சங்கீதம் -25.3
குழந்தைக்காக தான் எல்லாம் என்னும் நிலையில், குறிஞ்சியிடம் அவளுக்கு முழு உடல் பரிசோதனை ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கேட்டிருந்த ஈத்தன்…
சாந்தினி இருந்த மருத்துவ மனையிலேயே அதை செய்ய கூறி… அந்த மருத்துவ அறிக்கையில், அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வந்ததும்…
அடுத்த முகூர்த்தத்திலேயே ரெஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்ய கூறிவிட்டு இருந்தான்…
அதற்கு இடைப்பட்ட காலத்தில்… மீண்டும் ஐஸ்வர்யாவையும், பிரபுவையும் வேறொரு இடத்திற்கு குறிஞ்சியுடன் வரவழைத்திருந்த ஈத்தன்…
திருமண பதிவிற்கு பிறகில் இருந்து குறிஞ்சி அவனுடைய முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிருக்கும் என்றும்… அதற்கு பிறகு அவள் குழந்தை தரித்து… குழந்தையை பிரசவித்து… அதற்கு பிறகும் ஆறு மாதங்கள் அவள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றவன்… அதற்கு பிறகு தான் அவளை வெளியே விடுவேன்… அதுவரை அவளை அவர்களால் பார்க்க முடியாது என்றுக்கூற…
“கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிடுமே சார். அதுவரை அவளை யாரும் எங்கன்னு கேட்டா நாங்க என்ன சொல்றது…” என்ற ஐஸ்வர்யா… “தாய்ப்பால் எல்லாம் எதுக்கு சார்… அதைவிட நல்ல நல்ல பவுடர் எல்லாம் இப்ப வந்துடுச்சே… ஈசியா கலந்து கொடுத்துக்கலாம்…” என்றுக்கூற…
உடனே பதறி குறுக்கிட்ட குறிஞ்சி, “நான் ஏற்கனவே ரொம்ப நாளா… அம்மாக்காக… கனடாக்கு வேலைக்கு போக ட்ரை செய்துட்டு இருந்தேன்… அதுப்படி எனக்கு கனடாவில் வேலை கிடைச்சிடுச்சுன்னு சொல்லிடலாம் அக்கா… யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றாள்…
‘என்னது இவ கனடாக்கு வேலைக்கு போக பார்த்தாளா…’ என்று ஐஸ்வர்யா அவள் புறம் திரும்ப…
அதற்குள் கிடைத்தது சாக்கென்று நடுவில் புகுந்த பிரபு, “கனடாவில் வேலைனா லட்ச கணக்கில் சம்பளம் வருமே குறிஞ்சி… இங்க அத்தை பணம் எங்கன்னு கேட்டா என்ன சொல்றது… இங்க நீ வாங்கும் இருபதாயிரம் மாதிரின்னா பரவாயில்லை… நான் இரண்டு வேலை பார்த்து கூட அதை சமாளிச்சுடுவேன்… இது முடியாது டா…”, என்று பதமாக ஈத்தன் முன்பு பிட்டை போட…
அதற்கு குறிஞ்சியோ, “அது ஈத்தன் சார் கிட்ட நான் வாங்கின மருத்துவ கடனை அடைக்க கொடுக்கறேன்னு சொல்லிக்கலாம் மாமா… பிரச்சனை எதுவும் இல்லை” என்றாள் பட்டென்று…
அதில் குறிஞ்சியின் வாயிலேயே ‘தத்தி தத்தி’ என்று குத்த வேண்டும் என்று இருந்தது பிரபுவிற்கு…
ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் ஈத்தனே… “நான் மன்த்லி மன்த்லி குறிஞ்சி பேரில் மணி ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்… இந்த ஐடியாவே யூஸ் பண்ணிக்கலாம்” என்று இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல் கூறி இருந்தான்…
அதில் அதிர்ந்த குறிஞ்சி அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுக்க…
“ஜஸ்ட்… சின்ன காம்பன்சேஷன் தானே குறிஞ்சி…” என்ற ஈத்தன்… குறிஞ்சியை அடக்கிவிட்டான்…
அதற்கு பிறகு தான் பிரபுவிற்கு நிம்மதியானது…
நிச்சயம் இப்படியான தருணங்கள் நிறைய வரும் என்று எதிர்பார்த்து தானே அவன் உதவ முன்வந்ததே…
அதிலும், ‘இந்த ஒரு விஷயத்தை வச்சே இந்த அமுல் பேபிக்கிட்ட நிறைய கறந்துடனும்…. முதல்ல குறிஞ்சி பிள்ளை உண்டாகட்டும்… அதுக்கு அப்புறம் இவன் சொத்துல ஒரு பங்கு நமக்கு தான்… இந்த பங்களாவ கூட வாங்கிடனும்… செமையா இருக்கு’ என்று விதவிதமாக பிரபு கனவு காண…
பிஸ்னஸில் சிறுத்தையான சித்ரலேகாவின் மகனான ஈத்தன் அங்கு அவனுக்கு ஒரு பெரிய செக் ஒன்றை அழகாக வைத்து இருந்தான்…
பிரபுவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் சேர்த்து ஒரு ஃபைலும்… குறிஞ்சிக்கு மட்டும் தனியாக ஒரு ஃபைலும் என்று தந்தவன்… அதில் கையெழுத்துப்போட்டு தரக்கூறி கேட்க…
என்ன இது என்று வாங்கிப் பார்த்த பிரபுவிற்கு பயங்கர அதிர்ச்சி…
“என்ன சார் இது… உங்கக்கிட்ட நாங்க எப்ப அஞ்சு கோடி கடன் வாங்கினோம்…”, என்று பிரபு பதற… ஐஸ்வர்யாவும் அதே நிலையில் தான் இருந்தாள்…
“ஜஸ்ட் ஒரு சேஃப்டிக்கு… சின்ன ஃபார்மால்டி தான்… எதிர்காலத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது இல்ல… அதுக்கு தான்” என்ற ஈத்தன்…
“ராகவ்…” என்று குரல் கொடுக்க…
உள்ளிருந்து ஒருவன் இரண்டு சிறிய வகை ப்ரீஃப்கேஸூடன் வெளிவந்தான்…
பார்க்கும் பொழுதே பயப்பட வைக்கும் தோற்றத்தில் இருந்தவனிடம்…
“நீ எக்ஸ்ப்ளெயின் பண்ணு…” என்று கூறிய ஈத்தன்… “டூ மினிட்ஸ்…” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்…
________________________________
குறிஞ்சியை பற்றியும், அவளுடைய குடும்பம் பற்றியும்… ஈத்தன் ராகவ்விடம் தான் முழுதாக விசாரிக்க கூறி இருந்தான்…
சிட்டி முழுவதும் இருக்கும் பெரிய புள்ளிகளுக்கு எல்லாம் அவன் தான் பல ரகசிய வேலைகளை பார்த்து கொடுப்பது…
என்ன ஆனாலும் விஷயம் வெளியே வராது…
ஒருவரின் விஷயத்தை அவன் வெளியே கசிய விட்டாலும்… மீதம் இருப்பவர்கள் அவனை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்பதால்… அவனை நம்பி ஈத்தன் சென்று இருந்தான்…
நிறைய அண்ட்ர் கிரவுண்ட் வேலைகளை பார்த்தாலும்… பெண்கள், குழந்தைகள், கஞ்சா போன்றவை பக்கம் அவன் செல்லவதில்லை… கொஞ்சம் நல்லவன்… அதில் தான் ஈத்தன் அவனை தேர்ந்தெடுத்தது…
பள்ளி, கல்லூரி, வேலையிடம் அனைத்திலும் குறிஞ்சியை பற்றி ராகவ் விசாரிக்க… அனைவருமே அவளை குறித்து மிகவும் நல்லவிதமாக கூறியிருந்தனர்…
அடுத்து குடும்பம் குறித்து விசாரணை என்று வரும் போது… கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அவர்கள் இப்பொழுது இருக்கும் அதே வாடகை வீட்டில் தான் வசித்து வருவதால்… அத்தெருவில் இருந்தவர்களை மட்டுமே விசாரிக்க முடிந்தது…
சொந்த ஊர் பற்றிய தகவல்கள் எதுவும்… அங்கு போக்குவரத்தே இல்லாததாலும்… பெரியவர்கள் எல்லாம் மறைந்து பல வருடங்கள் ஆனதாலும்… அங்கு சென்றும் கிடைக்கவில்லை…
முன்பு இவர்கள் சென்னையில் வசித்து வந்த இடத்திலும் பெரிய ஷாப்பிங் மால் வந்துவிட்டு இருக்க… அங்கும் யாரையும் பிடிக்க முடியவில்லை…
இப்பொழுது இருக்கும் தெருவில் மட்டுமே விசாரிக்க என்று இருந்தது…
தெருவில் இருந்த ஒரு வீடு விடாமல் அனைவருமே சாந்தினிக்கு, லோகேஸ்வரி குடும்பம் தான் அடைக்கலம் கொடுத்ததாகவும்… இப்பொழுது கூட அவருக்கு மருத்துவ உதவிகளை அவர்கள் செய்வதாகவும் பெருமையாக கூறி இருந்தனர்… உடன் பிரபுவின் பெருமைகள் வேறு ஏகப்பட்டது… ஆண் துணை இல்லாத குடும்பத்தை அவன் தான் தன் தோளில் ஒரே ஆளாக பொறுப்புடன் சுமப்பதாக…
பல ஆண்டுகளாக நம் லோகேஸ்வரி அக்கம் பக்கம் சொல்லி வைத்த கதைகளும்… ஏற்படுத்திவிட்டிருந்த பொய் பிம்பங்களும்… நிஜங்களாக உருப்பெற்றுவிட்டு இருந்தன…
பிரபு என்ன வேலையில் இருக்கின்றான் என்று ஐஸ்வர்யாவிற்கு கூட இன்றுவரை தெரியாத நிலையில்… ராகவ் அதை கண்டறிந்து இருந்தான்…
ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ஒருவரிடம் பணியில் இருந்துக்கொண்டிருந்தான் அவன்… அவரும் ‘நல்ல திறமையான பையன்… நாணயமானவன்… பேச்சு திறமை அதிகம்… நல்லா வருவான் எதிர்காலத்தில்’ என்று அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட…
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாகிப்போனது…
பல குடும்பங்கள் போல் தான்… குடும்பத்தினுள் நடக்கும் அரசியல்கள் கடுகளவு கூட வெளியே தெரியாமல் இருப்பது போலவே… குறிஞ்சி மற்றும் சாந்தினியின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள்… அவர்கள் வீட்டின் நான்கு சுவருக்குள்ளே அடைந்துக்கொண்டு இருந்ததின் விளைவு…
வசதியற்றவர்கள் என்பதை தவிர வேறெதுவும் தகவல் கிடைக்கவில்லை… அதுவும் ஏற்கனவே ஈத்தன் அறிந்து இருந்தது தானே…
குறிஞ்சி கூறியிருந்த அந்த ‘பெரிய அவர்’ மாப்பிள்ளையை பற்றி எதுவும் ஈத்தன் விசாரிக்க கூறி இருந்தால்… ஏதாவது மாட்டியிருக்க வாய்ப்பு இருந்து இருக்கும்… அது குறிஞ்சியின் பர்சனலில் அதிகம் கை வைப்பது போல் இருக்கும்… நமக்காக வந்தவளிடம் அதை செய்யக்கூடாது என்று ஈத்தன் விட்டுவிட்டு இருந்தான்…
________________________________
ராகவ் தான் கொண்டு வந்திருந்த இரண்டு பெட்டிகளையும் மேஜை மீது வைத்து… திறந்தவன்…
பிரபுவிடம், “இதில் இரண்டு கோடி இருக்கு… உங்களுக்கு ஒரு கோடியும்… குறிஞ்சி மேடமுக்கு ஒரு கோடியும்… சார் கொடுக்க சொல்லி இருக்கார்”, என்று கூற…
பிரபுவின் கண்களும்… ஐஸ்வர்யாவின் கண்களும்… ஆசையிலும் ஆச்சரியத்திலும் விரிந்துக்கொள்ள…
குறிஞ்சி அதிர்ச்சியில்… தன் வாயினை இரு கைகள் கொண்டு மூடி இருந்தாள்…
அதைவிட தான் பணம் வேண்டாம் என்று கூறியும் ஈத்தன் இவ்வாறு செய்வதில் அவளுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை…
முதலில் பணத்திற்காக அவனுக்கு குழந்தை பெற்று தருகிறேன் என்று வந்திருந்தவளுக்கு… இப்பொழுது அந்த எண்ணமே பிடிக்காமல் போயிவிட்டிருந்தது... வெளியில் ஆயிரம் சொன்னாலும்… ஈத்தன் ஒருவனுக்காக தான் அவள் இதை செய்வதே… அப்படி இருக்கும் போது இப்பொழுது அவன் பணம் கொடுப்பது அசிங்கப்படுத்துவது போல் இருந்தது…
அதில ஈத்தன் சென்றிருந்த அறைப்பக்கம் அவள் திரும்பி பார்க்க…
அதற்குள் ராகவ் பிரபுவிடமும் ஐஸ்வர்யாவிடமும், “சார் பத்தியோ, குழந்தை விஷயம் பத்தியோ… கடுகளவு கூட எங்கேயும் கசியக்கூடாது…” என்று பல கண்டிஷன்களை போட்டவன்… அதை எழுத்து ரீதியாகவும் அவர்களுக்கு காட்டி நன்கு விளக்கியவன்… “இதில் இருக்கும் எதை மீறினாலும்… பண மோசடி வழக்கில் குடும்பத்தோட உள்ளே தள்ளிடுவோம்… வேற எதுவும் எங்களை ஏமாத்த பார்த்தா அங்கேயே வச்சி ஆளையே இல்லாமல் பண்ணிடுவோம்… ராயபுரம் பக்கம் வந்து ராகவ் யாருன்னு விசாரிச்சு பாருங்க…”, என்று பயமுறுத்துவது போல் பேச…
அதில் பயந்த ஐஸ்வர்யா, “மாமூ எனக்கு ரொம்ப பயமா இருக்கு… இதெல்லாம் எதுவும் வேண்டாம்… எனக்கு பிடிக்கலை… வாங்க போயிடலாம்… போயிடலாம்…”, என்று பிரபுவினை போட்டு நச்சரிக்க…
“அமைதியா இரு அம்மூ… நாம ஏன் வெளியே இதைப்பத்தி பேச போறோம்… ஈத்தன் சார் நம்மளை எதுவும் செய்ய மாட்டார்… குறிஞ்சிக்கு ஆதரவா இதை நாம செய்து தான் ஆகனும்…”, என்று நல்லவனாக பேசியவன் கையெழுத்து போட்டுவிட்டு… ஐஸ்வர்யாவையும் போட வைத்து… பெட்டியை தூக்கிக்கொண்டான்…
எடுத்ததும் ஈத்தனின் ஆள், இப்படி மிரட்டுவது போல் பேசுவதில், குறிஞ்சி அரண்டு இருந்தாலும், பிறகு பிரபு மற்றும் ஐஸ்வர்யாவின் குணத்திற்கு இது நல்லது தான் என்றாகிப்போனது…
“சார் பார்க்க ரொம்ப சாஃப்ட் டைப்பா இருந்தாலும்… பரவாயில்லை விஷயத்தில் கரெக்டா இருக்கார்…”, என்று நினைத்தவள்…
தனக்கு கொடுக்கப்பட்ட பேப்பரை எடுத்து பிரித்து படிக்க… அவளுக்கு பிரபுவை காட்டிலும் எண்ணற்ற கெடுபிடிகள்…
ராகவ், ‘திருமணத்தை காரணம் காட்டி ஈத்தனிடம் எதுவும் சுரண்டவோ… இல்லை உரிமை கோரவோ கூடாது… அப்படி செய்தால்…’, என்று அவளையும் மிரட்டும் விதமாக பேச…
அதையெல்லாம் கேட்டப்படியே, சிறு புன்னகையுடன் அனைத்து பக்கத்திலும் தன் கையெழுத்தினை போட்டு கொடுத்துவிட்டாள் குறிஞ்சி…
“குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு பெரிய செட்டில்மெண்ட் ஒன்னு இருக்கு மேடம்…”, என்றப்படியே ராகவ் குறிஞ்சியிடம் இருந்து ஃபைலினை திரும்ப பெற்றுக்கொள்ள…
பிரபுவின் கண்கள் குறிஞ்சி பக்கம் இருந்த பெட்டி மேல் தான்… கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற மனநிலை போய்… உடன் இன்னும் வேறு கிடைக்க போவதாக கூறியதில் பயங்கர குஷி…
ஈத்தனை அவன் நினைத்த அளவிற்கு ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது புரிந்துப்போக… கிடைத்த வரை லாபம் என்று அமர்ந்துக்கொண்டான்… பிழைக்க தெரிந்தவன்….
ஐஸ்வர்யா தான் எதையும் முழுதாக அனுபவிக்க முடியாத மனநிலையில் பயத்துடன் இருந்தாள்…
ராகவ் மீண்டும் உள்ளே சென்றுவிட… ஈத்தன் வெளியே வந்து இருந்தான்…
“சாரி குறிஞ்சி… ராகவ் விட்டு பேசுனதுக்கு…”, என்றவன்… திருமண தேதியை கூறி… அன்று அவளை தயாராக இருக்க சொன்னவன்… ராகவ் வந்து அவளை அழைத்துக்கொள்வான்… அன்று திரும்ப பார்க்கலாம்… என்றுவிட்டு எழுந்துக்கொள்ள…
“சரிங்க சார்…” என்று மூவரும் எழுந்துக்கொண்டனர்…
ராகவ்வும் வெளியே வந்து இருந்தவன்…
குறிஞ்சி இன்னும் பணப்பெட்டியை மூட கூட இல்லாமல் இருந்ததை பார்த்து… அவனே வந்து அவளுக்காக மூடி… தூக்கிக்கொடுக்க…
ஈத்தனை நிமிர்ந்து பார்த்தவள்… “எனக்கு இது வேண்டாம் சார்… நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன் தானே…”, என்றாள் உறுதியாக…
அதற்கு, “இட்ஸ் ஓகே குறிஞ்சி… எடுத்துக்கோ… உனக்கு யூஸ் ஆகும்…” என்ற ஈத்தன்… “உன்னை பத்தி எனக்கு தெரியும் கேர்ள்… இது உன்னோட எதிர் காலத்திற்காக நான் தருவது… நான் நல்லா இருக்கனும்னு நீ நினைக்கிற மாதிரி நான் உனக்காக நினைக்கக்கூடாதா என்ன?”, என்று எவ்வளவோ அவன் கூற… கேட்கவேயில்லை குறிஞ்சி…
‘பெரிய அன்னை தெரசா’ என்று உள்ளுக்குள் பல்லை கடித்த பிரபு…
“அது சின்ன பொண்ணு சார்… உலகம் தெரியாது… நான் அவ பேரில் டெப்பாசிட் பண்ணிடறேன்… நீங்க சொன்ன மாதிரி லேட்டா தான் இதோட அருமை அவளுக்கு புரியும்…”, என்று அவன் அவளின் பணப்பெட்டியையும் தூக்கிக்கொள்ள…
இதற்கு பிறகு என்ன செய்ய முடியும் குறிஞ்சியால்… ஈத்தன் மேல் அத்தனை மன வருத்தமாக இருந்தது…
ஈத்தனை பொறுத்தவரை இது அவன் ஒரு பாடலுக்கு வாங்கும் பணத்தை விட குறைவே…. கோடிக்கணக்கான சொத்திற்கு அவன் சொந்தக்காரன் என்பதை விட… ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரன் என்றால் தான் சரியாக இருக்கும்… அப்பேற்பட்டவன்… தன் வாரிசை சுமக்க இருப்பவளுக்கு விட்டால் இன்னும் கூட கொடுத்து இருப்பான்… ராகவ் தான் குழந்தை பிறந்த பிறகு கொடுக்கலாம்… என்று அடக்கி வைத்து இருந்தான்…
பிரபுவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் கைக்கொடுத்து விடைக்கொடுத்த ஈத்தன்…
குறிஞ்சி இன்னும் பண விஷயத்தில் பிடித்தம் இல்லாத மனநிலையில் இருப்பதை புரிந்து… “எதையும் தேவையில்லாமல் யோசிக்காத கேர்ள்…”, என்று அவளின் கன்னத்தில் தட்டியவன்… “டேக் கேர்…”, என்று அவளை லேசாக தன் ஒருபக்க தோளுடன் அணைத்து… விடைக்கொடுக்க…
‘நாமளும் பணம் வேண்டாம்னு சொல்லி இருந்தா… சார் நம்மளையும் இப்படி ஸ்பெஷலா ட்ரீட் பண்ணி இருப்பார் இல்ல…’ என்று மனம் வெந்துப்போன ஐஸ்வர்யா…. ‘ஃபோனை கூட பிடுங்கி வச்சிக்கிட்டாங்க… ஒரு செல்ஃபி கூட எடுக்க முடியலை…’, என்று நடக்கும் அவ்வளவு பெரிய விஷயத்தை விட்டுவிட்டு… தனி சிந்தினையில் கிடந்தாள்…
அன்றுதான் ஈத்தன், ஐஸ்வர்யாவையும் பிரபுவையும் இறுதியாக பார்த்தது… அதற்கு பிறகு அவன் இன்றுவரையுமே அவர்களை பார்க்கவில்லை…
நடுவில் ராகவ் மட்டுமே பாலமாக இருந்து இருந்தான்… அதுவும் குறிஞ்சி அவனை பிரிந்துச்சென்ற நாள் வரை தான்…
அதற்கு பிறகு அவர்கள் யாரோ, அவன் யாரோ என்று ஆகிவிட்டு இருந்தது…
________________________________
🌸 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Nice..... Ethen kuriji both also pure soul...... Next update for waiting sis ..... U r amazing
பதிலளிநீக்குஈத்தனை ஈசியா ஏமாத்திடலாமுன்னு திட்டத்தோட வந்த பிரபுக்கு சரியான நேரத்துல செக் வச்சிட்டான் அவன்..
பதிலளிநீக்குகுறிஞ்சி அவளோ சொன்ன பொய்யால அவள பத்தி முழுசா தெரியாம போனது அவளோட தப்பு தானே.. இதுல ஈத்தனை குறை சொல்லவே முடியாதே...
பூக்குட்டி வர வெயிட்டிங்
Super. Daily ud kudunga sis
பதிலளிநீக்குNice story. Steady moving
பதிலளிநீக்குWaiting next ud
பதிலளிநீக்குPrabhu evlo kevalama Avan da nee, kurimji thappu pannita ivamga kitta sollamale irukalam,
பதிலளிநீக்குAda paavi... Prabu ipdilam kodava seivan. Avan character first therunjuthu ana ipdi pannuvanu ethirpakala. Ana intha kurinji yen ivlo lusu papa va iruka. Samar paiyanukaga elame seirathu ok than. Ana athuku adutha life ah yosikave matala. Samar paiyane kurinji ya Koda vechu iruntha ipo evlo nalla irunthu irukum. Oru girl baby ku amma kedachu Avalum happy ah irunthu irupa
பதிலளிநீக்குWaiting mam next ud n Ethan eppo than prabhu n iswarya character therinjikkuvan kurinjiku eppo supports iruppan early waiting tat situation
பதிலளிநீக்குnice story expecting more twice and turn with ethan love. kurinji ku ethan mela irukka love pola, ethanuku kurinji mela unconditional love varatha pakkanum
பதிலளிநீக்குSuper sis
பதிலளிநீக்கு