23.4 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அமெரிக்கா பொறுத்தவரை அவன் அனுமதி இல்லாது அவனுடைய மருத்துவ விஷயங்கள் எள்ளளவும் வெளியே செல்லாது என்பதால்… இப்பொழுது வரை யாருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை…
ஆனால் அவனை காண சென்று இருந்த சித்ரலேகாவிற்கு அவனின் அனுமதி கூட தேவையில்லையே…
அவன் அறையில் இருந்த மருத்துவ அறிக்கையை அவன் மறுக்க மறுக்க எடுத்து பார்த்துவிட்டு இருந்தார்…
உயிருக்கே சில நேரங்களில் ஆபத்து விளைவித்துவிடும் மருந்துகளை அவன் எடுத்ததில் அதிர்ச்சி அடைந்து, “என்ன ஈத்தன் இதெல்லாம்…?” என்றவரிடம்…
ஈத்தன் என்னவென்று தன்னிலையை விலக்குவது…
இருந்தும் வேறுவழியின்றி கூறினான்…
“நான் பாட்டியை ரொம்ப மிஸ் பண்றேன் மாம்… அதில் மூட் எப்பவும் டவுனாவே இருக்கு… எனக்கு வேற வழி தெரியலை” என்று முகம் கசங்கிய நிலையில் கூறியவனை பார்த்த சித்ரலேகா… அடுத்து அடுத்து பேசியவைகள் அவனை மொத்தமாக உடைத்து போட்டுவிட்டு இருந்தது…
“மனநிலை சரியில்லாதவன் மாதிரி பேசாத ஈத்தன்… என்னை விட உனக்கு ஒன்னும் பாட்டியோட இழப்பு பெருசில்லை… எனக்கு அவங்க அம்மா… உனக்கு ஜஸ்ட் பாட்டி மட்டுமே ஈத்தன்… அழனும்னா நான் எவ்ளோ அழலாம்… என்னுடைய கடமைகள் எல்லாத்தையும் அதை காரணம் காட்டி தட்டி கழிக்கலாம்… ஆனா நான் என்ன அப்படியா செய்யறேன்… பீ பிராக்டிகல் ஈத்தன்…” என்றவர்… அடுத்தடுத்து பேசியவைகளை கேட்டுக்கொண்டும் எதுவும் பதிலளிக்காமல் அமர்ந்திருந்த ஈத்தனின் பொறுமையின் அளவு கடலளவை தாண்டிலும் பெரிது என்றால் மிகையாகாது…
அவனுக்கு பேச தெரியாது என்றில்லை… பேச வேண்டாம் என்று முடிவெடுத்து பேசாமல் இருந்தான்…
அவன் பேச ஆரம்பித்தால் சித்ரலேகாவின் மொத்த சந்தோஷமும் பறிப்போகும் என்பதால் தான் அந்த அமைதி…
“உன் அப்பாவாச்சும் என் உயிரை ஒருதடவை தான் எடுத்தார்… ஆனா நீ தினம் தினம் எடுக்கிற ஈத்தன்… பண்ணு என்ன பண்ணனுமோ பண்ணு… அந்த ஒருநாளைக்காக என்னை பழிவாங்கிட்டே இரு” என்றவரை…
“சாரி மாம்… இனி இப்படி எதுவும் செய்ய மாட்டேன்… நீங்க என்னைப்பற்றி கவலை பட வேண்டாம்” என்று ஈத்தன் அனுப்பி வைத்துவிட்டு விட…
மதியம் பக்கம் ஹன்டர் ஒரு பெரிய மலர் பொக்கேவுடன் அவனை காண வந்து இருந்தார்…
சித்ரலேகாவை போல் மகன் மீது சந்தேகம் எதுவும் பட்டு அவர் எதையும் ஆராயவில்லை…
அவன் கூறியதை அப்படியே நம்பியிருந்தவர்…
“டேக் கேர் ஈத்… ஹெல்த் ரொம்ப முக்கியம்” என்று அவனை கட்டியணைத்து, அவன் நெற்றியில் இதழ்களை பதித்துவிட்டு… விடைப்பெற்றுக்கொள்ள…
ஈத்தனின் இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை…
ஒருவர் அவனை துருவி துருவி ஒருவழி செய்துவிட்டு சென்றிருக்க… மற்றொருவரோ எதையும் துருவாமல் ஒரு வழி செய்துவிட்டு சென்று இருந்தார்…
___________________________
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/04/241.html
கருத்துகள்
கருத்துரையிடுக