13. சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘
🪻ஹாய் டார்லிங்ஸ்... சோ சாரி... நைட் டைப் செய்துட்டே தூங்கிட்டேன்... எழுந்துப் பார்த்தா விடிஞ்சு... உங்களுக்கான இன்னைக்கு சர்ப்ரைஸா இரண்டு யூடி... அதுவும் பெருசா... என்ஜாய்...
அத்தியாயம் -13
ஈஷாவை அங்கிருந்த ஆசிரியருடன் பள்ளியினுள் இருக்கும் Art Gallery-க்கு அனுப்பி வைத்திருந்த ஈத்தன், மதர் முன்பு குறிஞ்சியை குறித்த கேள்விகளுடன் அமர்ந்திருந்தான்…
தீடிரென வந்து ஈத்தன் குறிஞ்சியை குறித்து விசாரிக்கவும், மதருக்கு ஒன்றும் புரியவில்லை.
உள்ளுக்குள் குறிஞ்சியை அவன் வீட்டிற்கு அனுப்பி இருக்க கூடாதோ என்ற ஐயம் வேறு அவருக்குள் முகிழ்த்துவிட, ஒரே பதிலாக, “சாரி ஈத்தன். எங்களை நம்பி எங்கக்கிட்ட வேலையில் இருக்கும் எம்ப்ளாயி பற்றிய தகவல்களை, மூன்றாம் நபரான உன்னிடம் ஷேர் செய்ய முடியாது” என்று எடுத்ததுமே உறுதியாக மறுத்துவிட்டார்.
அதில் ஒருசில வினாடிகளுக்கு, ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அவ்வறையினுள் நிசப்தம் ஏற்பட்டிருக்க…
அதை கலைக்கும் விதமாக மதரின் கண்களை நேருக்கு நேர் அழுத்தமாக பார்த்த ஈத்தன், “மூன்றாம் நபர் கிட்ட தானே மதர் சொல்ல மாட்டீங்க. குறிஞ்சியோட ஹஸ்பெண்ட் இந்த ஈத்தன் கிட்ட சொல்லலாமே”, என்று கேட்டு இருந்தான்.
அதில் “வாட்…” என்று வெளிப்படையாக அதிர்ந்த மதர், “என்ன சொல்ற ஈத்தன் நீ? குறிஞ்சிக்கு கல்யாணமே ஆகலை” என்றார் நம்ப முடியாது…
அதற்கு பதிலாக ஈத்தன், தான் கொண்டுவந்திருந்த சிரிய வகை ப்ரீஃப்கேஸ்(Briefcase) ஒன்றை, தன் கைரேகையை பதித்து திறந்து, அதில் இருந்த மிகச்சிறிய வகை ஆப்பிள் லேப்டாப்பை எடுத்து ஆன்செய்து அவர் முன்பு வைத்தான்.
அவனுக்கு முன்னரே தெரியும் பணமோ, புகழோ இங்கு எதுவும் வேலை செய்யாது என்று. அதனால் தான் உண்மையை கூறியே தனக்கு வேண்டியதை சேகரிக்க அவனே நேரடியாக வந்து இருந்தான்.
‘ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர் Weds குறிஞ்சி மலர்’ என்று பொரிக்கப்பட்டிருந்த பெயரை பார்த்ததுமே, அவசர அவசரமாக அதில் இருந்த டிஜிட்டல் ஆல்பத்தை திறந்து புரட்டி பார்த்த மதருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
ஈத்தன் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தவர், மீண்டும் ஆல்பத்தை பார்க்க ஆரம்பித்தார்…
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு குறிஞ்சி வந்து சேர்ந்தப்பொழுது இருந்த அதே இளமை தோற்றத்தில் ஆல்பம் முழுவதும் நிறைந்து இருந்தாள்…
பொய் என்று சொல்ல முடியாத அளவில் இருந்தது ஆல்பம்…
இருவருமே தங்களின் முன் இருபதுகளில் இருந்தனர்.
இறுதியாக குறிஞ்சியின் நெற்றி வகிட்டிலும்… மாங்கல்யத்திலும் ஈத்தன் குங்குமம் வைக்கும் புகைப்படத்துடன் அந்த ஆல்பம் முடிய…
அடுத்து திருமண வீடியோவையும் காட்டினான்.
அதில் ஈத்தன் குறிஞ்சி கழுத்தில் தாலி கட்டும் காணொளியெல்லாம் நன்றாக க்ளோஸ் அப்பில் எடுக்க பட்டிருந்தது.
அனைத்தையும் உன்னிப்பாக பார்த்த மதர், “ஈத்தன் அப்போ குறிஞ்சி…” என்று ஆரம்பிக்க…
“எஸ் மதர்” என்றவன் முறையான திருமண பதிவு கோப்புகளையும் மதரின் கையில் கொடுத்தான்…
அதையும் பார்த்து முடித்த மதருக்கு மனதினுள் எண்ணற்ற கேள்விகள், மேஜை மீதிருந்த நீரை எடுத்து அருந்தி அவர் தன்னை சமநிலை படுத்திக்கொள்ள…
அவரிடம், “இப்பவாவது நான் கேட்ட தகவல்களை சொல்றீங்களா மதர்…? என்கிட்ட குறைவான நேரம் தான் இருக்கு” என்று கேட்டான் ஈத்தன்.
அதற்கு அவரோ, ஈத்தன் சற்றும் எதிர்பாராத விதமாக, “முன்னாடி கூட உன் மேல் இருந்த நம்பிக்கையில் நீ கேட்டது பற்றி சொல்லி இருப்பேன் ஈத்தன். ஆனால் இப்ப?” என்று நிறுத்திவிட…
“It's Not Fair Mother” என்றான் ஈத்தன் அதிர்ந்து…
“சாரி ஈத்தன். உன்னை விட்டு ஏன் குறிஞ்சி இங்க வந்து கல்யாணம் நடந்ததை மறைச்சு இத்தனை வருஷம் வாழனும். உங்க இரண்டு பேர் இடையில் என்ன நடந்தது” என்றவர், “இதெல்லாம் எதுவும் சரியா தெரியாமல், நான் குறிஞ்சி பற்றிய தகவல்கள் எதுவும் உனக்கு தருவது சரி கிடையாது. என்னால் அவ நிலைமையை நினைச்சு கூட பார்க்க முடியலை” என்றுவிட்டார்…
ஈத்தன் என்ன கூறியும் கொஞ்சமும் அவர் அசையவில்லை…
நடந்ததை எப்படி சொல்வான் அவன்.
ஆனால் அவனுக்கு குறிஞ்சியின் கடந்தகாலம் பற்றி தெரிந்தே ஆக வேண்டும்.
அதன் பின்னர் தான் அவனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை தேட முடியும்.
நேற்று இரவில் இருந்தே அவன் அவனாக இல்லையே.
ஏதோ ஒரு குற்றவுணர்வு, அவனை மெல்ல திண்ண தொடங்கி இருந்தது… அதில் இருந்து அவன் விரைந்து விடுப்பட வேண்டும்… நிம்மதியாக மூச்சுவிட வேண்டும்…
அதில் வேறுவழியின்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்ட ஈத்தன், அவ்வறையை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு…
“சொல்றேன் மதர். ஆனால் இந்த இடத்தில் இல்லை. எனக்கு பிரைவசி வேண்டும்” என்றான்.
அவன் தன் கல்யாண ஆல்பத்தை காட்ட முடிவு செய்த பொழுதே, மேலே இருந்த சிசிடிவியை பார்த்துவிட்டு இருந்தான். ஆனால் அவனுக்கு ஆல்பம் காட்டுவதிலோ, இதுவரை மதரிடம் பேசிய விஷயங்களோ வெளியே தெரிய வந்தால் கூட ஒன்றுமில்லை.
ஆனால் இதன் பிறகு அவன் பேச இருப்பவை, கடுகளவு கூட வெளியே கசிந்துவிட கூடாது… அது அவனுக்கே பெரும் ஆபத்தாகிவிடும்… எனவே அவன் அதில் அதீத கவனத்துடன் இருக்க…
ஈத்தனின் பார்வையை வைத்தே அவனின் எண்ணத்தை உணர்ந்துக்கொண்டிருந்த மதர், “கான்வென்ட் விட்டு என்னால் உன்கூட வெளியே வர முடியாது ஈத்தன். உன்னையும் என்னால் உள்ளே என் பகுதி இருக்கும் இடத்திற்கு கூட்டிட்டு போக முடியாது. ஈஷாவோட அட்மீஷன் நீ கேன்சல் செய்துட்டதால் உனக்கு சூட்டும்(suite) கொடுக்க மாட்டாங்க” என்றவர்…
“நீ கேட்ட மாதிரி எந்த கண்காணிப்பும் இல்லாத இடம், இந்த ஸ்கூல்ல இல்லையே ஈத்தன்” என்றார் யோசனையாக.
இதற்காக தானே ஈத்தன் இப்பள்ளியில் ஈஷாவை சேர்க்க முடிவு செய்ததே. ஆனால் இப்பொழுது அந்த அதீத பாதுக்காப்பே அவனுக்கு இடைஞ்சலாகி போனது.
குறிஞ்சி வருவதற்குள், அவன் செய்து முடிக்க வேண்டியது வேறு நிறைய இருக்கிறது.
நெற்றிப்பொட்டை நீவி விட்டப்படி, மதரை பார்த்தவன், “அப்ப நான் கேட்ட தகவல்களை கொடுத்திடுங்க மதர். உங்களுக்கு சிரமம் எதுவும் இல்லை. சிம்பிள்.” என்றானே பார்க்கலாம்…
‘ஆமாம் சொல்லிட்டா பிரச்சனை எதுவும் இல்லை இல்ல’ என்று ஒருகணம் அவன் கூறியப்படியே சிந்தித்த மதருக்கு…. தூக்கிவாரிப்போட்டது…
நொடியில் அவரிடம் இருந்தே விஷயத்தை வாங்க பார்த்துவிட்டானே…
“ஓ ஜீசஸ்! நீ ரொம்ப டேன்ஜர் ஈத்தன்” என்று புன்னகையுடன் கூறிய மதர், ‘எங்கு செல்லலாம்’ என்று யோசிக்கும் போதே…
அவரின் அலைப்பேசியும், ஈத்தனின் அலைப்பேசியும் ஒன்றாக அடிக்க ஆரம்பித்தது.
மதருக்கு குறிஞ்சியிடம் இருந்தும், ஈத்தனுக்கு தாமஸிடம் இருந்தும் அழைப்பு வந்துக்கொண்டு இருந்தது.
அதில் ஈத்தன், “நீங்க இங்க பேசுங்க மதர். நான் வெளியே வெயிட் பண்றேன். பேசிட்டு வாங்க” என்றுவிட்டு தன் அலைப்பேசியுடன் வெளிப்பக்கம் விரைந்து விட்டான்.
குறிஞ்சி, “குட் மார்னிங் மதர். நான் இங்க சென்ட்ரலில் இருந்து மதுரை ட்ரெயினில் ஏறிட்டேன். சொல்ல சொல்லி இருந்தீங்க இல்ல மதர்” என்றாள் தகவலாக.
நேற்று மதர் அவள் கிளம்பியதும் தகவல் கூற கூறி இருந்தார்.
“நல்லது குறிஞ்சி” என்ற மதர், “கம்பார்ட்மெண்ட்ல கூட யார் இருக்கா? சேஃப்பா இருக்கியா? தண்ணீ பாட்டில் எல்லாம் வாங்கி வச்சிட்டயா” என்று வரிசையாக விசாரித்தவர்…
இறுதியில், “அங்க ஈத்தன் வீட்டில் எதுவும் பிரச்சனை இல்லை இல்ல குறிஞ்சி. உன்னை நல்லா நடத்தினாங்க தானே. ஏன் குரல் ஒருமாதிரி இருக்கு” என்று கொக்கி போட…
“அச்சோ, எனக்கு பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை மதர். புது தண்ணீனால லேசா தொண்டை கட்டி இருக்கு. சமர் சார் என்னை வேலைக்கு வந்தவன்ற மாதிரி ஒரு இடத்தில் கூட ட்ரீட் பண்ணலை. ரொம்ப மரியாதையா நடத்தினார். ஈஷாவும் தான். இப்ப கூட அவர் செக்யூரிட்டீஸ் காரில் என்னை கொண்டு வந்து, ட்ரெயின் வர வரை என்கூடவே வெயிட் பண்ணி, ஏத்திவிட்டுட்டு தான் கிளம்பினாங்க. நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் மதர். சமர் சார் ரொம்ப Genuine” என்று எப்பொழுதும் அளந்து பேசும் குறிஞ்சி, இன்று படப்படவென்று ஈத்தனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வர…
என்ன ஆனாலும் சரி, ஈத்தனுடன் பேசி, இருவரையும் சேர்த்து வைத்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு மதர் வந்துவிட்டு இருந்தார்.
அனைவரின் ‘மதர்’ என்ற அழைப்புக்கு தகுதியானவராக இருந்தார்.
அங்கு தாமஸ் ஈத்தனிடம், “நீங்க சொன்னப்படி எல்லாம் செய்துட்டேன் சார். நீங்க கேட்ட ஆட்கள் மதுரை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆகிட்டாங்க. இன்னும் இரண்டு மணி நேரத்தில் கொடைக்கானல் ரீச் பண்ணிடுவாங்க. மேடம் ஃபேமிலி பத்தின தகவல் மட்டும் இன்னும் எதுவும் கிடைக்கலை. பார்த்துட்டு இருக்கோம். இங்க ட்ரெயினும் வந்துடுச்சு சார். நான் மேடம் கூட தான் ட்ராவல் செய்துட்டு இருக்கேன்” என்றார்.
“Good Job தாமஸ். நான் திரும்ப கூப்பிடறேன்” என்றுவிட்டு தொலைபேசியை வைத்த ஈத்தன்… வாட்சில் மணியை பார்த்துவிட்டு திரும்ப…
மதர் அங்கு வந்து சேர்ந்தார்.
கையில் ஒரு சாவி கொத்துடன் வந்து இருந்தவர், “வா ஈத்தன் போகலாம்” என்று அவனுடன் நடந்தார்…
வரிசையாக ஒன்றுப்போல் சீரான இடைவெளியில் சிறிது சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வீடுகளை பார்த்த ஈத்தன், ‘இங்கு எங்கே…?’ என்று மதரை கேள்வியாக பார்க்க…
“நீ கேட்டப்போல் யாரும் வராத, கண்காணிப்பு இல்லாத பகுதி ஈத்தன்” என்றவர், அங்கிருந்த ஒரு வீட்டின் கேட்டினை திறந்தப்படியே “உன் மனைவியோட வீடு தான். உனக்கு ஓகே தானே” என்று கேட்க.
ஈத்தன் முகத்தில் வெளிப்படையான அதிர்வு.
சற்று முன் மதரிடம் குறிஞ்சியின் கணவன் என்று கூறிய போது தோன்றாத உணர்வு மதர் ‘உன் மனைவி’ என்று கூறும் போது தோன்ற!
இடது கையால் தன் தலைமுடியை கோதியவன்… அப்படியே அந்த சங்கடத்தினை மறைத்துக்கொண்டு…
“குறிஞ்சி இல்லாத போது எப்படி மதர். அவ வீட்டுக்குள் போறது. தப்பில்லையா” என்று நாகரிகம் பார்க்க.
“குறிஞ்சி இல்லாத போது அவளை பத்தி நாம பேச போறது கூட தப்பு தான் ஈத்தன்” என்ற மதர்… “நல்லதுக்கு தானே பண்றோம். ஜீசஸ் பார்த்துப்பார்” என்றுவிட்டு உள் கதவைத்திறக்க…
தன் முகத்தை ஓடிவந்து தழுவிய மணத்தில், ஈத்தன் தன் கண்களை ஒருமுறை மூடி திறந்து இருந்தான்.
தன்னை மறந்து ஆழ்ந்த மூச்சினை எடுத்து அந்த மணத்தினை தனக்குள் நிரப்பியும் கொண்டான்.
‘ஹைபிரிட் டீ ரோஸஸ்’ என்னும் அதீத மணம் கொண்ட ரோஜாக்களின் மணம் அது.
ஈத்தனுக்கு மிகவும் விருப்பமான மணமும் கூட.
அனைத்து வகை சிகப்பு ரோஜா செடிகளும், விதவிதமாக, அச்சிறு ஹாலை சுற்றி சுற்றி, வெவ்வேறு வகையான பூந்தொட்டிகளில் மலர்ந்து, அலங்கரித்துக்கொண்டு இருக்க…
மத்தியினில் தொங்கிக்கொண்டிருந்த கூடை வடிவ ஊஞ்சலை சுற்றி மட்டும், ஈத்தனின் அதிக விருப்பமான சிவப்பு நிற “ஹைபிரிட் டீ ரோஜா’ வகை ரோஜா செடி, பூந்தொட்டிகளில் அடுக்கப்பட்டும், ஊஞ்சலுக்கு இருப்புறமும் தொட்டிகளில் தொங்கிக்கொண்டும் இருந்தன…
சற்று தடிமனான வசீகரிக்கும் அடர் செந்நிற இதழ்களுடன், நெருக்கமான பல இதழ் அடுக்குகளை தன்னில் கொண்டு, ராணியின் தோரணையுடன் அவை தலைநிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க… யாரால் மயங்காமல் இருக்க முடியும்…
மயங்கிப்போனான்…
என்ன மணம், என்ன காட்சி என்று அவன் நின்றுவிட்டதில்…
ஈத்தனின் பார்வையை பார்த்த மதர், “குறிஞ்சிக்கு ரெட் ரோஸ்னா உயிர் ஈத்தன். அவ்ளோ கலெக்ஷன்ஸ் வச்சி இருக்கா…” என்றவர், ‘குறிஞ்சியின் விருப்பங்கள் ஈத்தனுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?’ என்று தன் பேச்சினை அத்துடன் நிறுத்திக்கொள்ள…
ஈத்தனின் புருவங்கள் வியப்பில் உயர்ந்திருந்தன…
ஆம்! சிவப்பு நிற ரோஜாக்களின் காதலன் அவன் தானே!
அவைகளை அவளுக்கு அறிமுகம் செய்தவனும் அவன் தானே!
இன்றோ அவைகள் யாவும் குறிஞ்சியின் காதலை அவனிடம் கூறிக்கொண்டு நிற்கிறதே!
சற்றுமுன் அங்கு ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்தவனுக்கு இப்பொழுது மூச்சு முட்டியது!
வேண்டாம் என்று தள்ளவும் முடியவில்லை! வேண்டும் என்று ஏற்கவும் முடியவில்லை!
பட்டென்று வேறுப்பக்கம் தன் பார்வையினை திருப்பிக்கொண்டான்…
தனிமையில் யார் பார்க்க போகின்றனர் என்ற அலட்சியத்துடன் ஏனோ தானோவென்ற ஒரு வாழ்க்கையை குறிஞ்சி வாழவில்லை என்பதற்கு சான்றாக, அவ்வளவு நேர்த்தியாகவும், அழகாகவும் உயிர்ப்புடன் அவ்வீடு காணப்பட்டது.
ஹாலில் முக்கால்வாசி இடங்களை ரோஜா செடிகளும், அவள் அமர்ந்து உணவு உண்ணும் ஊஞ்சலும் பிடித்துக்கொண்டு இருக்க…
மீதியிடம் முழுவதும் பூஜைக்கு தான்.
பெரிதாக மாட்டியிருந்த அவள் அன்னையின் பிரேம் செய்யப்பட்ட படத்துடன், அனைத்து சுவாமி படங்களும் அழகாக அடுக்கு வரிசையில் வீற்றிருந்தன… உடன் ஏசுவும் மரியாவும் வேறு இடம் பெற்று இருந்தனர்…. காதலுக்கு ஏது சாதி மதம் இனம் மொழி எல்லாம்…
பிரேமினுள் இருந்த குறிஞ்சியின் அன்னையின் படத்தினை பார்த்ததும் ஈத்தனுக்கு மனம் முழுவதும் பாரமாகிவிட்டது. குறிஞ்சிக்கு அவள் அன்னை என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை அவனை விட வேறு யார் அறிந்து இருப்பார்கள்…
பாவம் அவரின் இழப்பை எப்படி தாங்கினாளோ என்று வருந்தினான்…
பாவம் அவனுக்கு தெரியாதே, அவரின் இழப்பை கூட அவளால் உள்வாங்க முடியாத அளவிற்கு, அவள் சோதனைகளையும், வாழ்க்கை போராட்டங்களையும் சந்தித்தாள் என்பது.
அங்கு ஒரு மூலையில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை மதர் பிரித்தெடுக்க பார்க்க…
“நான் செய்றேன் மதர்…” என்று அதனை ஈத்தன் எடுத்து பிரித்துப்போட…
இருவரும் அமர்ந்தனர்…
மதர் ஈத்தன் முகத்தினை பார்க்க…
தன் முகத்தினை தன்னிரு கரம் கொண்டு மூடிய ஈத்தன், ஒருசில வினாடிகளில் தன்னை தயார்படுத்திக்கொண்டு விட்டான்.
அதன்பிறகு என்ன, இதுவரை யாரிடமும் பகிராத விஷயங்களை மொத்தமாக மதரிடம் கொட்ட ஆரம்பித்துவிட்டு இருந்தான்.
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
கருத்துகள்
கருத்துரையிடுக