10. சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️



அத்தியாயம்-10


உடலில் மின்சாரம் பாய்ந்துவிட்டது போல் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டு இருந்தாள் குறிஞ்சி.


அதிர்ச்சியில் மூளை சுத்தமாகவே அவளுக்கு வேலை செய்யவில்லை.


ஈத்தனுக்கோ உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது.


கானல் எல்லாம் நிஜமானால் எப்படி தாங்குவான்.


தீயென அவளை துளைக்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.


‘அப்படியானால்? 


புருஷன்… குழந்தைகள்… எல்லாம் பொய்… எதுவுமில்லை…!


இதனால் தான் மதர் சுப்பீரியரிடம் அவளை குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றாள்!


சிறிது நேரம் முன்பு கூட எப்படி எல்லாம் நடித்தாள்’


மூளை வேகவேகமாக ஈத்தனுக்கு வேலை செய்ய…


குறிஞ்சியா இப்படி?


நம்பவே முடியவில்லை அவனால்.


ஒருவேளை கனவு எதுவும் காண்கின்றோமோ என்று கூட அவனுக்கு சந்தேகமாக இருந்தது.


அதில் உடனே எதிரில் நின்றிருந்தவளின் கழுத்தை பார்த்தான்.


மெல்லிய தங்க சங்கிலி ஒன்று மட்டும் சிறிய ஓம் டாலருடன் வீற்றிருந்தது.


தாலி சரடு என்று எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.


சற்றுமுன் அவன் பார்த்ததும் காணோம்.


எப்பொழுதும் புடவையோ சுடிதாரோ, எது அணிந்திருந்தாலும், வெகு ஜாக்கிரதையாக உள்ளே மாங்கல்யத்தை மறைத்து அனைத்து பக்கமும் பின் குத்திவிடுவாள்.


ஈத்தன் வருவதற்கு சற்று முன்னர் தான் படுக்க போவதால், மார்பின் மீது குத்தியிருந்த பின்களை மட்டும் ஜாக்கெட்டில் இருந்து கழட்டிவிட்டு, உள்ளே அவள் நெஞ்சு குழியில் பதுங்கிருந்த மாங்கல்யத்தை தூக்கி ஜாக்கெட் மீது போட்டிருக்க… எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டாள்…


இப்பொழுது மீண்டும் மாராப்பை அவள் போட்டுவிட்டு இருந்ததில் தாலி கயிறு அவளுள் மறைந்துவிட்டு இருந்தது… 


ஈத்தனின் கண்களுக்கு புலப்படவில்லை.


இதை எல்லாம் ஆராயும் பழக்கம் ஈத்தனுக்கு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. 


ஆனால் இன்று விதி அவனை அதை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டதில் நொந்து… அவளுடைய கழுத்தில் இருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டவன்…


பல்லை கடித்துக்கொண்டு அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தான்.


எப்படி அவள் திருமணம் ஆனவளா? இல்லையா? என்பதை கண்டுப்பிடிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.


அதில் பட்டென்று ஈத்தன், இன்னுமே சிலைப்போல் நின்றிருந்த குறிஞ்சியின் முகத்தை தன் இரண்டு கரங்களில் ஏந்தி, அவளின் கண்கள் வழியாக அவளுள் சென்றுவிடுவது போல் நெருக்கமாக நின்று அவளை ஆழ்ந்து பார்த்தான்…


ஈத்தனின் எதிர்ப்பாராத இச்செயலில் நிலைகுலைந்து போனாள் குறிஞ்சி.


எப்பொழுதும் பார்ப்பவர்கள் மனதினுள் குளுமையை மட்டுமே பரப்பும் அவனின் ஆழ்கடல் போன்ற நீலநிற விழிகள்… இன்று பெரும் சீற்றம் கொண்டு சீறியடிக்க…


குறிஞ்சியின் தேகம் கிடுகிடுவென்று வெளிப்படையே நடுங்க ஆரம்பித்தது…


அதையெல்லாம் உணரும் நிலையில் ஈத்தன் கொஞ்சமும் இல்லை.


அவனே வேரறுந்து தள்ளாடிக் கொண்டல்லவா இருக்கின்றான்!


அவனின் பார்வையை கொஞ்சமும் எதிர்க்கொள்ள முடியவில்லை குறிஞ்சியாள்!


குற்ற உணர்வு தாங்காமல், தன்னிரு கண்களையும் இறுக மூடிக்கொண்டாள்.


அதில் நெருக்கமாக நின்று, அவளின் இமைமுடி அசைவையும் கூட இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு, அவனுக்கு வேண்டிய பதில்கள் கிடைத்துவிட்டு இருந்தன.


அதில், “அப்போ எல்லாமே… எல்லாமே… பொய்யில்ல குறிஞ்சி… கடைசியில் நீயும் என்னை ஏமாத்திட்டல்ல…” என்று கேட்டான் ஈத்தன் அழுத்தமாக. 


அதில் பதறி தன் கண்களை திறந்த குறிஞ்சி, “சார்… நான்… நான்” என்று திணறியவள், இறுதியில் “மன்னிச்சிடுங்க சமர் சார்…” என்றுவிட்டு இருந்தாள்.


அதில் அவனிடம் மிச்சம் சொச்சமாக ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கைகளும் பறந்து ஓடிவிட, அத்தனை வலி அவன் கண்களில். அப்படியே அவள் முகத்தை விட்டு விட்டவன்…


“ஏன் எல்லாரும் என்னை மட்டும் ஏமாத்தறீங்க. நான் என்ன பண்ணேன் உங்களுக்கு எல்லாம். உன்னை எவ்ளோ நம்பனேன் குறிஞ்சி நான். எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் செய்துட்ட நீ!” என்றவன்…


“ஸ்டூபிட் டா ஈத்தன் நீ… எவ்ளோ பட்டாலும் உனக்கு புத்தி வராது…” என்று அவனை அவனே நிந்தித்துக்கொண்டு, தன் தலையை இரு கைகளால் அப்படியே பற்றிக்கொண்டான்…. 


விட்டால் அவன் தலையே வெடித்துச் சிதறிவிடும் வேகத்துடன் உள்ளே என்னென்னமோ நடந்தன…


எதையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அவனால்…


குறிஞ்சிக்கோ அவன் கூறிய வார்த்தைகளில், அவளுடைய உயிர், அவள் உடலை விட்டு பிரிந்து செல்வது போல் இருந்தது.


தன் வாழ்நாளில் கேட்டுவிடவே கூடாது என்று அவள் தினம் தினம் வேண்டிக்கொண்ட வார்த்தைகளை… விதி அவளை கேட்க வைத்துவிட்டது…


அதில் அவளுக்கும் வலி வலி வலி மட்டுமே!


துரோகியா நான்!


நெஞ்சமெல்லாம் நொடியில் மொத்தமாக நொறுங்கியே போய்விட்டது அவளுக்கு…!


இதற்காகவா அவ்வளவும் செய்தாள்?


அந்நிலையில் கூட ஈத்தனின் வேதனை அவளை சுட… 


என்ன கூறி அவனை சமாதானம் செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை…


தான் இங்கு வந்து இருக்கவே கூடாது என்பதை… காலம் கடந்தப்பின்னே உணர்ந்தாள்…


அவளின் நிலையை கூறவாவது வார்த்தைகள் இருக்கின்றன. ஈத்தனின் நிலைக்கு வார்த்தைகளே இல்லையே. என்ன செய்வது.


அவனுக்கு அவன் ஹிருதயமே வெடித்து சிதறிவிட்டது போல் இருந்தது.


அப்பொழுது கூட அவள் மனதில் தான் இருப்போம் என்ற சிந்தனை அவனுள் கடுகளவும் ஏனோ எழவில்லை. இன்னுமே அவள் மீதான அவனின் நம்பிக்கை அவனை அப்படி எண்ணவிடவில்லையோ என்னவோ!


அதில், தன் கண் முன் நிற்பவளிடம், “இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும். சொல்லு குறிஞ்சி…?” என்று அவளிடமே கேட்டான். 


அவன் சாதாரண குரலில் கேட்பது கூட குறிஞ்சிக்கு அதட்டுவது போல் இருக்க…


பயம், பதட்டம், அவமானம் அனைத்தும் அவளை சூழ்ந்துக்கொண்டன…


அவன் அடித்து கேட்டால் கூட கூற அவளிடம் பதில் இல்லை என்னும் போது என்ன செய்வாள்.


கல் போல் அப்படியே தான் நின்று இருந்தாள்.


வினாடிகள் சில கடக்க, யாரின் துணையும் இல்லாமல், இயலாமையில் நின்றிருந்தவளுக்கு துணையாக அவளின் கண்கள் கலங்கி கண்ணீரை கொட்டி… உனக்கு நான் இருக்கின்றேன் என்று அவளை அணைத்துக்கொள்ள…


அவ்வளவு தான், ஈத்தனின் சீற்றம் எல்லாம் நீர்த்துப்போனது… அவனால் ஒரு ஜீவன் கண்ணீர் விடுவதா… அதிலும் அவன் சந்தோஷமாக இவ்வுலகில் வாழ வரம் தந்த தேவதை…


அதில், “இப்படி உன் வாழ்க்கையை தொலைச்சு… கடைசியில் என்னை பாவக்காரனாக்கிட்டு… அழ வேற செய்றியே குறிஞ்சி… இதெல்லாம் சரியா?” என்று வலி மிகுந்த குரலில் கூறிய ஈத்தன் கண்களிலும் மெல்லிய நீர்படலம் தோன்றி மின்ன…


குறிஞ்சிக்கு அவனை அணைத்துக்கொண்டு, சத்தம் போட்டு கதறி அழ தோன்றியது…


ஆனால் நினைத்ததை எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தவள்… ‘இல்லை’ என்னும் விதமாக மௌன கண்ணீருடன் அவனிடம் தலையை ஆட்டினாள்… 


அதில் மேலும் ஈத்தனின் முகம் கசங்கிவிட்டது…


தன்னால், தன் ஈத்தன் படும் அவஸ்தையை கண்கொண்டு காணவே முடியவில்லை அவளால்.


அதில் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.


மன அழுத்தம் வேக வேகமாக அவளுக்கு அதிகரிக்க… இதற்கு மேல் ஒரு வினாடி கூட அவளால் அச்சூழலை தாங்க முடியாது என்பது அவளின் மூளைக்கு புரிந்தது… 


உடனே அவளை பாதுக்காக்க அவளின் மூளை, ஈத்தனின் கண்முன்னிருந்து விலகி சென்றுவிட கூறி, அவளின் தேகத்திற்கு கட்டளையை பிறப்பித்தது…


அதில் தன் முன் நின்றிருந்த ஈத்தனை இடித்துத் தள்ளிவிட்டு குறிஞ்சி வெளியேறியிருந்தாள்… 


அதிர்ந்த ஈத்தன்… தன்னை சுதாரித்துக்கொண்டு வெளிவந்து பார்க்கும் போது…


அங்கிருந்த நீண்ட லிவ்விங் ஹாலை கடந்து அவள் வேக வேகமாக படிகளில் இறங்குவது அவனுக்கு தெரிந்தது…


அதில் “குறிஞ்சி‌.‌.. ஸ்டாப்… எங்க போற இப்ப…” என்று அவன் அவளை தொடர்ந்து வர…


அவ்வளவு தான். குறிஞ்சி கண்மண் தெரியாது வேகமாக இறங்க ஆரம்பித்து விட்டாள். 


“உன்னை நான் நில்லுன்னு சொன்னேன் குறிஞ்சி” என்று கத்திய ஈத்தனும் மாடி படிகளை மூன்று நான்கு படிகளாக தாண்டி விடுவிடுவென்று அவளை பிடிக்க வர…


ஈத்தன் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தவள்… அவன் தன்னை பிடித்துவிட்டால் அவனுக்கு பதில் சொல்ல வேண்டி வருமே என்ற பதட்டத்தில்… அவளும் இரண்டு மூன்று படிகளாக தாண்ட பார்க்க… விளைவு புடவையில் கால் இடறி… படிகளில் உருள தொடங்கினாள்….


நான்காவது தளத்தில் ஆரம்பித்தவளின் ஓட்டம், இரண்டாம் தளத்தில் முடிவடைந்து இருந்தது…


“ஓ மை காஷ், குறிஞ்சி…!” என்று மயங்கி கிடந்தவளை தூக்கி, தன் மடித்தாங்கிய ஈத்தன்… அவள் கன்னத்தில் தட்டிப் பார்க்க…


அதற்குள், சத்தம் கேட்டதில் அவனுடைய பாதுகாவலர்கள் இரண்டு பேர் அங்கு ஓடிவந்து இருந்தனர்.


உடலில் ஒருயிடம் விடாது குறிஞ்சிக்கு நல்ல வலி… 


இருந்தும் அதைவிட மாட்டிக்கொண்டோமே என்ற பதட்டம் அவளை சூழ்ந்துக்கொள்ள…


கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள் திரும்ப திறக்கவேயில்லை…


மயங்கியவள் போலவே தொடர…


பாதுகாவலர்கள் அவசர அவசரமாக முதலுதவி பெட்டியை எடுத்துவந்து அவளை பரிசோதித்து, “பல்ஸ் எல்லாம் நார்மல் சார்… பயப்பட ஒன்னும் இல்லை… மஸில் ஸ்ட்ரெயின் மட்டும் இருக்கலாம்…. நாங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்… நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்றனர்.


அதில் ஈத்தன் உடன் வர மாட்டான் என்றதும் ‘ஹப்பாட…’ என்று நினைத்த குறிஞ்சியின் மூச்சு அவளை மீறி பெருமூச்சாக வெளிவர…


திடீரென்று ஏறியிறங்கிய அவளின் மார்பின் அசைவில் குறிஞ்சியை உற்றுப்பார்த்த ஈத்தன், “டாக்டரை இங்க வர சொல்லுங்க…” என்றிருந்தான்.


அதில் பாதுகாவலர்கள் இருவரும் விலகிச்செல்லும் ஒலியை உணர்ந்த குறிஞ்சியின் உடல் பதட்டத்தில் விறைத்துக்ககொண்டது. அவளின் கண்ணின் மணிகளும் அங்குமிங்கும் மெல்ல அசைந்து ஓட…


“Now the cat is out of the bag” என்றவன், அவளை தன்னிரு கரங்களில் அப்படியே ஏந்திக்கொண்டு மீண்டும் மேல்நோக்கி படியேற தொடங்கினான்…


என்ன நடக்கின்றது என்பதை அறிய, குறிஞ்சி மெல்ல தன் கண்களை மில்லி மீட்டர் அளவில் மட்டும் திறந்து பார்க்க முற்பட…


ஈத்தனின் துளைக்கும் கோப விழிகள் தான் அவளுக்கு தன் கண் முன்னால் தெரிந்தது...


அதில் பதறி பட்டென்று மீண்டும் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்…

🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/111.html

கருத்துகள்

  1. Enna ma chinna update ah iruku next part illai ah, eppo eduku thali kattina nu nee um sollaliye da Ethan, kurimji nadichadu pothum elunthuru

    பதிலளிநீக்கு
  2. Interesting ennathan nadanthirkum kutram purinthavar evaro..

    பதிலளிநீக்கு
  3. Y mam sinnam epi yen ippadi pannuringa

    பதிலளிநீக்கு
  4. தன்னை காத்துக் கொள்ள தலைத்தெறிக்க ஓட
    தவறி விழுந்து
    தன்னவன் கையிலே தஞ்சம் அடைந்தாள்....

    பதிலளிநீக்கு
  5. உள்ளமும் உண்மையும் உரக்க கூச்சலிட
    உடைந்து நின்றவனை உடைக்க மனம் இல்லாமல் உறைந்து போய் நிற்க உள்ளங்கள் இரண்டும் ஊமையாய் அழ....
    உண்மை வெளிவர
    உரிய நேரம் இதுவோ???

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻