19.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்
முதல் தடவை, ஆட்டோவில் வந்த பொழுதே, திரும்பி செல்லவென்று, அந்த வழியினை மனப்பாடம் செய்துவிட்டிருந்த குறிஞ்சி, பேருந்தில் இருந்து இறங்கி, ஈத்தனுடைய வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டாள். முன்பு போலவே செக்யூரிட்டி அவள் வைத்திருந்த விசிட்டிங் கார்டினை வாங்கி சரிப்பார்த்துவிட்டு, கேட்டினை திறந்து உள்ளே அனுமதித்தவர்… பேட்டரி காரினை எடுத்துவர செல்ல… எதற்கு வீண் சிரமம் என்று அவரிடம் மறுத்தவள்… மெல்ல மாளிகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்… மனதினுள், டிரீட்மெண்ட் ஆரம்பித்த பிறகு எப்படி நிறைய நாள் லீவ் எடுப்பது, வீட்டு வேலைகளை எப்படி சமாளிப்பது, சம்பளத்தை பிடித்துவிட்டால், இதர செலவுகளுக்கு என்ன செய்வது, போன்ற பல சிந்தனைகள்… உடன் ஈத்தன் எந்தளவுக்கு உதவி செய்வான் என்றும் அவளுக்கு தெரியாது… ஆப்ரேஷன் போக மருந்து, மாத்திரை, போக்குவரத்து என்று எவ்வளவோ செலவு இருக்கிறதே… அவசரத்திற்கு வைக்கவோ, விற்கவோ கூட அவளிடம் குண்டு மணி தங்கம் கிடையாதே… மனம் விடுவிடுவென்று கணக்குகள் போட… திடீரென்று முகத்தில் வந்து வேகமாக மோதிய காலை நேர இளந்தென்றலில், தன் சிந்தனையில் இருந்து கலைந்த குறிஞ்சி, குளிரில் சிலிர்த்துவிட தன் கைகளை வரு...