23.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻

🌸இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டார்லிங்ஸ்🌸 

🎉டபுள் டமாக்கா என்ஜாய்🎉

அத்தியாயம்- 23

யாருக்கும் காத்திருக்காமல் கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்க…

சாந்தினிக்கு அறுவைச்சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டு இருந்தது…

அறுவை சிகிச்சை செய்த ரணங்கள் எல்லாம் சரியாகிவிட்டிருந்ததால்… அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சையை ஆரம்பித்துவிட்டு இருந்தனர்…

உயர் ரக நவீன வைத்திய முறைகளால்… நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம்…

குறிஞ்சியும் பழையப்படி வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…

மருத்துவமனையில் யாரும் நோயாளி உடன் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதால், அவளை மீண்டும் ஐஸ்வர்யா, வேலைக்கு செல்ல வைத்து இருந்தாள்…

ஈத்தனிடம் உன் அன்னையை குறித்து கூறிவிடுவேன் என்ற பழைய மிரட்டலையே வைத்து தான்.

வேலையும் அவசியம் என்பதால் குறிஞ்சியும் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டு இருந்தாள்…

இதில் நல்ல விஷயம் என்றால், சாந்தினிக்கு ஆகும் மருந்து செலவுகள் முதற்கொண்டு அனைத்தையுமே ஈத்தனே கட்டிவிடுவது தான்… அதில் குறிஞ்சிக்கு மாத செலவுகள் நன்றாகவே குறைந்து இருந்தது…

அதில் 16 மணி நேர ஷிஃப்டில் இருந்து 12 மணி நேர ஷிஃப்டிற்கு அவள் மாறிக்கொண்டிருந்தாள்…

மேலும், முன்புப்போல் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டிய, அதிகப்படி வேலைகளும் அவளுக்கு இல்லை. அதற்கும் சேர்த்து ஐஸ்வர்யா அவளிடம் வேலையாளுக்கு என்று ஒரு தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு… அதிர்ஷ்ட வசமாக விட்டுவிட்டு இருந்தாள்...

அன்னைக்கு உடல்நிலை நன்றாகும் வரை தான் இந்த தொல்லைகள் எல்லாம்… எவ்வளவோ காலம் பொறுத்துவிட்டோம்… இன்னும் ஒரு வருடம் தானே… பொறுத்துக் கொள்ளலாம்…. என்று ஐஸ்வர்யா விஷயத்தில் ‘சரி சரியென்று’ அமைதியாக இருந்த குறிஞ்சி… தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள்… 

ஒருவருடம் கழித்து அன்னையை டிஸ்சார்ஜ் செய்யும் போது… புது வேலை… புது ஊர்… என்று சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தவள்… அதற்கான வழிகளை தேட ஆரம்பித்து இருந்தாள்…

அவ்வளவு விஷயங்களுக்கு மத்தியிலும் ஈத்தனின் நினைவு அவளுக்கு வந்துக்கொண்டே தான் இருக்கும்… வராமல் எப்படி போகும்… நடக்கும் அனைத்திற்கும் காரணம் அவன் தானே…

அன்று ஈத்தனுடன் மெஸேஜில் அவள் பேசியதுடன் சரி… அதற்கு பிறகு அவனும் தொடர்பு கொள்ளவில்லை… இவளும் அவனை தொடர்புக்கொள்ளவில்லை… என்னவென்று தொடர்பு கொள்வது…

நேரம் கிடைக்கும் போதெல்லாம்… ஃபோனில் அவனைக்குறித்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்வாள்… அவ்வளவு தான் அவளால் முடிந்தது…

குறிஞ்சியின் வாழ்க்கை முன்பிருந்ததற்கு பரவாயில்லை என்னும் வகையில் ஒருவாறு தெளிந்த நிலையில் சென்றுக்கொண்டிருக்க… அங்கு ஈத்தனோ ஒருவழியாகிவிட்டு இருந்தான்…

தொடர்ந்து தன் குரலை மேம்படுத்தும் பயிற்சிகளை மனரீதியாக எடுத்துக்கொண்டிருந்தவன்…. ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்தும் இருந்தான்… இருந்தாலும் முழு முன்னேற்றம் தான் அவனின் தொழிலுக்கு அவசியம் என்பதால் அதிலேயே முழு மூச்சாக இறங்கி இருந்தான்…

பின்னே அடுத்த மூன்று வருடங்களுக்கு, அவனை தயாரிப்பாளர்கள் முன்பதிவு செய்து இருந்தனரே… பயங்கர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருந்தான்…

எதிர்மறை உணர்வு குவியல்கள் அதிகம் இருக்கும் சோக பாடல்களை மட்டும் முடித்துக்கொடுத்துக்கொண்டு இருந்தவன்… மற்றவற்றிற்கு, நெருக்கத்தில் பட வெளியீடு இருந்தவர்களுக்கு மட்டும், பணத்தை திருப்பிக்கொண்டு இருந்தான்…

இடையில், சித்ரலேகாவை வரவழைத்து மயில்வாகனத்தின் ப்ரொடெக்ஷன் கம்பெனி முதற்கொண்டு… மற்ற குடும்ப தொழில்கள் அனைத்தின் பொறுப்பினையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு இருந்தான்…

சித்ரலேகா எதற்கு என்று விசாரிக்க… “எனக்கு என் வேலையே சரியா இருக்கு மாம்… இதனால் என் கேரியரில் என்னால் சரியா ஃபோக்கஸ் பண்ண முடியலை…” என்று அவர் நம்பும் படியாக கூறி… தொழில்கள் அனைத்தையும் கை மாற்றிவிட்டவன்… இங்கிருந்தால் சித்ரலேகாவிடம் இருந்து தேவையில்லாத கேள்விகள் எதுவும் வருமென்று… அமெரிக்காவிற்கு சென்றுவிட்டான்…

தொழில் விஷயத்தில் சித்ரலேகாவை யாராலும் அடித்துக்கொள்ள முடியாதே… இந்தியாவில் தங்கி… அனைத்தையும் அவர் நேர்படுத்த ஆரம்பித்து விட…

ஒருசில வாரங்களிலேயே ஈத்தன் விஷயம் மெல்ல வெளியே கசிய ஆரம்பித்துவிட்டு இருந்தது… யாராலும் காரணம் இதுவென்று சரியாக பிடிக்க முடியாது போனாலும்… ஏதோ பிரச்சனை… ஈத்தன் பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்கிறான்… புதிய ஒப்பந்தங்கள் எதிலிலும் ஒப்பந்தம் ஆவதில்லை… என்ற அளவில் மட்டும் விஷயம் கசிந்து சினிமா வட்டம் முழுவதும் பரவ… சித்ரலேகாவின் காதுகளையும் அது எட்டிவிட்டது…

சித்ரலேகா ஈத்தனை அழைத்து விசாரிக்க… “ஐ நீட் சம் பிரேக், மாம்… ஃபீலிங் டையர்ட்…” என்றான்…

அதில் சித்ரலேகாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை…

“கேரியரோட பீக்ல இருக்கும் போது என்ன ஈத்தன் பேசுற… அதுவும் இருபத்தி மூனு வயசில் உனக்கு என்ன பிரேக்… பிஸ்னஸ என்கிட்ட கொடுக்கும் போது என்ன சொன்ன நீ… இப்ப என்ன செய்துட்டு இருக்க… டீன் ஏஜ் பையன் மாதிரி பிஹேவ் பண்ணாத ஈத்தன்… ஒன்ஸ் இப்ப இருக்கும் இடத்தை விட்டனா திரும்ப எப்பவும் உன்னால் அதை பிடிக்க முடியாம போயிடும்… மக்களுக்கு உன் குரல் மேல இருக்கும் போதை தெளிய, நீ இடைவெளி கொடுக்கவே கூடாது” என்று அவனை பொரிந்து தள்ளியவர்…

இறுதிவரை, ‘உனக்கு என்ன ஆனது… ஏன் ஓய்வு தேவை’ என்று மட்டும் கேட்கவில்லை…

அதில், “சாரி மாம்… நீங்க சொல்றது புரியுது… ஐ வில் கிவ் மை பெஸ்ட்… டேக் கேர்” என்றுவிட்டு ஈத்தன் வைத்துவிட்டான்…

எதிரெதிர் துருவங்களான, நடைமுறையை மட்டுமே சிந்திக்கும் சித்ரலேகாவும்… உணர்ச்சிகளின் பிடியில் இருந்த ஈத்தனும்… மேலும் மேலும் எதிர்திசையில் நகர்ந்து, இருவருக்குமான இடைவெளியினை அதிகமாக்கிக்கொண்டே சென்றனர்…

இதில் சித்ரலேகாவாவது என்னவென்று விசாரித்தாவது அவரின் பிடிப்பினை ஈத்தனுடன் வைத்துக்கொண்டே இருந்தார்… ஹன்டர் அதுக்கூட கேட்கவில்லை…

மேலும் ஒருமாதம் கழிய, அன்று ஞாயிற்று கிழமை… குறிஞ்சிக்கு விடுமுறை…

காலை பொறுமையாக எழுந்தவள், சாந்தினியின் உறக்கம் கலையாத வண்ணம், தன்னுடைய உடைகள் அனைத்தையும் அலசிப்போட்டுவிட்டு, பொறுமையாக தலைக்கு குளித்துவிட்டு… உடையை எடுத்து அணிய…

அதில் ஈத்தனின் வாசம்…

இரண்டு பக்கமும் தன் தோள்பட்டை பக்கம் முகர்ந்து பார்த்தவள், “அம்மாடி இன்னுமா இந்த வாசனை போகலை… அப்படி என்ன சென்ட் தான் அடிக்கிறிங்களோ…” என்று நினைத்தப்படியே வெளிவந்து… அமைதியாக தன் கூந்தலை உலர்த்த தொடங்கினாள்…

அன்று இரவு மருத்துவமனைக்கு வந்து அவளை சமாதானம் செய்ய அணைத்திருந்தவனின் பர்ஃபியூம்… அவளின் காட்டன் உடையில் ஒட்டிக்கொண்டு இருந்ததின் விளைவு… நான்கைந்து முறை அதை தோய்த்தும்… இன்னும் போகவில்லை…

அவளின் மனம் அது என்ன மணமாக இருக்கும் என்று தேடி ஆராய்ந்தது…

விடை தான் தெரியவில்லை…

இயற்கையான தூண்டுதலின் பேரில், திரும்ப திரும்ப அந்த சுகந்தமான மணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்த குறிஞ்சிக்கு… யாருமில்லாத வனத்திற்குள் சென்று நின்றிருப்பது போல் இருந்தது …

எடுத்ததும் திரும்பி பார்க்க வைக்கும், ஆண்மை மிக்க பெர்கமோட்டின் எளிமையான நாரிங்கை(ஆரஞ்சு) மணமும், இஞ்சியின் காரமான மணமும் சற்று தூக்கலாக இருந்து, பெண்ணவளை கவர்ந்து உள்ளிழுத்துக்கொள்ள…

அடுத்து அதிலிருந்த மெல்லிய லாவெண்டர் மற்றும் ஜெரானியம் மலர்களின் அமைதியான மென் நறுமணங்களும், வெண்ணிலாவின் இனிப்பும் ஒருவிதத்தில் அவளை அமைதிப்படுத்தி வைக்க…

அந்த மோன நிலையை மேலும் அதிக படுத்தும் வகையில், அதிலிருக்கும் சந்தன மணம் இதமாக இறகை போல் வருடி விட…

நிமிடங்கள் பல கடந்தும் அப்படியே நின்று இருந்தாள் குறிஞ்சி…

விட்டால் நாள் முழுவதும் அதை சுவாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது அவளுக்கு…

அப்பொழுது கதவை தட்டிவிட்டு அங்கிருக்கும் செவிலியர் உள்ளே நுழைய… சாந்தினி முழித்துக்கொண்டார்…

“காசு இருந்தா சொர்க்கத்தையே விலைக்கு வாங்கிக்கலாம் போல” என்ற எண்ணத்துடன் குறிஞ்சி… அச்செவிலியரோடு சேர்ந்து சாந்தினிக்கு தேவையானவை அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தாள்…

அதைத்தொடர்ந்து காலை உணவும் முடிய…

பிரபு அங்கு வந்து சேர்ந்தான்…

குறிஞ்சியை ஐஸ்வர்யா வீட்டிற்கு அழைத்து வர கூறியதாக கூறியவன்… ஐஸ்வர்யாவிற்கு ஃபோனை போட்டு அவளிடம் தர…

வேலையாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறிய ஐஸ்வர்யா… குறிஞ்சியை இன்று மட்டும் வீட்டிற்கு வந்து வேலைகளை முடித்துவிட்டு செல்ல கூற…

இன்று ஒருநாள் நிம்மதியாக இருக்கலாம் என்று காலையில் இருந்து கனவு கண்ட குறிஞ்சியின் சிறிய ஆசையில் இடிவிழுந்திருந்தது…

மகளின் அந்த வாடிய முகம் சாந்தினியின் நெஞ்சிலும் ஆழமாக பதிந்துவிட்டு இருந்தது…

📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
 

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story