27.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘

திருமண பதிவுகளையும் அன்றே முடித்துவிட்டு…

ஏற்கனவே தகுந்த பாதுகாப்புகளுடன் ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி வீட்டிற்கு குறிஞ்சியுடன் அன்றே ஈத்தன் வந்துவிட்டு இருந்தான்…

வாழ்வில் முதல்முறை மற்றவரின் வீட்டில் தங்கப்போவதிலும், அன்னையை முதல்முறை பிரிந்து வந்ததிலும், செய்யப்போகும் பெரிய காரியத்திலும், கூறிய ஏகப்பட்ட பொய்களை நினைத்தும், குறிஞ்சியின் மனதினுள் வெவ்வேறான அலைகள் மாறி மாறி அடிக்க…

அவளின் முகத்தில் அலங்காரத்தினை தாண்டி தெரிந்த சோர்விலும், கலக்கத்திலும் பதறி அவளிடம் வந்த ஈத்தன்…

“என்ன ஆச்சு குறிஞ்சி… முகம் ஏன் டல்லாகிடுச்சு… பிடிக்கலையா மா…?” என்று தொடர்ந்து கேட்க…

அவனின் முகம் பார்த்த குறிஞ்சி, ‘ஹையோ… ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவருக்கு, நல்லது செய்கிறோம் என்ற பெயரில், நாம் இன்னும் அழுத்தத்தை கொடுக்கின்றோமே…’ என்று உடனடியாக தன் முகத்தை மாற்றிக்கொண்டவள்…

“அச்சோ சார்… எனக்கு ஒன்னுமில்லை… இந்த நகையெல்லாம் தான் ரொம்ப ரொம்ப வெயிட்டா இருக்குங்க சார்… கழுத்தையே அசைக்க முடியலை… அதான்” என்று கூற…

அதில், “ஊப்ஸ்…” என்று நிம்மதி மூச்சினை விட்ட ஈத்தன்…

“இந்த ரூம் உன்னோடது குறிஞ்சி, சீக்கிரம் இதையெல்லாம் ரிமூவ் பண்ணிடு…”, என்று அவளின் அறையில் விட்டவன்…

“எப்படியும் எனக்காகன்னு நீ எல்லாத்துக்கும் ஓகே சொன்னாலும்… நிச்சயம் இந்த கல்யாண விஷயம் உன்னை நிறைய டிஸ்டர்ப் செய்திருக்குமில்ல குறிஞ்சி… வெரி சாரி…”, என்ற ஈத்தன்…

அவள் மறுத்து பேச வருவதை… அவளின் கன்னத்தில் லேசாக தட்டி நிறுத்தியவன்…

“அண்ட் ஒன் சர்ப்ரைஸ்… நான் இரண்டு முடுச்சு தான் தாலி கயிற்றில் போட்டு இருக்கேன்… மூன்றாவது முடிச்சை நான் போடலை… சோ நடந்தது கல்யாணத்தில் சேர்த்தி இல்லை… நீ ஃபீல் பண்ணாத கேர்ள்…”, என்றுவிட்டு அவன் செல்ல…

விடுவிடுவென்று அறைக்குள் வந்து கதவை அடைத்த குறிஞ்சி, கழுத்தில் இருந்த தாலி கயிற்றை திருப்பி பார்த்தாள்…

ஈத்தன் சொன்னது போல் இரண்டு முடிச்சுகள் தான் அதில் இருந்தது…

அதை பார்த்த குறிஞ்சிக்கு, ஈத்தன் எந்தளவிற்கு தன்னுடன் அவனுக்கு எந்த பந்தமும், அவனுடன் தனக்கு எந்த பந்தமும், உணர்வுகள் ரீதியாக ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கின்றான் என்பது புரிய…

“பயப்படாதிங்க சார்… உங்களுக்கு ஒரு குழந்தையை பெத்துக்கொடுத்துட்டு நான் உங்க கண்காணாத இடத்துக்கு அம்மாக்கூட போயிடுவேன்… நிச்சயம் திரும்ப வந்து பிரச்சனை எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்… என்னோட உயிரான என் அம்மாவை எனக்கு மீட்டு கொடுத்தவங்க நீங்க… என்னை பார்த்து பயப்படாதிங்க சார்…” என்று மனதினுள் அவனிடம் கூறியவள்… “கடவுளே எல்லாத்தையும் நல்லப்படியா கூட இருந்து முடிச்சு கொடுங்க…” என்ற வேண்டுதலுடன்…

ஒவ்வொரு அணிகலன்களாக, ஈத்தன் கூறியது போலவே கழட்டி வைக்க ஆரம்பித்தவள்… தன் விரலில் ஈத்தன் அணிவித்து விட்ட மோதிரத்தை கூட கழட்டி வைத்துவிட்டு இருந்தாள்…

தாலி கயிறு மட்டுமே பாக்கி…

அதையும் கழட்ட அவள் போக‌… 

எங்கிருந்தோ ஒரு சில நினைவுகள் அவளின் கண்முன் வந்து சென்றது… அதில் லோகேஸ்வரி எப்பொழுதும் அவளை பார்த்து கூறும், “உன் அம்மா கழுத்தில் தாலியில்லாம உன்னை முறை தவறி பெத்துவிட்டிருக்கா… நீ என்னன்னா நெஞ்சை நிமிர்த்திட்டு நடந்து வர… நடந்து போற… நானா இருந்தா கூனி குறுகியே செத்து போயிட்டு இருப்பேன்… ஒழுங்கா குனிஞ்சு நடடி” என்பதெல்லாம் நினைவிற்கு வரிசையாக வர…

குறிஞ்சியின் கைகளில் மெல்லிய நடுக்கம்…

பட்டென்று தன் கைகளை விலக்கிக்கொண்டவள்…

வயிற்றினை சென்று தொட்டுக்கொண்டிருந்த மாங்கல்யத்தை குனிந்து பார்த்தாள்…

அப்பொழுது தான் அதிலிருந்த வேலும் மயிலும் அவளின் கண்களில் விழ…

அன்னிச்சையாக அதனை தொட்டு வணங்கியவள்…

‘குழந்தை பிறந்தப்பிறகு தாலியை கழட்டலாம்’ என்ற முடிவுடன்… புடவையையும் கழட்டி வைத்துவிட்டு… தான் கொண்டுவந்திருந்த பையில் இருந்து தன் சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டு…

அனைத்தையும், ஈத்தனிடம் அவன் வைத்துக்கொடுத்த பெட்டியிலேயே வைத்து திருப்பிக்கொடுத்துவிட்டாள்…

குறிஞ்சிக்கு என்று வாங்கிய நகை, புடவையெல்லாம் வைத்து நான் என்ன செய்வது, என்று ஈத்தன் நினைத்தாலும், நாளை இந்த பொருட்கள் எல்லாம் அவளுக்கு தேவையில்லாமல் இந்த திருமணத்தை ஞாபகப்படுத்த போகிறது என்ற எண்ணத்தில் அமைதியாக வாங்கிக்கொண்டவன் கண்கள்… அவளின் விரலையும், கழுத்தையும் ஆராய்ந்தபடியே… “கூல் குறிஞ்சி… தாலி… ரிங் எல்லாம் ரிமூவ் பண்ணிட்ட… இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு…”, என்றப்படியே… அவனின் விரலில் இருந்த மோதிரத்தையும் கழட்டி எடுத்துக்கொண்டு, பெட்டியை திறந்தவன்… அதில் மேலே அவள் அணிந்த புடவை இருப்பதை பார்த்து… அதை தொடாமல்… பக்கவாட்டில் இருந்த சிறிய ஜிப்பில் மோதிரத்தை போட்டு மூடி… பெட்டியை நம்பர் லாக் போட்டு பூட்டியவன்… அத்துடன் அதை தூக்கி உள்ளே வைத்துவிட்டு இருந்தான்…

பாவம் அன்றைய ஈத்தனுக்கு தெரிந்திருக்கவில்லை… குறிஞ்சியின் நேசம் அவன் போடாமல் விட்ட அந்த மூன்றாம் முடிச்சில் இல்லை என்று… 

அதேப்போல் குறிஞ்சிக்கும் தெரிந்திருக்கவில்லை… ஈத்தனுக்கு தான் செய்வதற்கு பெயர் நன்றி கடன் இல்லை என்று...

ஆனால் இன்று, இருவருக்குமே அன்று தெரியாமல் இருந்தது எல்லாம் நன்கு தெரிந்துவிட்டு இருந்தது…

புகைப்படங்களை எல்லாம் பார்த்தவண்ணம் அறைக்குள் நடந்த ஈத்தன்… அங்கிருந்த ஒரு செல்ஃபில் இருந்த சிறிய கைக்கடிகார பெட்டியை பார்த்து தன் கண்களை சுருக்கியவன்… அடுத்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் பார்த்து தன் வாயில் கை வைக்காத குறை தான்…

“காட்… கல்ப்ரிட் குறிஞ்சி…” என்றவன் இதழ்கள்… கோபம் கொள்வதற்கு மாறாக புன்னகையுடன் சிரித்துக்கொண்டிருந்தன…

அது அவனுடைய கைக்கடிகாரப்பெட்டி…‌ 

அவளுக்கு அவன் தான் ஒருசமயம் நேரம் பார்க்க என்று பெட்டியுடன் சேர்த்தே கைக்கடிகாரத்தை கொடுத்து இருந்தான்…

அதன்பிறகு கடிகாரத்தை திருப்பி கொடுத்துவிட்டு இருந்தவள்… பெட்டியினை மட்டும் எங்கோ தொலைத்துவிட்டேன்… என்று கூறிவிட்டு இருந்தாள்…

பல அடுக்குமாடி வீடே… அப்பெட்டி மீது இடிந்து விழுந்தாலும் அப்பெட்டிக்கும்… அப்பெட்டிக்குள் இருக்கும் பொருளுக்கும் ஒன்றும் ஆகாது…

அந்த அளவிற்கு இரும்பு கொண்டு உறுதியாக, நவீன அறிவியலை புகுத்தி செய்யப்பட்டிருந்த பெட்டி அது…. ஈத்தனின் சில கோடிகளை விழுங்கிய கைக்கடிகாரத்தினுடையது…

அப்படி என்ன அதில் வைத்திருக்கின்றாள்‌ என்ற எண்ணத்தில்… அதை கையினில் எடுத்துவிட்ட ஈத்தன் ஆர்வம் தாங்காமல் திறந்து பார்க்க…

அதன் உள்ளோ…

அவன் சற்றும் எதிர்பாராத பொருள் ஒன்று இருந்தது…

பிரக்னன்சி கிட் அது…

பல வருடங்கள் கழித்தும்…

"Congrats Dada and Momma. You guys are pregnant.” என்ற செய்தியினை தாங்கிக்கொண்டு இருந்தது…

தன் நெஞ்சுடன் சேர்த்து அதனை அணைத்துக்கொண்ட ஈத்தனின் கண்களை மெல்லிய நீர்படலம் சூழ பார்க்க… கண்களை சிமிட்டி அதை அடக்கியவனுக்குள்… அவனை மீறி குறிஞ்சியின் உணர்வுகள் மெல்ல இறங்க ஆரம்பித்துவிட்டு இருந்தது…

அன்று,

ஈத்தனை தனியறைக்கு அழைத்துச்சென்றிருந்த மருத்துவர், அவன் என்ன செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட, அவ்வறையில் இருந்த கழிவறைக்குள் சென்று கதவினை அடைத்த ஈத்தனால் அக்கணங்களின் சங்கடத்தினை சற்றும் தாள முடியவில்லை!

கேட்கும் பொழுது மிக சாதாரணமாக தெரிந்ததோ, நடைமுறையில் மிகுந்த அசாதாரணமாக இருந்தது. 

இத்தனை தூரம் வந்தபிறகு என்ன செய்ய முடியும்… வேறுவழியின்றி பல்லை கடித்து உணர்வுகளை அடக்கியவன்… மருத்துவர் கூறியப்படி தன் உயிர் அணுக்களை அங்கிருந்த குப்பியில் சேகரித்து வைத்துவிட்டு, விறுவிறுவென வெளியே வந்துவிட்டான்…

ஏற்கனவே ராகவ் அனைத்து ஏற்பாடுகளையும், ஈத்தனின் திருமண சான்றிதழ் வைத்தே, மருத்துவமனையில் பேசி முடித்து வைத்திருக்க… சரியாக குறிஞ்சியின் ஓவுலேஷன் நேரமான கருமுட்டை வெளியேரும் சமயம்… மருத்துவமனைக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையிற்காக(artificial insemination IU) ஈத்தனும், குறிஞ்சியும் வந்திருந்தனர்….

உள்ளே ஆய்வு கூடத்தில், ஈத்தனின் உயிரணுக்களை சில கெமிக்கல்கள் மூலம் கழுவி… அதிலிருக்கும் தேவையற்றவைகளை நீக்கி… திடப்படுத்தி… சிகிச்சைக்கு ஏற்ப சிரஞ்சியில் நிரப்பியவர்கள்…

உள்ளே தயாராக படுத்திருந்த குறிஞ்சியின் கருப்பை வாயினுள், அதனை மெல்லிய டியூப் மூலம் வெற்றிகரமாக செலுத்தி இருந்தனர்…

எவ்வித மருந்துகளும் இம்முறைக்கு உபயோகப்படுத்துவது கிடையாது என்பதால்… இதனால் பக்க விளைவுகள் எதுவும் குறிஞ்சிக்கு இல்லை…

ஏற்கனவே மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி இருந்தவளுக்கு இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம் என்பதால், தன் கூச்சத்தை எல்லாம், செய்ய போகும் நல்ல விஷயத்தை மனதில் நிறுத்தி தள்ளிவைத்துவிட்டு, தைரியமாகவே அச்சூழலை எதிர்கொண்டு இருந்தாள்…

அனைத்தும் முடிந்து, குறிஞ்சி வெளியே வர ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டு இருந்தது.

அதுவரை வெளியில் அமர்ந்திருந்த ஈத்தனின் மனதில், தேவையிருக்கும் தனக்கே இதெல்லாம் அவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது என்றால், குறிஞ்சிக்கு எப்படி இருக்குமோ… பாவம் என்ன செய்கின்றாளோ… காட்… என்று அவளை குறித்த எண்ணமே நிறைந்து இருந்தது…

ஆனால், அவனின் எண்ணத்தை மொத்தமாக பொய்த்து போக வைக்கும் வகையில்… ஒரு கனிவான புன்னகையுடன் அவனிடம் வந்து சேர்ந்தவள்…

“இன்னும் டூ வீக்ஸ் தான் சார்… உங்களுக்காக உங்க பேபி உருவாகிடுவாங்க… அடுத்த பத்து மாசத்தில் உங்க கையில் இருப்பாங்க… ஹேப்பியா நீங்க…?” என்று அவனின் பழைய உற்சாகத்தை காண ஆவலாக கேட்க…

என்னென்னவோ நினைத்து அவளுக்காக சஞ்சலம் கொண்டிருந்த ஈத்தனின் இதயமோ, அவளுடைய அந்த முழு அர்ப்பணிப்பில் அக்கணமே அவளுடைய காலடிகளில் விழுந்துவிட்டு இருந்தது… 

உடன் அவள் கூறியவற்றை கேட்டு அவனுக்குள் இருந்த சங்கடங்களும் நீங்கி… குழந்தை குறித்த எதிர்பார்ப்பு அவனை சூழ்ந்துக்கொள்ள… 

“இந்த ஜென்மம் மட்டும் இல்லை குறிஞ்சி. இன்னும் எத்தனை ஜென்மங்கள் நான் எடுத்தாலும் உனக்கு எப்பவும் நான் நன்றி உள்ளவனா இருப்பேன்…”, என்றவன்… “உன்னோட இந்த கனிவான குணம் என்னை அவ்வளவு பிரம்மிக்க வைக்குது கேர்ள்…”, என்றுக்கூற…

“அச்சோ… நான் உங்களை பார்த்து சொல்ல சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க… போங்க சார்…” என்றிருந்தாள் குறிஞ்சி… அவனின் புகழ்ச்சியில் தோன்றிய சிறு வெட்கத்துடன்…

அதைத்தொடர்ந்து அடுத்த பதினைந்தாவது நாள், “பிரக்னென்சி கிட் வாங்கிட்டு வாங்க சார்” என்று குறிஞ்சி ஈத்தனிடம் கூறியிருக்க…

எப்பொழுதும் போல் முகமூடி கொள்ளைக்காரனாக தயாராகி… பத்து பதினைந்து மெடிக்கலுக்கு சென்றிருந்தவன்… சென்னையில் இருக்கும் அனைத்து பிராண்டுகளில் இருந்தும் பிரக்னென்சி கிட் வாங்கி வந்துவிட்டு இருந்தான்…

அதில் ‘இத்தனையா’ என்று உள்ளுக்குள் அதிர்ந்த குறிஞ்சி… எதையும் வெளியே காட்டாமல்… குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டவள்…

‘கடவுளே சாரோட முகத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு… பிளீஸ் அதை பொய்யாக்கிட மட்டும் செய்துடாதிங்க… எந்த சோதனையா இருந்தாலும் எனக்கு அப்புறமா சேர்த்து வச்சி தாங்க… சார் பாவம்… இனி அவர் சந்தோஷமா மட்டும் தான் இருக்கனும்’ என்று வேண்டியவள்… அவளின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் தொட்டு வணங்கிவிட்டு… ஈத்தன் கொடுத்திருந்த கருவிகள் அனைத்தையும் உபயோகித்து பரிசோதனையை செய்ய…

வாழ்வில் முதல்முறை அவள் வேண்டியது அவளுக்கு உடனே கிடைத்து இருந்தது…

அதில் சந்தோஷம் தாளாமல், மொத்த பிரக்னென்சி கிட்டையும் “வாழ்த்துக்கள் சார்” என்று தூக்கிவந்து ஈத்தனிடம் காட்டி இருந்தாள்…

“உண்மையாவா குறிஞ்சி…” என்று கோடி மின்னல்கள் தன் கண்களினுள் வெட்ட கேட்ட ஈத்தன்… “தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ கேர்ள்…” என்று ஒவ்வொரு பிரக்னென்சி கிட்டிலும் தெரிந்த கோடுகளை பார்த்த ஈத்தன்…

அதில் சரியாக கோடு விழாத கருவிகளுடன் சேர்த்து… Congrats Dada and Momma. You guys are pregnant என்று அவர்கள் இருவரையும் சேர்த்தப்படி வாழ்த்தியிருந்த கருவியையும்… வேண்டாம் என்று போட்டுவிட்டு இருந்தான்…

இன்றோ அது மிக பாதுக்காப்பான இடத்தில் அமர்ந்து அவனை பார்த்துக்கொண்டு இருந்தது…

🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

  1. Itha ithathan Nan ethirpathen. Wow... Samar ku ipo than kurinji mela feelings vanthu irukum polaye.. kurinji ivlo varusam waste panita..

    பதிலளிநீக்கு
  2. Very very nice sis ❤️❤️❤️

    பதிலளிநீக்கு
  3. Ud kutti aa eruku....next ud seekiram upload pannunga ..... please

    பதிலளிநீக்கு
  4. Romba late aagudhu next epi poda ....mudinja seekiram poda try pannunga

    பதிலளிநீக்கு
  5. அடுத்து என்னன்னு ஆவலா இருக்கு.. சீக்கிரம் அப்டோட் போடுங்க...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2 மே, 2025 அன்று 5:00 AM

    2ble thamakka kidaikuma plsssssssss

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4 மே, 2025 அன்று 9:27 PM

    Waiting next UD plsssssssss

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5 மே, 2025 அன்று 11:30 AM

    Romba romba late panringa......epdi panna yedi kadhai padika aarvam varum.....wait panni wait panni salichi pochi.....pls seekiram upload pannunga

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story