24.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
என்ன கூறுகின்றாள் இவள்…
இந்த கண்ணீர் எனக்காகவா?
அதிர்ந்துப்போனவன்…
சில வினாடிகளில்… அவள் இன்னுமே அழுதுக்கொண்டிருப்பது புரிய…
“ஹேய் கேர்ள்… இங்க பாரு… எனக்கு ஒன்னும் இல்லை…” என்று முன்னேறிய ஈத்தன்… “வந்து உட்காரு முதல்ல…” என்று அவள் கைப்பற்றி அழைத்து சென்று அமர வைத்து… அங்கிருக்கும் கண்ணாடி பாட்டிலை திறந்து அவளுக்கு குடிக்க நீரை தர…
அதுயெல்லாம் குறிஞ்சியின் கண்களுக்கு தெரியவே இல்லை…
அன்னையை காணோம் என்று தேடி அலையும் குழந்தை… அவர் கிடைத்ததும் அவரிடம் சண்டைக்கு கிளம்புமே… அந்த மனநிலையில் தான் இருந்தாள்…
அதற்கெல்லாம்… யார் கொடுத்த உரிமை அவளுக்கு என்று தான் தெரியவில்லை…
கண்களால் அவனை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தவாரே… அழுதுக்கொண்டே இருந்தாள்…
அவளின் பயத்தை புரிந்துக்கொண்டிருந்தவன், சமாதானமாக, “இங்கப்பாரு கேர்ள்… எனக்கு ஒன்னும் இல்லை… பிளீஸ் ரிலாக்ஸ் ஆகு… தண்ணி குடி… இதுக்கெல்லாமா அழுவாங்க… I’m perfectly alright…” என்றுக்கூற…
அதற்கு, ‘இல்லை…’ என்று பலமாக தலையாட்டி மறுத்தவள்…
“நீங்க பொய் சொல்றீங்க… நீங்க நல்லா இல்லை… நான் நம்ப மாட்டேன்…” என்றாள் உறுதியாக…
அதில் ஈத்தனின் புருவங்கள் இரண்டும் மேலே உயர்ந்து இருந்தது…
அதைத்தொடர்ந்து, அவனை பார்த்து, “எப்படி இளைச்சு போயிட்டீங்க” என்று குறிஞ்சி வருத்தப்பட ஆரம்பித்து விட...
ஈத்தனுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை… அப்படியே அமர்ந்து இருந்தான்…
அவளின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும், அவனுக்கான அவளின் அன்பை உணர்ந்தவனுக்கு… அவள் மிகவும் புதிதாக தெரிந்தாள்…
செய்த சின்ன உதவிக்கே… என்மேல் இவ்வளவு அக்கறையும்… பாசமும்… வைத்திருக்கிறாளே… என்று நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனான்…
பின்னே… அவ்வீட்டில் அவன் உதவி செய்யாத நபர்களே கிடையாது… ஆனால் யாருமே குறிஞ்சியை போல் அவனை பார்த்ததும் நடந்துக்கொள்ளவில்லையே…
‘கைண்ட் அண்ட் ஸ்வீட்’ என்று அவளின் மேல் அவன் வைத்திருந்த அனுமானம் அதிகரித்துக்கொண்டே செல்ல…
அவளோ நான் அதற்கெல்லாம் மேல் என்று அன்று நிருபித்து இருந்தாள்…
“நான் இப்ப உங்கக்கிட்ட ஒன்னு கேட்க போறேன் சார்… நிச்சயமா உங்களுக்கு அது கோபத்தை வரவைக்கும்… அதுக்கு என்னை நீங்க திட்டனும்னா எவ்ளோ வேண்டும்னாலும் திட்டிக்கோங்க…”, என்று ஆரம்பித்தவளின் பலமான பீடிகையிலேயே…
அடுத்து அவள் என்ன கேட்க போகின்றாள் என்று ஈத்தனுக்கு புரிந்துப்போக…
அவனை பார்த்த குறிஞ்சி, “தயவு செஞ்சு, நான் கேட்க போறதுக்கு, எனக்கு பதில் மட்டும் சொல்லிடுங்க சார்…” என்றாள்… கெஞ்சலாக…
அதில், “காட்… நோ…” என்ற ஈத்தனின் வார்த்தைகளில்… அவன் நினைத்த அளவுக்கு அழுத்தம் வரவில்லை…
அது குறிஞ்சிக்கு தைரியம் கொடுக்க…
“நீங்க கல்யாணம் செய்துப்பீங்களா, மாட்டிங்களா?” என்று பட்டென்று கேட்டவள்…
“ப்ளீஸ்… ப்ளீஸ்… ஆமாம்… இல்ல இல்லை… சின்ன வார்த்தை தான் பதில்… சொல்லிடுங்க” என்று கெஞ்ச…
இப்பொழுது அழுத்தமாக அவன் அவளை பார்த்தான்…
குறிஞ்சியும் எனக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் என்று பாவமாக தன் சிறிய முகத்தை மேலும் சிறிதாக்கி வைத்துக்கொண்டு, அவன் முகத்தை பார்க்க…
அதில் போனால் போகின்றது என்று…
“நோ…” என்றான் ஈத்தன்.
அதற்கு குறிஞ்சி, “இந்த நோ… என் கேள்விக்கான பதிலா… இல்லை எனக்கா சார்…” என்று தெளிவுபடுத்திக்கொள்ள கேட்க…
மண்டையெல்லாம் சூடாகிவிட்டது ஈத்தனுக்கு…
அதில், “காட்…” என்று தனது இடது கையால்… முன் தலை முடியை மொத்தமாக அப்படியே கோதிவிட்டவன்…
“உன்னோட கேள்விக்கான பதில் தான் கேர்ள். இதுக்குமேல இதை பத்தி என்கிட்ட கேட்காத…? இவ்வளவு தான் உன் லிமிட்…” என்றான் நல்லமாதிரியாகவே…
அதில் தன் கண்களை அழுத்தமாக ஒருகணம் மூடி திறந்தவளுக்கு… அடுத்து பேச போவதை நினைத்து படபடப்பாக வந்தது…
ஏசியில் மட்டுபட்டிருந்த வியர்வை மீண்டும் முத்து முத்தாக முகம் முழுவதும் அரும்ப…
“நான் உங்களுக்கு பேபி பெத்து தரேன் சார்… தயவு செஞ்சு வேண்டாம் சொல்லாம வாங்கிக்கோங்க” என்று விட்டாள் பட்டென்று…
அதற்கு “வாட்…” என்று அதிர்ந்த ஈத்தனின் கையில் இருந்த கண்ணாடி பாட்டில் வழுக்கி கீழே விழ செல்ல…
சட்டென்று தன் பிடியை அதில் இறுக்கியவன்… முன்னிருந்த மேஜையில் அதை வைத்துவிட்டு… குறிஞ்சியை வார்த்தைகளற்று பார்க்க…
“எனக்கு தெரியும் சார்… நீங்க உங்க அம்மா அப்பாவ எவ்ளோ மிஸ் பண்ணுவீங்கன்னு…” என்றவளின் வார்த்தைகள் ஈத்தனை அப்படியே சுக்கு நூறாக உடைக்க பார்த்தன…
“உங்களுக்கு கிடைச்ச அனுபவங்களால் உங்களால் யாரையும் முழுசா நம்ப முடியலை… அப்படி தானே…?” என்று அவன் கண்களை பார்த்தவள்…
“அதேநேரம் உங்களால் தனிமையிலும் இருக்க முடியாது சார்… உங்க குணத்துக்கு அது செட் ஆகாது… அதுமட்டுமில்லாமல் நீங்க ஏன் தனிமையில் இருக்கனும்… உங்களுக்கு என்ன இல்லை… எவ்ளோ நல்லவங்க நீங்க… சந்தோஷமா இருக்க வேண்டாமா…?” என்று கேட்டவள்…
“நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கனும்… இனி இப்படி பொய்யா எல்லாம் நீங்க சிரிக்க கூடாது… உண்மையா சிரிக்கனும்… நிறைய சிரிக்கனும்… சிரிச்சுட்டே இருக்கனும்…” என்றவள்…
“நான் உங்களுக்கு குழந்தை பெத்து தரேன். வாங்கிக்கோங்க” என்று ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க…
ஈத்தனிடம் பெரும் அமைதி…
அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுள் ஆழமாக… மிக ஆழமாக பயணித்துக்கொண்டு இருந்தன…
அவள் கூறிய அனைத்துமே நிதர்சனமான உண்மைகள் ஆகுமே…
உள்ளிருந்து கிளம்பிய அவனின் உணர்வுகள், தொண்டை குழிக்குள் மேலும் கீழும் பயணித்து, வெளியேற முடியாமல் தவித்தன…
கடும் தாகத்தில் இருந்தவன் கண்முன் தீடிரென பெரிய தடாகம் தென்பட…
அள்ளி குடித்து தாகம் தணிவானா… இல்லை வேண்டாம் என்று கண்களை மூடிக்கொள்வானா…?
அச்சமயத்திலும் ஈத்தன், உரிமையில்லாததை பருக விருப்பம் இல்லாது… கண்களை மூடிக்கொள்ளவே நினைத்தான்…
“நீ நிறைய தேவையில்லாமல் பேசுற கேர்ள்… நீ நினைக்கிற மாதிரி இங்க எதுவும் இல்லை… கிளம்பு… இனி இங்க வராத… எதுவும் வேண்டும்னா ட்ரஸ்ட் மேனேஜர் கிட்ட சொல்லி விடு…” என்றான்… முடிவாக…
அந்நேரத்திலும் அவனின் அந்த கடமை தவறாத நற்பண்புகள்… அவனின் இறுதி வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்க… எவ்வாறு அவனை தனியாக விட்டு செல்வாள் குறிஞ்சி…
“நான் சொன்னதுக்கு ஓகே சொல்லுங்க சார்… நான் கிளம்பறேன்… நீங்க சொன்னதை எல்லாம் நான் மட்டும் கேட்டேன் இல்ல… நீங்களும் நான் சொல்றதை கேளுங்க” என்றாள் பிடிவாதமாக…
அதில் சற்று தன் பொறுமையை இழந்து, “கிரேஸி மாதிரி பிஹேவ் பண்ணாத குறிஞ்சி…” என்ற ஈத்தன்… “அன்னைக்கு, டாக்டர் சொன்னதை எல்லாம் கேட்ட தானே நீ… நான் அதுக்கு எளிஜிபில் கிடையாது… அப்புறம் எப்படி…?” என்றான் கேள்வியாக…
அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டிருந்த குறிஞ்சியும்… இப்பொழுது ‘என்ன செய்வது’ என்று குழம்பி முழிக்க…
அதில், சிறு புன்னகையுடன் அவள் கன்னத்தில் லேசாக தட்டிய ஈத்தன், “தேவையில்லாத எதையும் சிந்திக்காமல்… உன் வேலையை மட்டும் பாரு கேர்ள்…” என்றான் அவள் முகம் பார்த்து…
அது எப்படி சுயநலமாக தன் வேலையை பார்க்க அவள் கிளம்புவாள்…
“வேற ஏதாவது வழி இருக்கும்… யோசிங்களேன் சார்… கண்டிப்பா கிடைக்கும்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்றாள் தன் கண்களை சுருக்கி… கெஞ்சும் குரலில்…
இப்படி அவனுக்காக அவனிடமே கெஞ்சுபவளிடம் எப்படி அவனால் கடுமையாக பேச முடியும்…
“வழி கிடைச்சாலும்… நான் ஒத்துக்கனும் இல்ல கேர்ள்…?” என்றான் ஈத்தன்…
“ஏன்… ஏன்… ஒத்துக்க மாட்டீங்க… நீங்க கேட்ட மாதிரியே… என்னுடைய முழு அர்ப்பணிப்பையும் போட்டு தான்… உங்களுக்கு நான் குழந்தை பெத்து தருவேன் சார்… காசுக்காக எல்லாம் நிச்சயம் கிடையாது… நீங்க எனக்கு ஒரு ரூபாய் கூட தர வேண்டாம்… சத்தியமா தான் சொல்றேன்…” என்ற குறிஞ்சி…
“அன்னைக்கு உங்க பாட்டிம்மா சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் சார்… அவங்க ஆசைப்படி நீங்க கொஞ்சமும் நடக்க மாட்றீங்களே… அவங்க உங்களுக்கு நல்லது தானே நினைப்பாங்க…” என்றவள்…
“நீங்க இப்படி மன அளவில் கஷ்டப்படுறதை பார்த்தா… உங்க பாட்டியோட ஆன்மா எப்படி சார் நிம்மதியா சாந்தி அடையும்…” என்றுக்கேட்க…
என்ன கூறுவான் ஈத்தன்…
அதிலும் உமையாளின் அந்த ‘தனிக்கட்டையா மட்டும் நின்னுடாதையா… பாட்டி நெஞ்சு வேகாது…’ என்ற இறுதி வினாடி தவிப்புகள்…
அதைத்தொடர்ந்து நடப்பதையெல்லாம் நினைத்தவன்…
தன்னிரு கைகளிலும் முகத்தை அப்படியே புதைத்துக்கொண்டான்…
📌அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக