23.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
பிரபுவுடன் வீட்டிற்கு சென்று இறங்கிய குறிஞ்சி… வேறுவழியின்றி ஒவ்வொரு வேலையாக பார்க்க ஆரம்பித்தாள்…
இவளை இறக்கிவிட்டதும் சென்று கறியெடுத்து வந்து வைத்த பிரபு…
அத்துடன் தன் வேலை முடிந்ததென்று சென்று ஐஸ்வர்யாவின் அருகில் படுத்து விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
லோகேஸ்வரி தான் இன்னும் காலை காப்பி கூட குடிக்காததில் இங்கும் அங்கும் புலம்பியப்படி நடந்துக்கொண்டு இருந்தார்…
அந்தளவிற்கு பல வருடங்களாக சொகுசு கண்ட உடம்பு… ஒருவேலையும் செய்ய வளைவதில்லை…
குறிஞ்சியை பார்த்ததில் இருந்தே, “காலங்காத்தலயே என்னா மேக்அப்பு…” என்று பவுடர் கூட அடிக்காத அவளை பார்த்து கரித்துக்கொட்ட ஆரம்பித்துவிட்டு இருந்தார்…
குளிக்காத விடியாத மூஞ்சுக்கு… குளித்து சுத்தபத்தமாக இருக்கும் குறிஞ்சியின் முகம் பார்க்க அப்படி இருந்ததோ என்னவோ…
அமைதியாக காஃபியுடன் சேர்த்து… கடை மாவில் தோசை ஊற்றி எடுத்துவந்து அவருக்கு வைத்துவிட்டு நகர்ந்தவள்… மணி பதினொன்றை நெருங்கிவிட்டதில் விடுவிடுவென்று மதிய சமையலை பார்க்க ஆரம்பித்தாள்…
சிறிது நேரத்தில் சித்தி என்றப்படி அவளை பார்த்ததும் பூஜா சமையல் அறைக்குள் ஓடி வர…
“எப்படி பாப்பா இருக்க…” என்று அவளை அணைத்துக்கொண்ட குறிஞ்சி… சட்டென்று அவளை தன்னிடம் இருந்து பிரித்து… அவளை திருப்பி பார்த்து…
“அச்சோ பூஜா பாப்பா… என்ன இது… முடிய காணோம்…” என்று குறிஞ்சி பூஜாவின் கழுத்திற்கு மேல் வரை… ஒட்ட வெட்டிவிடப்பட்ட முடியை தடவிப்பார்த்து அதிர்ந்து விசாரிக்க…
“எல்லாம் உன்னால தான் சித்தி… நீ பாட்டுக்கும் பெரிய ஆயா கூட போயிட்ட… எனக்கு யாரு தலை சீவிவிடுவாங்க… அம்மாக்கிட்ட கேட்டதும் அம்மா பிடிச்சு வெட்டிவிட்டுடுச்சு… கிளாஸ்ல எல்லாரும் என்னை ஆம்பள பையன் வரான்… ஆம்பள பையன் போறான்னு கிண்டல் பண்றாங்க… தெரியுமா…”, என்றாள் கோபம் கலந்த அழுகையுடன்…
அதில், “அச்சோ பாப்பா… மிஸ் கிட்ட நீ இதை சொல்ல வேண்டியது தானே… நான் லெட்டர் எழுதி தரேன்… மிஸ் கிட்ட கொடு…” என்றவள்… அவளை சமாதானம் செய்துக்கொண்டே…
அடுப்பு வேலைகளை முடித்துவிட்டு…
பூஜாவை உட்கார வைத்து… கை, கால்களில் எல்லாம் நகத்தை ஒழுங்காக வெட்டிவிட்டு… நன்றாக குளிக்க வைத்து… சாப்பாடை போட்டு ஊட்டி விட ஆரம்பிக்க…
பிரியாணியின் வாசம் பிடித்தப்படியே பிரபுவும்… ஐஸ்வர்யாவும் வெளிவந்தனர்…
பிரபு சென்று அவர்கள் இருவருக்கும் தட்டில் உணவினை போட்டு எடுத்து வர… ஐஸ்வர்யா டீவியினை போட்டுவிட்டு ஹாலில் அமர்ந்துக்கொண்டாள்…
“சாப்பிட்ட பிறகு… மேட்னி ஷோ போலாமா ஐஷுமா… பசங்க கிட்ட டிக்கெட் வாங்க சொல்றேன்” என்றப்படியே பிரபு தட்டினை ஐஸ்வர்யாவிடம் தர…
“இல்லை வேண்டாம் மாமூ… இன்னைக்கு மதியம் விஜய் டீவில ஈத்தன் சாரோட நேற்றைய நியூயார்க் கன்சர்ட்ட முழுசா போடுறாங்க… பார்த்துட்டு ஈவ்னிங் பீச் போகலாம்…” என்றவளின் பேச்சில் சட்டென்று குறிஞ்சியின் கவனம் முழுதாக பதிந்தது…
சென்ற வாராமே இணையத்தில் இசை விழா பற்றிய செய்திகளை பார்த்து இருந்தாள்…
சார் வேலை பிசியில் இருப்பார் இல்ல என்று நினைத்தும் கொண்டு இருந்தாள்…
அதனை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்வது அவளுக்கு புதிய செய்தி…
இசைவிழா எப்படி இருக்கும் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது… அதில் ஆர்வமும் இல்லை…
ஈத்தனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மிகுதியாக…
பூஜாவிற்கு உணவினை ஊட்டி முடித்தவள்… வெளிவேலைகளை அடித்துத்தள்ளி வேகவேகமாக முடித்துக்கொண்டு உள்ளே நுழையவும்… இசைவெளியீட்டு விழா ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது…
லோகேஸ்வரி உண்ட மயக்கத்தில் மதிய தூக்கத்தை போட சென்றுவிட்டிருக்க… பூஜாவும் தலைக்கு குளித்த அசதியில் அவருடனே படுத்துவிட்டு இருந்தாள்… குறிஞ்சி என்ன செய்கின்றாள் என்று பார்க்க யாரும் அங்கு இல்லை…
பூஜாவின் ட்ராயிங் புக்குடன் ஓடிச்சென்று வெளிவாசலில் வெளிச்சமான இடத்தில் அமர்ந்துக்கொண்டாள் குறிஞ்சி… அங்கிருந்து பார்த்தால் டீவி நன்றாக தெரியும்… அதேநேரம் அவள் பார்ப்பதும் உள்ளிருப்பவர்களுக்கு தெரியாது…
ஆர்வமாக அவள் டீவியை பார்த்துக்கொண்டு இருக்க… அதில் முதலில் வந்த தொகுப்பாளினி பெண்ணும்… ஆணும்… சேர்ந்து பேசப்பேச…
குறிஞ்சிக்கு தலையை சுற்றி ஏதோ தேனீக்கள் பறப்பது போல் இருந்தது… ஒரு மண்ணும் புரியவில்லை…
“இங்லீஷ் தான் பேசுறாங்களா இவுங்க… ஒருவார்த்தை கூட தெளிவா காதில் விழ மாட்டுதே… அச்சோ கடவுளே என்ன சோதனை இது… ஈத்தன் சாரோட ப்ரோக்ராம் தானா இது…” என்று அவள் மண்டையை பிய்த்துக்கொள்ள…
நல்லவேளையாக அடுத்து அதை அப்படியே ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் தமிழில் விளக்கியது…
இன்டர் நேஷனல் பாடகரான நம் ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபருடன்… கொரியன் பாடகியான ஃபேமஸ் ஐயூ மற்றும் அமெரிக்க இளம் பாடகியான பில்லியும் லைவ்வில் பாட இருப்பதாக கூறியவர்கள்…
வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று…. ஸ்பான்சர்களின் பெயர் பட்டியலை வாசித்து முடித்திருந்தனர்….
அந்நிகழ்ச்சிக்கு என்று ஸ்பான்சர்கள் தந்திருந்த பணத்துடன், ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்க கொடுத்திருந்த பணத்தினை சேர்த்து அனைத்தையும்… அமெரிக்கா, கொரியா மற்றும் இந்தியாவிற்கு என்று பிரித்து… ஆட்டிஸம் போன்ற விசேஷ தேவையிருக்கும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கும், பயிற்சிகளுக்கும்… மூவரும் கொடுக்க இருப்பதாக கூற…
குறிஞ்சியின் மனம் நெகிழ்ந்து போனது…
ஈத்தன் போலவே மேலும் இரண்டு நல்ல உள்ளம் படைத்தவர்கள் உள்ளார்களா என்று அவர்களையும் பார்க்கும் ஆவல் அவளுக்கு…
அதில் மேலும் ஆர்வமாக அவள் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டு இருக்க…
நியூயார்க் ட்ரெண்டின் படி… சிறிதாக ஷார்ட்ஸ் போட்டு… அதன் மேலே அவளை விட இரண்டு மூன்று அளவுக்கூடிய நீளமான பெரிய டீஷர்ட் லூசாக அணிந்து… பல நிறங்கள் பூசப்பட்ட இரட்டை சடையுடன்… இரண்டு காலிலும் வெவ்வேறு ஷூ அணிந்து…
அங்கு மேடையில் படிக்கட்டு போல் இருந்த அமைப்பில்… தெருவில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்து… சாதாரணமாக பாடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பார்த்து குறிஞ்சி அதிர்ந்துப்போனாள்…
அதைவிட அவளுக்காக அந்த கூட்டம் செய்யும் அலப்பறைகள்… அவள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்ட…
ஒன்றும் புரியவில்லை என்றாலும் பார்த்துக்கொண்டே இருந்தாள் குறிஞ்சி… இதேப்போன்ற உடையுடன் தான் ஈத்தனும் வருவானா என்ற நினைப்பு வேறு…
அப்பொழுது அப்பெண் மெல்லிய குரலில் பாடிக்கொண்டு இருக்கும் போதே… அங்கு அதிரடியாக வந்த அடுத்த பாடகி… அவளுடன் சேர்ந்து அப்பாடலை பாடியப்படியே… சட்டென்று தன் ஸ்ருதியினை ஏற்ற…
இருவரும் சேர்ந்து மேடைமுழுக்க நடந்தப்படியே பாட ஆரம்பித்தார்கள்… பின்புறம் அவர்களின் பாடலுக்கு ஏற்ப நடன குழுவும் வந்து இணைந்திருந்தது…
நாடி நரம்பெல்லாம் அவர்கள் போடும் இசையில் குத்தாட்டம் போட்டப்படி இருக்க… மெல்ல தங்களின் ஸ்ருதியினை குறைத்துக்கொண்டே வந்தார்கள்…
அப்பொழுது தான் குறிஞ்சி அதிலிருந்த முதலாவதாக பாடிய பெண் காணாமல் போனதை கவனித்து இருந்தாள்…
மெல்ல மேடை முழுவதும் இருட்டாக பட… அக்கொரியன் பெண்ணின் குரலும் மெல்ல தேய்ந்து மறைந்துப்போக…
முதலில் பார்த்தா பெண்ணா இவள்… என்று வியக்கும் வகையில்… தரை வரை புரளும் நீண்ட வெண்ணிற கையில்லாத கவுனில் தேவதைப்போல் வந்த முதலாவதாக பாடிய பெண்…
Come to me, oh lover boy,
No flower untouched by the breeze exists.
Why didn’t I feel this love before?
Tell me, heart, what’s knocking at my door.
என்று உயிரை உருக்கும் குரலில் பாடியப்படி வர…
அவளுக்கு இந்தப் புறம் இருந்து…
மேலே சிறு சுருக்கம் இல்லாத ஸ்லிம் ஃபிட் வெண்ணிற ஷர்ட், கீழே கறுப்பு நிற பேண்ட், கழுத்தில் மெலிதான கறுப்பு நிற டை, காலில் பளபளக்கும் கறுப்புநிற ஷூ, இடது பக்க மார்பில் சிவப்பு நிற ரோஜா பூ என்று… படு ராயலான தோற்றத்தில்…
வாராயோ வாராயோ
மோனலிஸா
பேசாமல் பேசுதே
கண்கள் லேசா
நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்று படியே வந்த ஈத்தன்… அப்பெண்ணின் கைப்பற்றி தன்னை நோக்கி இழுக்க…
I am like Marilyn Monroe’s bloom,
A flower nestled in your hand’s hold.
Our love is sweet as honey’s gold,
Sweeter than anything the world could mold.
என்று பாடியப்படியே அந்த அப்பெண்… ஈத்தனின் அணைப்புக்குள் செல்ல…
குறிஞ்சியின் கண்கள் இரண்டும் மேலும் மேலும் விரிந்து பெரிதாகி இருந்தது…
அதை மேலும் அதிகரிக்கும் வகையில்…
பூவே பூவே
நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
என்று பாடிய ஈத்தன் அப்பெண்ணை அப்படியே தன்னிரு கரங்களில் ஏந்திக்கொள்ள…
It’s the spirit of love so divine,
Morning and evening, forever mine.
என்று பாடிய அப்பெண் ஈத்தனின் கழுத்தை வளைத்து பிடிக்க…
உன் சிலையழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சிண்ட்ரெல்லா
என்று பாடிய ஈத்தன்… அவளை கைகளில் ஏந்தியப்படியே காற்றில் மிதக்க ஆரம்பித்து இருந்தான்…
குறிஞ்சி முதல் தடவை பார்த்த அதே இளவரசன்… இன்று இளவரசியுடன்… இருப்பது போல் இருந்தது… அதனை பார்க்க…
அவ்வளவு நேர்த்தி…
மீண்டும் தரையிறங்கியவர்கள்… இருவரும் சேர்ந்து ஜோடியாக நடனம் ஆடியப்படியே பாட… குறிஞ்சியின் கண்கள் இரண்டும் ஈத்தனிடம் மட்டுமே இப்பொழுது…
முன்பைவிடவும் அதிகளவில் உடல் இளைத்து அவன் காணப்பட்டாலும்…
அதனை மறைக்கும் வகையில்… அவ்வளவு அழகாக அவனின் மென் குரலால் வசீகரித்தப்படியே… சிரித்துக்கொண்டிருந்தான்…
அதிலும்… அவனின் ஒவ்வொரு உடல் அசைவுகளும் அவ்வளவு அழகாக இருந்தது…
அப்பெண்ணை தீண்டும் ஸ்பரிசங்களும் கூட… சிறு விரசமும் இல்லாது… பூவை தீண்டும் தென்றல் போல் ரசிக்கும் விதத்தில் இருக்க…
குறிஞ்சியின் முகம் முழுவதும் மலர்ந்து காணப்பட்டது…
“கடவுளே… இதேப்போல சமர் சார் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும்… இந்தப்பிள்ளை கூட எவ்ளோ அழகா டால் மாதிரி இருக்கு… இவங்களும் நல்லா இருக்கனும்…” என்று நினைத்தப்படியே குறிஞ்சி அமர்ந்திருக்க…
உள்ளே சென்றிருந்த மற்றொரு பாடகி பெண்ணும் வந்து இவர்களுடன் சேர்ந்துக்கொள்ள… மூவரும் சேர்ந்து ஆங்கில பாடலை பாட ஆரம்பித்தார்கள்…
சாந்தினியின் உடல் முன்னேற்றத்தை நினைத்துக்கூட முழு நிம்மதி அடைய முடியாமல்… இறுதியாக பார்த்திருந்த ஈத்தனின் சோர்ந்த தோற்றம் குறிஞ்சியினை அப்படி கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்க…
அவனின் இன்றைய இடைவிடாத சிரித்துக்கொண்டே இருக்கும் இதழ்கள்… குறிஞ்சிக்கு அப்படியொரு பெரும் நிறைவை கொடுத்திருந்தது…
இதுபோதும் என்று நினைத்தவள்… வேகமாக கலர் அடித்து முடித்துவிட்டு… சென்று மலையென குவிந்திருந்த உடைகளை அள்ளிவந்து… அதில் அயர்ன் செய்ய வேண்டியவற்றை… செய்ய ஆரம்பித்தாள்…
வேலையில் கண்ணையும்… காதினை தொலைக்காட்சியிலும் குறிஞ்சி வைத்திருக்க…
இதை எதையும் அறியாத ஐஸ்வர்யாவோ வீட்டையே யாரும் கொளுத்திவிட்டு சென்றால் கூட தெரியாத அளவிற்கு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் சென்றுவிட்டிருந்தாள்… அவள் மடியில் படுத்தப்படியே பிரபும் தன் கையில் இருந்த ஃபோனில் பிசியாகிவிட்டு இருந்தான்…
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக