சங்கீதம் -26.2 🪻🎼😘
ஹே பேபி! ஆர்ட் கேலரி எப்படி இருந்துச்சு டா. என்ஜாய் பண்ணயா?!” என்றான் ஈத்தன்…
மகளின் புன்னகை முகம்… ஈத்தனின் முகத்திலும் மின்னல் வேகத்தில் புன்னகையை பரப்பிவிட்டு இருந்தது…
“வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ் பேபி” என்றப்படியே அவனை நெருங்கிய ஈஷா, “உங்களுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வந்து இருக்கேன். Guess it?” என்றாள்.
அவளின் ஒரு கை மட்டும் முதுகுக்கு பின்புறம் மறைவாக இருக்க…
புன்னகையுடன் அவளை பார்த்த ஈத்தன். ஒருசில வினாடிகள் யோசிப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்துவிட்டு…
“Flowers?!” என்றான்.
அதில் “பேபி….” என்று தன் கண்களை அகல விரித்த ஈஷா சினுங்கியப்படியே, “போங்க பேபி. எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. நீங்க ஆர்ட் சொல்லுவீங்க நினைச்சேன்” என்றவள்… ஈத்தனுக்காக கொண்டுவந்திருந்த சிறிய சிவப்பு ரோஜா பூங்கொத்தை தர…
“வாவ்! தேங்க் யூ பேபி. இட்ஸ் சோ பியூட்டிஃபுல், ஜஸ்ட் லைக் யூ” என்று வாங்கிக்கொண்ட ஈத்தன். “சாரி பேபி. எனக்கு ரோஸ் தான் பிடிக்கும்னு, உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும் இல்லடா. அண்ட் ஆர்ட் ஆ இருந்து இருந்தா நீ இப்படி ஒரு கையில் மட்டும் கேஷ்வலா பிடிச்சு பேசிட்டு இருக்க மாட்டயே… ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணி இருப்ப இல்ல” என்று புன்னகையுடன் அவன் எப்படி எல்லாம் கண்டுபிடித்தான் என்று கூற….
அதற்கு, “ஓ நோ….” என்ற ஈஷா… “நெக்ஸ்ட் டைம் உங்களை ரியலா சர்ப்ரைஸ் பண்றேன் பாருங்க பேபி” என்றாள்.
“டாடிய ஹேப்பி ஆக்க தானே பேபி சர்ப்ரைஸ் கொண்டுவந்திங்க. ஆல்ரெடி டாடி ஹேப்பி” என்றப்படியே, பைன் கோன்கள் மற்றும் அதன் இலைகளுடன் இணைந்திருந்த உயர்ரக சிவப்பு ரோஜாவின் நறுமணத்தை உள்ளிழுத்த ஈத்தன், “ம்… வெரி ப்ளசண்ட் பேபி… கில்லிங்” என்றான்.
அதில் சற்றுமுன் தோன்றிய சிறிய வருத்தமும் ஈஷாவிடம் இருந்து பறந்துவிட, “தேங்க் யூ பேபி. உங்களுக்கு பிடிக்கும்னு தான் கொண்டு வந்தேன்” என்றவள்… அவன் தோள் மீது கைவைத்து, அப்படியே அவன் மீது சலுகையாக சாய்ந்து நின்றப்படியே, எப்படி அதை செய்தாள் என்று கூற ஆரம்பித்துவிட்டாள்…
இவை அனைத்தையும் கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்த மதர், இச்சிறு கூட்டிற்குள் குறிஞ்சியையும் எப்படியாவது இணைத்துவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் அமர்ந்து இருந்தார்.
ஈஷா அவ்வறைக்குள் இருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்று இருக்க…
ஈத்தன் தன் கையிலிருந்த ரோஜாவின் இதழ்களை மெல்ல வருடிப்பார்த்தான்.
அதைப்பார்த்த மதர், “குறிஞ்சி நிறைய ரெட் ரோஸ் கலெக்ஷன்ஸ் வச்சிருக்கிறதுக்கான உண்மை காரணம் இப்ப தான் தெரியுது ஈத்தன்” என்று சிரிப்பை அடக்கியப்படி கூற…
“ஓ…” என்ற ஈத்தனுக்கு என்ன மாதிரியான ரியாக்ஷன் இதற்கு தருவதென்றே தெரியலை… உள்ளுக்குள் ஏதோ சூடாக பாய்வது போல் வேறு இருக்க… அமைதியாகவே இருந்தான்.
அதற்குள் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க… இருவரின் பேச்சும் நின்றுப்போனது…
மதருடன் சேர்ந்து அங்கு பள்ளியிலேயே ஈஷாவும், ஈத்தனும் மதிய உணவை முடித்துக்கொண்டு வெளிவர…
ஈத்தன், தாமஸிடம் கூறி ஏற்பாடு செய்ய கூறியிருந்த ஆட்கள், இன்னும் சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்ற தகவல் அவனுக்கு வந்து சேர்ந்தது…
அதில் மதர் ஈஷாவை அவருடன் மதிய ப்ரேயருக்கு சர்ச்சிற்கு அழைக்க…
ஈஷா ஈத்தனை திரும்பி பார்த்தாள்…
“டாடிக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு பேபி. ஈவ்னிங் தான் இங்க இருந்து மோஸ்ட்லி கிளம்புவோம்”, என்றவன், “உனக்கு ஓகேனா மதர் கூட போயிட்டு வாடா” என்று அனுமதி கொடுக்க…
மதருடன் கிளம்பிவிட்டாள் ஈஷா…
“இன்னைக்கு ப்ரேயர்ல நீ பாடுறயா ஈஷா…”, என்று ஈஷாவிடம் கேட்ட மதர்… அவளுக்கு என்னென்ன பாடல்கள் தெரியும் என்று கேட்டப்படியே… ஈத்தனின் கையில் குறிஞ்சி வீட்டு சாவியை கொடுத்துவிட்டு வெளியேறிவிட…
மீண்டும் குறிஞ்சியின் வீட்டிற்கு வந்து சேர்ந்த ஈத்தன்…
முதல் வேலையாக ராகவிற்கு அழைத்து பேசினான்… அவனுக்கு தானே குறிஞ்சியின் வீட்டை பற்றி எல்லாம் தெரியும்… காலையில் அவனை அழைத்து தான் குறிஞ்சி வீட்டை பார்க்க கூறி இருந்தான்…
அதில் மதரிடம் பேசியதையும், அவர் மூலம் அங்கு சென்னையில் இருந்த சிஸ்டரிடம் பேசியதையும் மேலோட்டமாக ஈத்தன் கூற…
ராகவ், “அப்படி போடுங்க சார் அருவாள… அந்த பொண்ணுக்கு அவ்வளவு காதலா உங்க மேல… நீங்க ரொம்பவும் லக்கி சார்…”, என்று கூறிக்கொண்டே போக…
“ராகவ்…” என்று பல்லை கடித்த ஈத்தன், பிரபுவையும், ஐஸ்வர்யாவையும் விரைந்து தேடக்கூறிவிட்டு வைத்துவிட்டான்…
விஷயத்தை கேட்பவர்கள் எல்லாம் இப்படியே பேசினால் என்ன தான் செய்வான் அவன்…
“காட்…” என்று தன் தலையை அழுந்த பற்றிக்கொண்டவன்… “என்னை இப்படி சுத்தல்ல விட்டுட்டயே கேர்ள்…” என்று வாய்விட்டே புலம்பி இருந்தான்…
அப்பொழுது அங்கு ஒருபக்கமிருந்த தொட்டிகளில் இருந்த ரோஜா வகைகள் மட்டும் வாடத்தொடங்கியிருந்ததை பார்த்த ஈத்தன், சுற்றி முற்றி நீரெடுக்கும் வழியினை பார்க்க, அங்கிருந்த சமையலறை கதவு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. அதுதான் குறிஞ்சியின் தனியறை என்று நினைத்த ஈத்தன்…
சரியென்று சமையலறை அல்லது தோட்ட பக்க கதவு எதாவது திறந்திருக்கிறதா பார்க்கலாம் என்று, ஹாலில் இருந்து சென்ற சிறிய வராண்டாவின் வழியில் நடக்க…
வழியிலேயே பூட்டப்படாத பூட்டுடன் தொங்கும் ஒரு அறை அவன் கவனத்தில் விழுந்தது…
மகள் பாசத்தில் ஈத்தனுடன் அன்று கிளம்பும் அவசரத்தில், குறிஞ்சி எப்பொழுதும் பார்த்து பார்த்து கவனமாக பூட்டி வைக்கும் அறையை… முதல் முறையாக பூட்ட மறந்துவிட்டிருக்க…
ஈத்தன் அவ்வறையை திறந்துவிட்டு இருந்தான்…
________________________________
🟥அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/271.html
Very very nice and interesting sis, eagerly waiting for Ethan's reaction, Kurinchi room la apdi enna irukum nu naangalum romba eagerly waiting sis.
பதிலளிநீக்குஈத்தனுக்கு புரியாதது உணராததுன்னு இன்னும் இருக்குன்னு இனி தான் தெரிஞ்சுக்க போறான்...
பதிலளிநீக்குWow
பதிலளிநீக்குAiii.. mother Koda kurinji ku than support ah.. kurinji side flashback epo varum. Avanga amma yen avanga relative veetla irunthanga nu solave ilaye writer.
பதிலளிநீக்குkathal romba azhaganathu but athu ellarukum kedicha innum azhaga irukkum. i love kurinji character.
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்கு