27.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
Important Disclaimer*
The information provided in this chapter is for general informational purposes only and should not be considered as medical advice. Consult a qualified healthcare professional for personalized advice and treatment.
This chapter discusses sensitive and personal topics related to reproductive health and fertility. Reader discretion is advised.
This is a work of fiction. Any resemblance to real events, individuals, or circumstances is purely coincidental.
The information provided is intended for educational purposes only and should not be used as a substitute for professional medical advice or treatment.
அத்தியாயம்-27
இரண்டு பக்கமும் கதவு வைத்து, நடுவில் இரண்டையும் இணைத்து தாழ்ப்பாள் போட்டு பூட்டும் முறைக்கொண்ட… அந்தக்கால வீடு அது…
அதில் இரண்டு கதவையும் ஒருசேர திறந்த ஈத்தன்… அவன் உயரத்திற்கு சற்று குனிந்து உள் நுழைந்தவன்…
நேராக போடப்பட்டிருந்த கட்டிலை பார்த்து, “காட்! பெட் ரூம் போலயே இது…” என்ற நினைப்பில் அடுத்து முன்னால் வைக்க சென்ற அடியை அப்படியே நிறுத்தி…
தனிப்பட்ட அறை என்பதால் வெளியேறும் எண்ணத்தில் பட்டென்று வாயில் பக்கம் திரும்பிவிட்டவன்… மறுகணம்… “வெயிட்… வாட்…?!” என்று அப்படியே யூ டர்ன் அடித்து உட்புறமே திரும்பிவிட்டு இருந்தான்…
அவனுடைய கண்கள் அன்னிச்சையாக அவ்வறையின் அனைத்து பக்க சுவர்களையும் வேக வேகமாக படமெடுத்து அவனுடைய மூளைக்கு அனுப்ப தொடங்கிவிட… அவனின் வலது கரம் தன்னால் உயர்ந்து அவனின் இடதுபக்க மார்பில் அழுத்தமாக பதிந்து இருந்தது… விட்டால் வெளியே எகிறி குதித்துவிடும் அளவிற்கு அல்லவா அவனின் இதயம் அங்கு துடிக்க ஆரம்பித்துவிட்டு இருக்கிறது…
அறையின் சுவர் என்ன நிறத்தில் இருக்கின்றது என்று கூட பார்க்க முடியாத அளவிற்கு… ஒரு மில்லிமீட்டர் இடைவெளி கூட விடாமல்… அவனும் ஈஷாவும் தான் புகைப்படங்களாக அங்கு நிறைந்து இருந்தனர்…
குறிஞ்சியின் உலகம் அது…!
குறிஞ்சி மட்டுமே அறிந்த உலகமும் கூட…!
ஆனால் இனி…?
மெல்ல அதனுள் தன் அடிகளை எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தான் ஈத்தன்.
ஈஷா பிறந்த அன்று அவளுடைய விரலை பற்றியப்படி ஈத்தன் முதன் முதலாக எடுத்திருந்த புகைப்படத்துடன், “Hi darlings, I want to share something special with you all. My world has a new melody. Meet my daughter, Eesha Aurora, my tiny queen. - Ethan Samaravel Christopher” என்று சோஷியல் மீடியாவில் ஈஷாவின் பிறப்பை அவன் அறிவிப்பாக போட்டிருந்த படத்தில் ஆரம்பித்து… இறுதியாக அவனும் ஈஷாவும் ஒன்றாக இசை விழாவில் பங்கெடுத்தது வரை அனைத்தும் அங்கு வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன…
அங்கிருந்த எதுவும் ஈத்தனுக்கு புதிய அனுபவம் இல்லை…
நிச்சயம் அவனுடைய எண்ணற்ற ரசிகை ரசிகர்களில் கொஞ்சம் பேரின் படுக்கையறையாவது இப்படி இருக்கும்…
அதிலும் அவனுடைய பெயரில் ஆரம்பித்து முகம் வரை டேட்டூவே பலர் போட்டு இருக்கின்றார்கள்…
ஏன் தங்களின் காருக்கு வாங்கும் நம்பர் ப்ளேட்டில் கூட அவனுடைய பிறந்த தேதி, வருடம் வரும் படி வாங்குபவர்கள் தொடங்கி… அவனுடைய பிறந்த நாள் அன்று திருமணம் செய்துக்கொள்ளும் ரசிகர்கள் கூட அவனுக்கு உண்டு…
அப்படி இருந்தும், அவனின் இதயய துடிப்பின் ரிதத்தில், புதிதாக ஒரு மாற்றம் இன்று.
மற்றவர்கள் செய்வது வேறு? குறிஞ்சி செய்வது வேறல்லவா?
“காட்… இந்த பொண்ணு என்ன இந்தளவுக்கு மாறிட்டு இருக்கா…?” என்று நினைத்தவனின் மனதை, அந்நிலையிலும் ஈஷாவின் சிறுவயது புகைபடங்கள் அப்படியே உருக்க, நெகிழ்ந்துப்போனவன் இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை…
குறிஞ்சி போலவே அவனின் கரமும் உயர்ந்து, ஈஷாவின் நிழற்படத்தை மெல்ல வருட ஆரம்பித்துவிட்டு இருந்தது…
_______________________________
அன்று,
ஈத்தன் வீட்டு தோட்டத்தில் அமைந்திருந்த, அவன் தாத்தா கட்டிய முருகன் கோவில், அனைத்துவித மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்க…
அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் நாதஸ்வர இசையுடன் கலந்து முருகனின் திருகல்யாண பாடல்கள் ஒலிக்க…
புத்தம் புதிய தங்க ஜரிகை வைத்த வெண்ணிற பட்டு வேட்டியில்… அங்கு மணமகன் கோலத்தில் மனையில் அமர்ந்திருந்த ஈத்தனும்…
அவன் அருகில், உடல் முழுவதும் தங்க நிறத்திலான அசல் தங்கம் கொண்டு நெய்யப்பட்டிருந்த ஜரிகை கொண்ட திருமண பட்டுப்புடவையில்… உடல் முழுவதும் புடவைக்கு ஏற்ப சிறு சிறு மரகதம்(பச்சை) மற்றும் வைர கற்கள் பதித்த கனமான தங்க நகைகள் அணிந்து… தலை நிறைய சரம் சரமாக மல்லிகை பூக்களுடன்… சகல விதமான அலங்காரத்தில்… அமர்ந்திருந்த குறிஞ்சியும்…
ஐயர் கூறும் திருமண வேதங்களை அவருடன் சேர்ந்து கூறியப்படியே… அவர் கொடுக்கும் பொருட்களை யாக குண்டத்தில் போட்டுக்கொண்டு இருந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கவும்… அதற்கு முன்பான சடங்குகளை முடித்திருந்த ஐயர்… இருவரையும் சன்னதி முன்பு நிற்க வைத்து…
ஈத்தன் கரத்தினில் ஒரு காகித்தை தர… ஒருகணம் தன் கண்களை மூடி இறைவனிடம் வேண்டிய ஈத்தன்…
தன் கையில் இருந்த காகிதத்தை பார்த்து…
மண்ணகம் பிறழினும்
மாதிரம் பொய்ப்பினும்
கண்ணிமை போலநம்
காதலைக் காக்குவென்
பொம்மல் விசும்பின்
பெயல் கலந்தேற்ற
செம்புலப் பெயல்நீர்
போல எந்நாளும்
அன்புடை நெஞ்சினில்
வீரமும் கொண்டே
உன்னகம் விழைந்ததை
உறுத்துவென் யானே.
என்று, அவர்கள் வழக்கப்படி மணமகனுக்கான திருமண உறுதியான, ‘இந்தப் பூமியின் சுழற்சியே தறிகெட்டுப் போனாலும், திசைகள் அனைத்தும் தடம்மாறிப் போனாலும் கண்ணிமையைப் போல நான் நமது காதலை நெறிகெடாமல் காப்பாற்றுவேன். திரண்ட மேகங்கள் பொழிந்த மழைநீர் கலந்ததால் குழைந்த செம்மண் நிலம்போல எந்நாளும் உன்மேல் கொண்ட அன்பினால் குழைந்த என் நெஞ்சில் வீரமும் மிக்கவனாக உன் உள்ளம் விரும்பும் அனைத்தையும் நான் ஈடேற்றுவேன்’, என்ற பொருள் பொதிந்த உறுதியை முருகர் முன்பு எடுத்து முடிக்க…
அடுத்து குறிஞ்சியின் கரத்தினில் அவளுக்கான காகிதம் தரப்பட்டது…
அவளும் தன் கண்களை மூடி ஒருகணம் இறைவனிடம் வேண்டிவிட்டு திரும்பி அருகில் இருந்த ஈத்தனை பார்த்தாள்…
அவளின் முகத்தையே தான் அவனும் இமைக்காது பார்த்துக்கொண்டு இருந்தான்…
காதலில் கசிந்துருகி இல்லை…
அவனால் அவளுக்கு எதுவும் சிரமம் இருக்கின்றதா என்ற ஆராய்தலுடன் மட்டுமே…
அதில் சிறு புன்னகையுடன் அவனை பார்த்தவள்…
அப்புன்னகை சிறிதும் குறையாமலேயே… தன் கையில் இருந்த காகிதத்தை பார்த்து…
மாமழை உருமின்
பல்லியம் கறங்க
பூமழை பொழிய
வெண்நறை பொங்க
தூமொழி மாந்தர்
ஓராங்கு வாழ்த்த
தூர்பெழு துகளது
விண்ணுற எய்த
ஆர்ப்புடன் பாயும்
பொதுவர் அன்னதோர்
வீரமே தலையா
கொண்டுஎந் நாளும்
இன்னல் உற்றுழி
முன்னின் றகற்றி
கன்னல் அன்னதோர்
கனிமொழி பயிற்றி
அண்ணாந் தேந்திடும்
ஒண்ணுதல் தளரினும்
நன்னெடுங் கூந்தல்
நரையொடு முடிப்பினும்
என்னகம் பிரியா
உயிர்ப்பிணிக் காதலின்
பெண்ணியம் போற்றிட
வேண்டுவென் யானே.
என்று ஈத்தன் குடும்ப வழக்கப்படி மணமகளுக்கான திருமண உறுதியான, ‘கார்மேகங்கள் எழுப்பும் இடியோசை போல பல இசைக்கருவிகள் பேரொலியுடன் முழங்க, பூவிதழ்கள் மழைபோல கொட்ட, வெண்ணிற நறுமணப் புகைப் பொங்கி எழ, தூய உள்ளம் கொண்ட மனிதர்கள் பலரும் ஒன்றுகூடி வாழ்த்த, நிறைந்து எழுகின்ற புழுதியானது விண்ணைச் சென்று முட்ட, பேரொலியுடன் பாய்கின்ற மாடுபிடி வீரர்களைப் போல வீரத்தையே எந்நாளும் தலைமேற்கொண்டு, எனக்குத் துன்பம் வரும்போது முன்னின்று அதனை நீக்கியும், நீர் புகழும் எனது கண்கள் சோர்வடையும் வேலையில், கரும்பினைப் போல இனிமையான மொழிகளை என்னிடத்தில் பேசியும், நீண்ட எனது கூந்தல் நரைத்துப் போகின்ற முதுமையிலும் என்னைவிட்டுப் பிரியாமல், என் உயிருடன் கலந்த காதலைக் கொண்டவனாக, எனது பெண்மையைப் போற்றவேண்டும் என்று நான் உம்மை வேண்டுகிறேன்’, என்று பொருள் பொதிந்த உறுதியை முருகர் முன்பு எடுத்து முடித்திருந்தாள்…
அடுத்து அவர்கள் இருவரின் கையிலும் ஐயர், சிகப்பு ரோஜா மற்றும் குண்டு மல்லி கொண்டு நெருக்கமாக பின்னப்பட்டிருந்த மலர் மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள கூறியவர்… அதைத்தொடர்ந்து கடவுளின் பாதத்தில் இருந்து எடுத்துவந்த செந்தாமரை மலர் மாலைகளையும் இருவரையும் மாற்ற வைத்து…
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
என்றப்படியே, மாங்கல்யம் கோர்க்கப்பட்ட தடிமனான மஞ்சள் கயிற்றை ஈத்தன் கையில் தந்து இருந்தார்…
அங்கு நடக்கும் காட்சிகள் ஒன்று விடாமல் அனைத்து பக்கமும் இருந்தும் காணொளியாக்கப் பட்டுக்கொண்டிருக்க…
“சாரி… சாரி கேர்ள்…” என்று மெல்ல அவளின் செவியோரம் கூறியப்படியே… அவளின் கழுத்தை சுற்றி தன் கரங்களை பின்புறம் எடுத்துச்சென்றிருந்த ஈத்தன்… முதல் முடிச்சினை போட ஆரம்பிக்க…
ஈத்தனின் மூச்சுக் காற்றிலேயே அவனின் பதட்டத்தை உணர்ந்துக்கொண்டிருந்த குறிஞ்சி…
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க சார்… ப்ளீஸ் ரிலாக்ஸா இருங்க… நீங்க இங்க தப்பு எதுவும் செய்யலை…” என்று மெல்ல அவனின் நீல கண்களை பார்த்தப்படி கூற…
அதில் சற்று சீரான ஈத்தன் “தேங்க்ஸ் கேர்ள்…” என்று அவளின் கண்களை பார்த்தப்படியே அடுத்த முடிச்சினை போட்டு இறுக்கியவன்… தன் கரங்களை விலக்கிக்கொள்ள…
அவன் கையில் பூ, குங்குமம் என்று வரிசையாக கொடுக்கப்பட்டன…
அனைத்து சம்பிரதாயங்களும் முடிய… இறுதியாக இருவரும்… கிருஸ்துவ முறைப்படி மோதிரமும் மாற்றிக்கொண்டனர்…
"Two hearts, one love, forever entwined” என்று இருவரின் மோதிரங்களிலும் உட்புறம் பிரிண்ட் செய்யப்பட்டிருக்க… மேலே “Ethan Samaravel Christopher”, என்று சிறிய எழுத்துக்களினால் குறிஞ்சி மோதிரத்திலும்… “Kurinji Malar” என்று ஈத்தனின் மோதிரத்திலும் எழுதப்பட்டு இருக்க…
அதுவும் புகைப்படமாகவும்… காணொளியாகவும் சேமிக்கப்பட்டு இருந்தது…
குழந்தை பிறந்தப்பிறகு எதிர்காலத்தில்… ஈத்தன் செய்யப்போகும் விஷயங்கள் எதிர்பாராத விதமாக வெளியே வந்தாலோ… அதன் மூலம் ஏதேனும் சட்ட ரீதியான விசாரணைகளை அவனுக்கு வைத்தாலோ… அதை எல்லாம் சமாளித்து அவன் எளிதாக வெளியே வர… திருமண நடந்ததற்கான ஆதாரங்கள் எல்லாம் வைத்திருப்பது நலம் என்று எப்பொழுதும் போல் வழக்கறிஞர் ஈத்தன் தலையில் குண்டை தூக்கிப்போட்டு விட… இம்முறையும் குறிஞ்சி தான் ஈத்தனை சமாதானம் செய்து சரி சொல்ல வைத்து இருந்தாள்…
“Lord, Please show me mercy… நிறைய தவறுகளை நான் தெரிஞ்சே செய்யறேன்… என்னுடனே இருங்கள்” என்று இறைவனை துணைக்கு அழைத்து… உடன் வைத்துக்கொண்டே… அனைத்தையும் ஈத்தன் செய்து முடித்திருந்தான்…
🟥அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக