24.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம் -24
🌸 டார்லிங்ஸ் இன்னைக்கு இரண்டு யூடி போட்டிருக்கேன். முன்னாடி இருக்கிறது படிச்சுட்டிங்களான்னு பார்த்துக்கோங்க...🌸
மறுநாள் விடிந்ததும், ஈத்தனின் வீட்டை நோக்கி ஓடிய குறிஞ்சி, அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ஈத்தன் குறித்து விசாரிக்க…
ஏற்கனவே முன்தினம் மாலையில் இருந்து பத்திரிகையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள் பட்டாள படைகள் பலவற்றை பார்த்து ஓய்ந்துப்போய் இருந்தவர்கள்….
“சார் வீட்டில் இல்லைம்மா… வேற எதுவும் எங்களுக்கு தெரியாது… அவர் வந்தப்பிறகு வந்து பாருங்க…” என்றுவிட…
“சார் எப்ப வருவாங்கன்னு எதுவும் தெரியுமா அண்ணா… நீங்க சார்கிட்ட பேசனீங்களா… இப்ப எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லுங்களேன்… ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சும் குரலில்…
இவளிடம் இருக்கும் ஈத்தனின் தனிப்பட்ட தொலைபேசி எண் கூட அவரிடம் கிடையாதே… பாவம் அவர் என்ன பதில் கூறுவார்…
“தெரியலை பாப்பா… உன்னை மாதிரி தான் நானும்… எதுவும் தெரியாது…” என்றுவிட… நுழைவு வாயிலிலேயே வீட்டின் ஒருங்கிணைப்பாளர் வரும் வரை காத்திருந்து… அவரிடம் ஓடி விசாரித்து பார்த்தாள்…
செக்யூரிட்டி கூறிய அதே பதில் தான் அவளுக்கு அவரிடமும் கிடைத்தது…
‘உண்மையிலேயே நீர்சத்து குறைபாடு தான் என்றால் எதற்கு இவ்வளவு நேரம் சார் யாருடனும் பேசாமல் இருக்க வேண்டும்…’
மீண்டும் மீண்டும் ஈத்தனுக்கு விடாமல் ஃபோனில் தொடர்பு கொள்ள முயன்றாள்… தோல்வியே…
வேறுவழியின்றி பணிக்கு கிளம்பி சென்றவள்… பணி முடிந்து திரும்பும் போது இரவு ஆகிவிட்டதால்… பொறுத்திருந்து… மீண்டும் மறுநாள் காலை விடிந்ததும் ஈத்தன் வீட்டிற்கு ஓடினாள்… நேற்று கிடைத்த அதே பதில் தான் மீண்டும்ம் கிடைத்தது…
அன்று மட்டுமல்ல தொடர்ந்து ஒருவாரம் அதேப்போல் அவள் ஓடியும்… அவளுக்கு வேண்டிய பதில் மட்டும் கிடைக்கவேயில்லை…
இதயமெல்லாம் அப்படி ஒரு வலி…
ஒருவாய் சோறு நிம்மதியாக தொண்டைக்குள் இறங்கவில்லை…
இமைகள் இரண்டும் ஐந்து நிமிடம் கூட நிம்மதியாக மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவில்லை…
ஈத்தன் ஈத்தன் ஈத்தன் மட்டுமே…
ஒருமுறை அவனை நேரில் பார்த்துவிட வேண்டும்… அவன் குரலை கேட்டுவிட வேண்டும்…
சாந்தினிக்கு உடல்நலம் சரியில்லாத போது ஒருமாதிரியான துன்பங்களை சந்தித்தாள் என்றால்… இப்பொழுதோ உயிரே பிரிவது போல் வலித்தது…
அவன் நிலையை தெரிந்துக்கொள்ள முடியாத இடத்தில் இருக்கும்… தன்னுடைய ஏழ்மை நிலையை சுத்தமாக வெறுத்தாள்…
ஈத்தனை விட அதிகளவில் ஒருவாரத்திலேயே இளைத்துவிட்டு இருந்த குறிஞ்சியிடம்… சாந்தினி அதிர்ந்து… என்ன என்னவென்று விடாமல் விசாரிக்க…
தன்னுடைய மாற்றங்களையும், உணர்வுகளையும் உணராத குறிஞ்சி… சாந்தினியிடம் ஈத்தனை முதன் முதலில் மருத்துவமனையில் சந்தித்தது தொடங்கி அவன் உதவி செய்தது அனைத்தையும் கூறியவள்…
தான் அவனுக்கு பிள்ளை பெற்று தருவதாக கூறியதையும்… அவனின் சொந்த விஷயத்தில் தலையிட்டு மண்டகப்படி வாங்கிக்கொண்டதையும் மட்டும் கூறாமல் மறைத்துவிட்டு இருந்தாள்… இரண்டும் அன்னைக்கு வருத்தம் தரும் என்பதால்…
“ரொம்ப கஷ்டமா இருக்கு ம்மா… பாவம் சார்… எனக்காகவாச்சும் நீங்க இருந்தீங்க… அவருக்கு யாருமே இல்லை… அந்த பாட்டி இறந்த அன்னைக்கு எப்படி அழுதாங்க தெரியுமா…” என்றவள் அதை நினைத்து இன்று அழ…
கேட்ட சாந்தினிக்கும் மனதிற்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது…
அதிலும் இன்றைய அவரின் இந்த வலியற்ற நிலைக்கு காரணம் ஈத்தன் ஆகிற்றே…
“கண்டிப்பா அவருக்கு எதுவும் ஆகியிருக்காது பூ ம்மா… அவரோட நல்ல மனசுக்கு நிச்சயம் நல்லா இருப்பார்… ஏதோ கெட்ட நேரம்… இதை தாண்டிட்டா ரொம்ப நல்லா இருப்பார்… நாம கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருக்கலாம்…” என்றவர்… “அவரோட பாட்டி சொன்ன மாதிரி தம்பி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லது” என்றுக்கூற…
அதைக்கூறி வாங்கி கட்டிக்கொண்டிருந்த குறிஞ்சி, “ஏன்மா அப்படி சொல்றீங்க… கல்யாணம் செய்துக்கலைனா என்ன ஆகும்…” என்றாள் அன்னையிடம்…
அதற்கு “என்ன ஆகுமா…” என்று கேட்ட சாந்தினி… “நீ மட்டும் பிறக்காமல் இருந்து இருந்தா... இந்த உயிரை அம்மா எப்பவோ இந்த உடம்பை விட்டு எடுத்துட்டு இருப்பேன் டா… ஆராம்பத்தில் சாகுறதை நினைச்சாலே நிறைய பயமா இருக்கும்… ஆனா போக போக அந்த பயமெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிடுச்சு…”, என்றவர் கண்முன் பல கெட்ட துர் நினைவுகள்… மகளிடம் பகிர முடியாதவைகள்…
அனைத்தையும் விழுங்கியவர், “எல்லாத்தையும் கடந்து… உனக்காக தான் இந்த உயிரை பிடிச்சுட்டு இவ்வளவு காலமும் வாழ்ந்தேன் … நான் இந்த நிமிஷம் உயிரோட இருக்க ஒரே காரணம் நீதான் பூ ம்மா…” என்றுக்கூறியவர்…
“உன் அப்பா மாதிரியான பொறுப்பு இல்லாத மனுஷங்களை எல்லாம் இதில் சேர்க்காத… அவங்கெல்லாம் வேற மாதிரி… தன்னோட சந்தோஷத்துக்காக என்ன வேண்டும்னாலும் செய்வாங்க… அவங்களுக்கு எல்லாம் எந்த பிடிப்பும் தேவையும் இல்லை… எதையும் பிடிக்கனும்னு நினைக்கவும் மாட்டாங்க…” என்றவர்…
“ஆனா இந்த சார் மாதிரியான பொறுப்பான நல்ல மனுஷன் வாழ்க்கையை வாழ ஒரு பிடிப்பு வேண்டும் டா… வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம் அவசியம்… கடமை அவசியம்… எனக்கு நீ இருக்க மாதிரி… அவருக்கும் ஒரு பூக்குட்டி இருந்தா… மனுஷன் வேற எதையும் பற்றி சிந்திக்காமல் ஓடுவாறு இல்ல… அதனால் தான் அந்த பாட்டிமா அப்படி சொல்லி இருக்காங்க… உனக்கு அதெல்லாம் புரியாது… நீ சின்ன பொண்ணு டா…” என்றவருக்கு தெரியாது அவரின் வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட தாக்கத்தினை அவரின் மகளுடைய மனதில் ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டு இருந்தது என்று…
அது தெரியாமல் குறிஞ்சியின் முகத்தை வருடி… கன்னம் கிள்ளி… முத்தம் வைத்த சாந்தினி, “ஒரு நல்ல குணமான மாப்பிள்ளையா பார்த்து, என்னோட பூக்குட்டி கையை பிடிச்சு அவர் கையில் கொடுத்துட்டா போதும்… இந்த அம்மாவுக்கு…” என்றவர் மனதில்… அதைப்பற்றிய எண்ணங்கள் ஓட…
குறிஞ்சியின் எண்ணங்களோ முற்றிலும் வேறாக இருந்தது…
_______________________________
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக