சங்கீதம்-25.1

அத்தியாயம் -25

ஈத்தனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்பதை மட்டுமே தன் முழு நோக்கமாக வைத்துக்கொண்டு… அவனுக்கு ஏற்றபடி அவனிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பியிருந்த குறிஞ்சிக்கு… அவள் பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கும் பொழுதே தலை சுற்றியது…

அதிலும் ஐஸ்வர்யாவிடம் இந்த விஷயத்தை குறித்து பேச போவதை நினைத்தாலே… உள்ளுக்குள் ஜுரம் அடிப்பது போல் இருந்தது…

அதைவிட பெரிய ஏழரை லோகேஸ்வரி….

அன்னையிடம் வந்து போட்டு கொடுத்துவிடுவார்களோ…

இல்லை ஈத்தனிடம் சென்று போட்டு கொடுத்துவிடுவார்களோ…

என்று அனைத்து பக்கமும் இருந்து யோசித்துப் பார்த்தவள்…

‘பேசாமல் நாமே அம்மாவிடம் அனைத்தையும் கூறி… சாரிடம் இதற்கு சம்மதம் என்று கூற சொல்லலாமா?’ என்று நினைத்தவள்… ‘இல்லை இல்லை வேண்டாம்… நிச்சயம் அம்மா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்… காரியம் கெட்டுவிடும்…’ என்று அந்த யோசனைக்கு உடனே முற்று புள்ளி வைத்துவிட்டாள்.

ஈத்தனிடமும் அம்மாவிடம் மட்டும் இதை குறித்து இப்பொழுது கூறப்போவது இல்லை… அந்த காலத்து மனுஷி… பயந்துவிடுவார்… அதுவும் இப்பொழுது தான் பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது… நான் பிறகு கூறிக்கொள்கின்றேன்… என்று இருந்தாள்…

இறுதியாக, ஐஸ்வர்யா மனம் வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பது புரிய… அவளிடம் பேச தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தவள்… அதன்படி மறுநாள் அவளிடம் பேச என்று வீட்டிற்கு சென்று இருந்தாள்…

யார் செய்த புண்ணியமோ லோகேஸ்வரி வீட்டில் இல்லை… அவர்கள் தெருவில் யாருக்கோ வெளியூரில் திருமணம் என்று அக்கம் பக்கத்து பெண்மணிகளுடன் சேர்ந்து முன்தினமே கிளம்பிவிட்டு இருந்தார்…

பிரபுவும், ஐஸ்வர்யாவும் எப்பொழுதும் போல் தாமதமாக எழுந்து, சமையல் ஆள் செய்து வைத்துவிட்டு சென்றிருந்த உணவை ஒருவெட்டுவெட்டிவிட்டு… டீவி பார்த்துக்கொண்டு இருந்தனர்…

ஞாயிற்று கிழமை என்பதால் வீட்டில் இருந்த பூஜா, அறைக்குள் ஐஸ்வர்யாவின் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தாள்…

இறும்பு வெளிகேட் மூடும் சத்தத்தை தொடர்ந்து உள்ளே குறிஞ்சி நுழைய…

“ப்ச்… எதுக்கு இப்ப… சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க… யார் உன்னை வர சொன்னாங்க” என்றாள் எடுத்ததும் ஐஸ்வர்யா அலட்சியமாக… 

அதில் தன் மேல் உதடுகளை பற்களால் கடித்து உணர்வுகளை அடக்கப்பார்த்தாள் குறிஞ்சி…

நேரடியான அவமதிப்பு வலிக்க செய்தது…

என்ன செய்வது…

நெஞ்சுக்குழிக்குள் அனைத்தையும் போட்டு அடக்கியவள்…

“உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும் அக்கா… அதுக்கு தான் வந்தேன்…” என்றாள்… 

அதற்கும் அவளை ஏதோ திட்ட வந்த ஐஸ்வர்யாவை தடுத்த பிரபு, அவளிடம் ஏதோக்கூற…

அதைக்கேட்டுக்கொண்ட ஐஸ்வர்யா, “சரி சரி என்ன விஷயம்னு சொல்லு…” என்றாள் குறிஞ்சியிடம்…

அதில் சற்று நிம்மதியான குறிஞ்சி… வந்த விஷயத்தை கூற ஆரம்பிக்க…

“ஐயோ என்ன சொல்ற… என் ஸ்வீட் ஹார்ட் ஈத்தன் டிப்ரெஷன்ல இருக்காரா…” என்று அதிர்ந்த ஐஸ்வர்யா… 

“என்ன தான் பெத்தவங்களோ… பெத்த பிள்ளையை பார்க்காமல் எவ்ளோ சுயநலமா இருக்காங்க… அப்படி இருக்கவங்க எல்லாம் எதுக்கு குழந்தை பெத்துக்கனும்…” என்று சித்ரலேகாவையும், ஹன்டரையும் போட்டு அவள் இஷ்டத்திற்கு திட்ட…

சாத்தான் வேதம் ஓதுவது போல் இருந்தது குறிஞ்சிக்கு…

இருந்தும் தனக்கு வேலையானால் சரியென்று… ஐஸ்வர்யாவின் வழியிலேயே சென்று பேசியவள்… அவளின் ஈத்தனுக்கான ரசிகை உணர்வை எக்கச்சக்கமாக தூண்டிவிட்டுவிட்டு…

இறுதியில் அவனின் தனிமை உணர்வை போக்குவதற்காக, தான் அவனுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவெடுத்து இருப்பதை எப்படியோ கூறிவிட்டாள்.

அதற்கு ஐஸ்வர்யா எதுவும் எதிர்ப்பாக கூறவில்லை… விட்டால் அந்நேரம் இருந்த உணர்ச்சிவசத்திற்கு அவளே சென்று குழந்தை பெற்று கொடுக்கும் அளவிற்கு நாடி நரம்பெல்லாம் ஈத்தன் மீதான பைத்தியம்(Die-hard fan) முறுக்கேற அமர்ந்து இருந்தாள்…

பிரபு தான் குறிஞ்சியை போட்டு கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டு இருந்தான்…

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்… அவரை எப்படி பார்த்த…” என்று அவன் விசாரிக்க…

அனைத்திற்கும் தயாராக இருந்த குறிஞ்சி…

தனக்கு உதவி செய்த தோழி மூலம் தகவல் தெரிந்துக்கொண்டு… மனம் கேட்காமல் சென்று பார்த்ததாக கூறி…

ஈத்தனிடம் சொன்ன பொய்களையும் கூறி…

இறுதியாக அவர்கள் இருவரையும், ஈத்தனின் வீட்டிற்கு தன்னுடன் வந்து பேச அழைத்தாள்…

அதில் தன் புருவங்களை சுருக்கிய பிரபு, “எவ்ளோ தரேன்னு சொன்னாங்க…” என்று விசாரிக்க…

“ஐயோ அதெல்லாம் எதுவும் இல்லை மாமா… ஏற்கனவே நிறைய அம்மாக்காக செய்துட்டாங்க… அதுக்கு பிரதியா தான் இதையே நான் செய்ய போறேன்… இதுக்கு மேல என்ன வேண்டும்” என்றவள்…

அவர்கள் கேட்கும் முன்பே, இனி தன் சம்பள பணத்தில் பெரும் பகுதியை அவர்களுக்கு தந்து விடுவதாகவும், குழந்தை பெற்று தந்தப்பிறகு மீண்டும் இரண்டு ஷிஃப்ட் பார்த்து கூடுதல் பணத்துடன், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து தருவதாகவும் வேறு கூற…

பிரபுவிற்கு நிறைய சந்தேகங்கள்… ‘பொண்ணு வேண்டாம்னு சொல்ற ஆம்பிளை எல்லாம் உலகத்தில் இருக்காங்களா என்ன?’ என்று ஈத்தன் மேலும்… ‘இந்த பொண்ணுக்கு எதுக்கு அவன் மேல இவ்ளோ அக்கறை…’ என்று குறிஞ்சி மேலும்… அதில் அவன் யோசனையாக இருக்க…

மறுபக்கம் ஐஸ்வர்யா, “பார்க்க நல்லா ஊமை மாதிரி இருந்துட்டு எவ்ளோ பொய் பேசிட்டு வந்து இருக்க… இதேமாதிரி எப்படி எல்லாம் பொய் பேசி எங்களை இதுவரை ஏமாத்துனயோ… உன் அம்மா புத்திடி உனக்கு… நல்லவ வேஷம் போட உனக்கு சொல்லியா தரனும்…” என்று கிடைத்தது சாக்கென்று குறிஞ்சியை திட்ட ஆரம்பித்துவிட்டு இருந்தவள்… “உண்மையை சொல்லு… எதாவது மெக்கானிக் பையனை லவ் பண்றயா… எங்க குடும்ப மானத்தை எதுவும் வாங்கிடாத…” என்று கேட்க…

ஐயோவென்று ஆகிவிட்டது குறிஞ்சிக்கு… 

“அச்சோ அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க க்கா… சார் பார்க்க ரொம்ப பாவமா இருந்தார்… அதனால் தான் பொய் சொன்னேன்… அம்மாக்கு எவ்ளோ உதவி இலவசமா செய்றாங்க… ஏதோ என்னால் முடிஞ்சதை செய்யலாம்னு தான்…” என்று எப்படியோ சமாளிக்க பார்த்தாள்.

அதற்குள் சிலபல யோசனைகளை தனக்குள் நிகழ்த்தி முடித்திருந்த பிரபு…

“பேபி நீ சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு… நாம வெளியே போகலாம்… நான் இவக்கிட்ட பேசிக்கறேன்” என்று ஐஸ்வர்யாவை உள்ளே அனுப்பியவன்…

மேலும் மேலும் குறிஞ்சியை போட்டு துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான்…

“குழந்தை பெத்து தரதுன்னா…? எப்படி பெத்து தரப்போற…?” என்று அவன் நேரடியாக கேட்க…

எச்சில் கூட்டி விழுங்கிய குறிஞ்சி, “அக்கா கிட்ட சொல்றேனே…” என்று தயங்க…

“அதுக்கென்ன சொல்லிக்கோ… ஏதோ நல்ல காரியம் எல்லாம் பண்றேன்னு… போனா போகுதுன்னு உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தேன்…” என்றான்…

அதில் பல்லை கடித்துக்கொண்டு… மருத்துவ ரீதியாக தங்கள் மருத்துவமனையில்… வாடகை தாயாக வருபவர்களுக்கு… என்ன செய்வார்கள் என்று அவள் கூறி முடிக்க…

“ஓ…” என்றவன்…

“அதுக்கு அப்புறம்… உனக்கு கல்யாணம் எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை… பரவாயில்லையா…” என்றுக்கேட்டான்…

இருக்கும் நிலைக்கு, தனக்கு கல்யாணம் தான் ஒரு கேடு… என்று நினைத்த குறிஞ்சி…

தனக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பம் இல்லை என்றுவிட்டாள் பிரபுவிடம்…

சரியென்று, சற்றுநேரம் யோசித்த பிரபு…

“இன்னைக்கு இங்கயே வீட்டில் இருந்து பூஜாவை பார்த்துக்கோ… நான் ஐஸுக்கிட்ட பதமா பேசி கூட்டிட்டு வரேன்…” என்றவன்… “பணம் எதுவும் வச்சிருக்க…” என்று அவளிடம் கேட்க…

தன் கண்களை மூடி திறந்த குறிஞ்சி… அந்த மாதத்திற்கு பஸ்ஸிற்கு என்று ஒரு தொகையை மட்டும் நிறுத்தி வைத்துக்கொண்டு… மீதத்தை எடுத்து அவனிடம் தந்துவிட்டாள்…

புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்ட பிரபு… உள்ளே சென்று தயாராகி ஐஸ்வர்யாவுடன் வெளியே சென்றுவிட்டான்…
________________________________

வீட்டில் குறிஞ்சி பூஜாவுடன் இருக்க… இரவு ஒருமணிக்கு பிரபுவுடன் வீடு திரும்பிய ஐஸ்வர்யா…

குறிஞ்சியிடம், “நாளைக்கு உன்கூட ஈத்தன் சார் வீட்டுக்கு நானும் மாமாவும் வரோம்… என் அம்மாக்கிட்ட கூட இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம்னு மாமா சொல்லி இருக்கார்… நீயும் யார்கிட்டேயும் பேசாத… அது ஈத்தன் சாருக்கு தான் ஆபத்து… அவரோட பர்சனல்ல நீ பாட்டுக்கும் கடைப்பரப்பாத…”, என்று குறிஞ்சிக்கே புத்திமதி கூறிவிட்டு அறைக்குள் செல்ல…

வந்த காரியம் இவ்வளவு சுலபமாக நிறைவேறியதில் குறிஞ்சிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இன்று மதியம், ஐஸ்வர்யாவுடன் மாலிற்கு சென்றிருந்த பிரபு, அவளுக்கு பிடித்த மேக்கப் பொருட்கள் சிலதை வாங்கிக்கொடுத்து அவளை மகிழ்வித்து இருந்தவன்… 

குறிஞ்சி சென்ற வழியிலேயே சென்று, ‘அவளுக்கு பிடித்த ஈத்தனுக்கு நம்மால் உதவ முடிந்ததே பெரிய விஷயம்… அதை நிச்சயம் நாம் செய்ய வேண்டும்’ என்று அவள் மனதில் நன்கு ஏற்றிவிட… 

அதிசயமாக ஐஸ்வர்யா, “ஈத்தனை நினைச்சா ரொம்ப பாவமா தான் மாமூ இருக்கு… ஆனா குழந்தை பெத்து கொடுத்தா குறிஞ்சி உடம்பு எல்லாம் மாறிப்போயிடும் இல்ல… எப்படி அவளுக்கு நாம திரும்ப கல்யாணம் செய்து வைக்க முடியும்… யார் ஏற்கனவே குழந்தை பெத்தவளை கல்யாணம் செய்துக்க வருவாங்க… அவ தான் லூசு மாதிரி பேசறான்னா… நீங்களும் வேற… இதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை” என்று கூறிவிட…

இந்த லூசு எதுக்கு இன்னைக்குன்னு பார்த்து அறிவா பேசுது என்று யோசித்த பிரபு…

“அவளை ஏதோ எல்லாரும் கட்டிக்க வரிசையா இருக்க மாதிரி சும்மா பேசாத அம்மூ… அவ என்ன உன்னை மாதிரி அழகியா… ஏதோ ஸ்லேட்டு பென்சில் மாதிரி ஒரு உடம்பை வச்சிக்கிட்டு… டிபி வந்தவ மாதிரி சுத்திட்டு கிடக்கிறா…” என்று முகத்தை கேவலமாக வைத்துக்கொண்டு கூற…

ஐஸ்வர்யா இதிலேயே மொத்தமாக ஃபிளாட்…

மேலும் அதை அதிகரிக்கும் விதமாக பிரபு, “அப்படியும் அவ மூஞ்சிக்கு எவனாவது வந்தாலும்.. அவ அம்மா சாந்தினி, உன் அம்மாக்கு செய்த துரோகத்தை கேள்வி பட்டாலே ஓடிடுவானுங்க…” என்றவன்…

“அந்த சாந்தினி பண்ண பாவத்துக்கு எப்படியும் நாம தான் இவளை காலம் முழுவதும் சுமந்தாகனும்…”, என்று… சாந்தினி மேல் ஐஸ்வர்யாவிற்கு இருக்கும் வன்மத்தை நன்கு தூண்டிவிட…

ஐஸ்வர்யாவிடம் அது நன்றாக வேலை செய்தது…

“உண்மை தான் மாமூ… அந்த சனியன் உடம்பு நல்லா ஆகி வரட்டும்… அதுக்கு இருக்கு…”, என்றவள்… “அது மாதிரியே அதுப்பொண்ணும்… முறையில்லாமலேயே குழந்தை பெத்து கொடுத்துட்டு… வீட்டிலேயே கிடக்கட்டும்… அப்ப தான் அதுக்கு புத்தி வரும்” என்று தன் வன்மம் மொத்தத்தையும் இதன் மூலம் தீர்த்துக்கொள்ள அவள் பார்க்க…

பிரபுவின் வேலை சுலபமாக முடிந்து இருந்தது…

குறிஞ்சியை வைத்து தான் அந்த வீட்டின் நிதிநிலைமை கடன் இல்லாது சீராக ஓடிக் கொண்டிருப்பது… லோகேஸ்வரிக்கும், ஐஸ்வர்யாவிற்கும் வேண்டுமானால் இருக்கும் குரோதத்தில் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் பிரபுவிற்கு அது நன்கு தெரியுமே… 

குறிஞ்சியின் பிடியை அவ்வளவு எளிதில் அவன் விட்டுவிடுவானா என்ன…?

இந்த குழந்தை மேட்டரை வைத்தே ஆயுசுக்கும் அவளை தங்களுக்கு உழைத்து கொட்ட வைத்துக்கொள்ள பிளான் போட்டு இருந்தவன்… ஈத்தனிடம் இருந்தும் பலமாக ஏதாவது கறந்துவிட வேண்டும் என்று கண்ணாக இருந்தான்…
________________________________

❤️அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story