அதிக சலங்கை வைத...