19.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
கீழே வந்த ஈத்தனோ, குறிஞ்சிக்கு பதில் கூற சற்றும் இடம் தராது, “லெட்ஸ் ஈட் ப்ரேக்ஃபாஸ்ட் டூகெதர் குறிஞ்சி. கம் ஆன்…” என்றப்படியே நடக்க… அதில் வேறுவழியின்றி அவனுடன் நடந்த குறிஞ்சி, டைனிங் டேபிளில் அவன் அருகே அமர… முன்பே அவர்கள் இருவருக்கும் தேவையான அனைத்தும் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன… இரண்டு பணியாளர்கள் வந்து இருவரையும் தனித்தனியாக கவனிக்க… குறிஞ்சிக்கு அவ்வளவு சங்கடமாக இருந்தது… எந்த ஊரில் உதவி கேட்டு வருபவர்களுக்கு இத்தனை கவனிப்பு தருவார்கள்… அதிலும் அவள் முன்பு வைக்கப்பட்ட வெள்ளி தட்டும், டம்ளரும் அவளை அப்படி மிரட்டிவிட்டது… அதன்பிறகு தான் மேஜையில் இருந்த உணவு பாத்திரங்கள் அனைத்துமே, கனமான வெள்ளி பாத்திரங்களாக இருப்பதையே குறிஞ்சி கவனித்தாள்… ஈத்தனின் அணுகுமுறை எளிமையாக இருந்தாலும், அவனை சுற்றியுள்ள பொருட்கள் யாவும் அவளின் அடிவயிற்றில் பல பயப்பந்துகளை உருட்டிவிட்டுக்கொண்டே இருக்க… மெல்லிய நடுக்கம் உடல் முழுவதும் குறிஞ்சிக்கு பரவியது… சத்தியமாக அவள் முன்பு வைத்திருந்த வெள்ளி தட்டினை தொட்டு பார்க்ககூட அவளுக்கு விருப்பம் இல்லை… தன் தகுதிக்கு மீறியதாக அவள் அதை நினைத்துக்கொண்டு இருக்க…...