24.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
எறும்பு ஊற ஊற… கல்லும் மெல்ல கரைய தொடங்கியதின் அறிகுறியாக…
சில வினாடிகளில் நிமிர்ந்தவன்…
“ஓகே கேர்ள்… நான் US சர்ரகசி ஏஜெண்ட்ஸ்(surrogacy Agents) கிட்ட பேசுறேன்… அங்க லீகல் தான்… நான் அங்க எனக்கு பேபி பெத்துக்கறேன்… I really appreciate your kindness and concern. Thank you.” என்றான்…
அவனின் இந்த பதிலில் பளிச்சென்று முகம் மலர்ந்தவளுடன் சேர்ந்து… அவளுடைய கண்களும் சிரிக்க…
ஈத்தனின் கண்களில் மெல்ல அவன் தொலைத்த உயிர்ப்பு ஏற தொடங்கியது…
அதைப்பார்த்தப்படியே… “ஏன் சார் அங்க எல்லாம்… நான் தான் இங்க பெத்து தரேன்னு சொல்றேன் இல்ல… அதுவும் நீங்க தமிழ் பொண்ணு தானே கேட்டீங்க…” என்றவள்…
தொடர்ந்து, “எனக்கு இந்த ஜீவனை கொடுத்த… என் அம்மாவை… எனக்கு காப்பாத்தி கொடுத்தவங்க சார் நீங்க… உங்களுக்கு அது சின்னதா தெரியலாம்… ஆனா எனக்கு அது ரொம்ப பெருசு… என் அம்மாவோட வலியில்லாத இன்றைய வாழ்க்கைக்கு காரணம் நீங்க தான்… என்னோட கடமையை நீங்க செய்து கொடுத்திருக்கீங்க…”, என்றவள்…
“உங்களுக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சின்ன உபகாரம்…” என்றவளுக்கு அன்று தெரியவில்லை… குழந்தை உபகாரம் இல்லை… அவளின் சதை… ரத்தம்… உயிர்… எல்லாம் கொண்ட அவளின் ஜீவன் என்று…
“ப்ளீஸ் சார்… எனக்கு அந்த வாய்ப்பை தாங்க சார்… அதுவும் நீங்க கேட்ட மாதிரி அங்க இருக்கிறவங்க இருப்பாங்கன்னு எப்படி உங்களால் கண்டு பிடிக்க முடியும்…” என்றாள் குறிஞ்சி…
அதில் தன் புருவங்களை சுருக்கிய ஈத்தன், “ரூல்ஸ் பிரேக் பண்றது எல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை கேர்ள். அது தப்பும் கூட…” என்றான்…
அதற்கு குறிஞ்சியோ, “அதெல்லாம் ஒன்னும் தப்பில்லைங்க சார்… சட்ட திட்டம் எல்லாம் மக்களை பாதுகாக்க தான்… அதுவும் அங்க அமெரிக்கால சரின்னு அனுமதிக்கும் விஷயம்… இங்க மட்டும் எப்படி தப்பாகும்… என் அப்பா மாதிரி யாரும் இருந்துட போறாங்கன்னு பயந்து தான் இப்படி சட்டம் போட்டு இருப்பாங்களா இருக்கும்… நீங்க தான் அப்படி கிடையாதே…” என்றாள் நம்பிக்கையாக…
அவள் சொன்னதை எல்லாம் யோசித்துக்கொண்டே வந்த ஈத்தன், நடப்பதை உணர்ந்து, “ஓ மை காட்… நீ என்னை ரொம்ப பிரைன் வாஷ் பண்ற… ஏன்னு தெரியலை நானும் அதை அனுமதிக்கறேன்…” என்றான் அதிர்வுடன்…
அதற்கு, “ஏன்னா நான் சொல்ற விஷயம் உங்களுக்கு பிடிச்சு இருக்கு… அதில் எந்த தப்பும் இல்லைன்னும் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு…” என்று பதில் தந்த குறிஞ்சி…
குழந்தைக்கு அம்மா ஆயிரம் கதை சொல்லி சோறு ஊட்டுவது போல்… எண்ணிலடங்கா கதைகளை கூறி, அவனை தன் வசப்படுத்தியவள்….
அதை தொடர்ந்து அவன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கு எல்லாம்… வண்டி வண்டியாக பொய் கூறவும் ஆரம்பித்து இருந்தாள்…
“எனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து… வீட்டோட தட்டு மாத்தி நிச்சயம் பண்ணிட்டாங்க சார்… அம்மாக்கு சரியானதும் என் கல்யாணம் தான்…”
“கண்டிப்பா சார்… எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க… நல்ல விஷயத்துக்கு யார் சார் தடங்கல் சொல்லுவாங்க…”
“சரிங்க சார்… நான் நாளைக்கே என் அக்கா மாமாவை கூட்டிட்டு வரேன்… நீங்க பேசிட்டே முடிவு பண்ணுங்க…”
என்றெல்லாம் வரிசையாக… என்ன தைரியத்தில் புளுகினாள் என்று தெரியாது…
அதைத்தொடர்ந்து அடுத்து ஈத்தன் கேட்டதில் திணறிப்போனவள்…
போட்ட வேஷத்தை கலைக்க முடியாது…
“ஐயோ சார்… அவர் ரொம்ப நல்லவர்… எதுவும் பிரச்சனை எல்லாம் பண்ண மாட்டார் சார்… உங்களை பத்தி ஏற்கனவே நான் நிறைய சொல்லி இருக்கேன் சார்… அவரால் முடியாத ஹெல்ப்பை நீங்க செய்ததில் உங்க மேல நிறைய மதிப்பு சார் அவருக்கு…” என்றவள்…
“எங்க ஏரியா தான் சார்… மெக்கானிக் ஷாப்ல வேலையில் இருக்காரு சார்…”
என்று இல்லாத அவரை குறித்து பெருமை பேசியவள்…
எங்கிருந்து கற்றாளோ தெரியாது… சலிக்காமல் பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டே போனாள்…
பிரதிபலன் எதிர்பாராது அன்பை மட்டும் விதைத்துக்கொண்டே வந்த ஈத்தன்… அதே அன்பை அறுவடை செய்யும் காலம் வந்திருந்தது…
என்றோ ஈத்தனையும், குறிஞ்சியையும், கணித்துவிட்டிருந்த திருவள்ளுவர், அன்புடைமை என்னும் அதிகாரத்தை அவர்களுக்காகவே படைத்து…
அதில்…
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்று எழுதி வைத்துவிட்டு சென்று இருந்தார்.
அன்பில்லாதவர் தான் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்.
அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.
அதன்படி, ஈத்தன் தன் செல்வத்தை பகிர, அதுயில்லாத குறிஞ்சி இங்கு தன்னையே அவனுக்கு அற்பணிக்க துணிந்துவிட்டு இருந்தாள்.
________________________________
❤️அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
அற்புதம் 🥰🥰🥰
பதிலளிநீக்குVery nice update 💐💐💐💐
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குகதை ரொம்ப அருமையா இருக்கு.குறுஞ்சியின் அன்பு பிரமிக்க வைக்குது.
பதிலளிநீக்குதன்னலம் பார்க்காத ரெண்டு உன்னத ஜீவன்கள்.. அருமை
பதிலளிநீக்குGood story. Real ah nadatha mathiri feel aaguthu. Melted...
பதிலளிநீக்குPpaahh writer sema ponga.. samar paiyan ithukulam ok solra alavuku nama kurinji anda pulugu pulugitu iruka. Epdiyo nalla iruntha sari. Nejama Nan unga story ah real life la nadantha visayama paka arambichuten. Samar and kurinji ya nerla pakanum nu lam feel aguthu ipo post pana epis ah padika padika. Thank u for this wonderful story
பதிலளிநீக்குExcellent 😍
பதிலளிநீக்குKurimji evlo poi solra pavam ethan um ellam unmai nu nambi kuzhandai ku ok solla porano
பதிலளிநீக்குVery interesting
பதிலளிநீக்குபிரமாதம்
பதிலளிநீக்குஈத்தன் குறிஞ்சி சான்சே
இல்லை
சுவாதிநீங்க வேறவேற லெவல் சூப்பரோசூப்பர்
Very nice
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குNice n wonderful mam
பதிலளிநீக்குInteresting to read with expectations.
பதிலளிநீக்குWhat's next....
Very nice, no words to say about Kurinji & Eathan
பதிலளிநீக்குSuper damaka we enjoyed ur damaka sister very superb eppis...kurunji ku ivlo boldness enga vanthathu ethan ta nalla pesarale🥰🥰
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குRomba romba super sis, 💓 wow my eyes not move other side till reading
பதிலளிநீக்குEppavum pola arumai sago
பதிலளிநீக்குSuper sis, next ud appo ,iam waiting
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குemotionally addicted
பதிலளிநீக்குVery nice
பதிலளிநீக்குSuper 😍 very interesting 👍
பதிலளிநீக்குhttps://www.youtube.com/shorts/_6iMpYRczO8?feature=share
பதிலளிநீக்குLove u Swathi ma’am, what a wonderful writer u r .
பதிலளிநீக்கு