22.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
கார்டினை வாங்கி பார்த்த ஐஸ்வர்யாவின் முகம்… சுவிட்ச் போட்டது போல்… அப்படியே பூத்துவிட்டது… “வாவ்… வாங்கிட்டயா… இதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடி… உன் அம்மா மாதிரி உனக்கும் கேடா என்ன…” என்றப்படியே ஈத்தனின் கையெழுத்தில் தன் இதழ்களை பதித்தவள்… “அச்சோ என்னால நம்பவே முடியலயே…” என்று ஈத்தனின் கையெழுத்தை வருடி பார்த்து… உடனே அதனுடன் செல்ஃபி ஒன்றை எடுத்து… காலேஜ் வாட்ஸ் அப் குருப்பில் அதனை ஷேர் செய்துவிட்டு… அனைத்து சோஷியல் மீடியாவிலும் உள்ள அவளின் கணக்குகளில் பதிவு செய்துக்கொண்டே வர… அதற்குள் அவளின் தோழிகள் மாறி மாறி அவளுக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டு இருந்தனர்… அது ஒரு தனி உலகம்… குறிஞ்சி அறியாத உலகம்… ‘ஒரு கையெழுத்தில் போயிட்டு என்ன தான் இருக்கோ… அட போங்கடா’ என்று நினைத்தவள்… அதற்காக சென்று… தான் வாங்கிய மண்டக படியை நினைத்தப்படியே சாந்தினியை சென்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்… என்ன தான் அவன் கண்டித்து அனுப்பி இருந்தும்… அவளின் கண்முன் ஈத்தனின் தூக்கிய கன்னத்து எலும்பு வந்து வந்து அவளை ஒருவழி செய்தது… முன்பும் ஈத்தன் ஒன்றும் பெரிதாக 6 பேக்… 8 பேக்… என்று எதுவும் வைத்துக்கொண்...