12.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
வரவேற்பு பகுதியில், நேற்று அவளை காட்டிக்கொடுத்திருந்த உலோக குவளை இன்னுமே தரையில் கிடக்க… அதை நிமிர்த்தி வைத்த ஈத்தன்… அறையின் உள்ளே நுழைந்தான்…
துடைத்து வைத்தது போல் இருந்தது அறை. சிறு தடம் கூட அங்கு குறிஞ்சி இருந்ததற்கு சாட்சியாக இல்லை.
மெல்ல அறைக்குள் நடந்தவன் கவனத்தில், டேபிள் லேம்ப் கீழே வைக்கப்பட்டிருந்த வெள்ளை காகிதம் பளிச்சென்று விழ…
உடனே அதை ஈத்தன் எடுத்துப்பார்த்தான்.
அதில் ‘அன்பான ஈஷாவிற்கு’ என்று ஆரம்பித்து இருந்த குறிஞ்சி, தொடர்ந்து...
சாரி கண்ணம்மா, நீங்க என்னை தேடி வந்திருப்பீங்கன்னு எனக்கு தெரியும். ஆன்ட்டிக்கு ஒரு அவசர வேலை வந்திடுச்சு டா. அதில் தான் சொல்லிக்காமல் கிளம்ப வேண்டியதா போயிடுச்சு… இந்த ஆன்ட்டியை மன்னிச்சுடுவிங்க தானே ஈஷாமா… ஆன்ட்டிக்கும் உங்கக்கிட்ட சொல்லிக்காமல் போறதில் நிறைய வருத்தம் டா…
சாதாரண எழுத்துக்கள் தான்.
ஆனால் அதை வாசிக்கும் பொழுதே ஈத்தனுள் குறிஞ்சியின் உணர்வுகள் இறங்குவது போல் இருந்தது.
அவள் ஏன் கிளம்பினாள் என்பது தான் அவனுக்கு தெரியுமே!
ஆழ் மூச்சு ஒன்றை உள்ளிழுத்து வெளியிட்டவன்… மேலும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்…
அப்புறம் ஈஷாம்மா இனி நீங்க சின்ன பொண்ணு இல்லை. பெரிய பொண்ணாகிட்டீங்க. எந்த விஷயம் செய்தாலும் கவனமா செயிங்க. எதுவா இருந்தாலும் அப்பாக்கிட்ட ஷேர் செய்துடுங்க. நான் சொன்னது எல்லாம் மறக்காமல் கவனத்தில் வச்சிக்கோங்க. எனக்கு தெரியும் இதெல்லாம் எதுவும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை… நீங்களே ரொம்ப ஸ்மார்ட் கேர்ள் ஆச்சே…
உனக்கு ஒன்றும் தெரியாது என்று தலையில் தட்டி, அறிவுரைகளை கொட்டி திணிப்பது போல் இல்லாமல், தட்டிக்கொடுத்து கூறுவது போல் அவள் எழுதியிருந்தது அவனின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் தொடர…
நீங்களும், உங்க அப்பாவும் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் ஈஷாமா. உங்களுக்கு கிடைச்ச மாதிரியான அப்பாவும், உங்க அப்பாக்கு குழந்தையா நீங்க கிடைச்ச மாதிரியும், இந்த உலகத்தில் யாருக்குமே கிடைச்சு இருக்க மாட்டங்க. நீங்க இரண்டு பேருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவங்க. எப்பவும் நீங்க இரண்டும் பேரும் எல்லா வித சந்தோஷங்களையும் பெற்று நிறைவா வாழனும்!
என்று எழுதியிருந்தவளின் பேனா அடுத்து எழுதுவதற்கு முன்பு, சற்று நேரம் அங்கு தங்கியிருந்ததற்கு சாட்சியாக… பேனா மை ஊறியிருக்க…
இறுதியில்…
அப்பாவ நல்லா பார்த்துக்கோங்க கண்ணம்மா. அவருக்கு நீங்க தான் உலகம்.
பாய் ஈஷாம்மா…
பிரியமுடன்,
குறிஞ்சி மலர்.
என்று முடித்திருந்தாள்.
எவ்வித மேல்பூச்சுகளும், அலங்காரங்களும் அற்ற கடிதம். ஆனால் ஒவ்வொரு வரிக்கு பின்பும் குறிஞ்சியின் பல உணர்வுகள் கொட்டி கிடந்தன…
அதிலும் இறுதி வரிகள்…
ஈத்தனுக்கு கண்கள் கலங்குவது போல் இருந்தன.
அவனுக்காக அவள் செய்தவைகள் பின்பு அன்பும், தியாகமும் இருப்பதாக அவன் இத்தனை நாட்கள் நினைத்துக்கொண்டு இருக்க… ஆனால் அவளுக்கோ அவன் மீது இருப்பது காதல் என்பது இப்பொழுது புரிய…
மங்கலான கண்களை சிமிட்டி சரி செய்துக்கொண்டான்…
அப்பொழுது மேலும், அங்கிருந்த குப்பை தொட்டிக்குள் பந்து பந்தாக சுருட்டி போட்டிருந்த, பல வெள்ளை காகிதங்கள் ஈத்தனின் கண்களில் பட்டன…
அதனை குனிந்து எடுத்தவன் பிரித்து பார்த்தான்…
ஒன்றில் என் அன்பு பூக்குட்டிக்கு…
என்று ஆரம்பித்து இருந்தவள்… உடனே செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு தனக்கு உரிமை இல்லை என்று அதை தூக்கிப் போட்டுவிட்டு இருந்தாள்…
அடுத்த காகிதத்தை எடுத்து பிரித்தால், அதில்
சமர் சாருக்கு….
என்று எதுவும் முன் புறம் சேர்க்காமல் கவனமாக எழுத ஆரம்பித்து இருந்தாள் குறிஞ்சி…. அதில் ஈத்தனின் இதழோரம் சிறு புன்னகை…
இன்னும் யாரிடம் வேஷம் போடுகிறாள்.
என் மேல நிறைய கோபத்திலும், வருத்தத்திலும் நீங்க இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் சமர் சார். என்ன சமாதானம் உங்களுக்கு தரதுன்னு தான் எனக்கு தெரியலை. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உங்கக்கிட்ட சொல்லிக்க ஆசைப்படுறேன். அது நீங்க நினைக்கிறப்படி எந்த தப்பும் பாவமும் நீங்க செய்யலை சமர் சார். உங்களால் அது முடியாது. என்னைப் பத்தி கவலைப்படாதிங்க. என் மேல் சத்தியமா சொல்றேன் சார், நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா, மனம் நிறைவா தான் கடந்த பன்னிரண்டு வருஷமும் வாழ்ந்தேன். இனியும் அப்படியே வாழ்வேன். நீங்களும் அப்படி தான் வாழனும். என்னோட ஆசையும் அதுதான். இல்லைனா நான் தான் பெரிய பாவக்காரி ஆகிடுவேன் சார். என்னை அந்த நிலைமைக்கு நீங்க ஆக்க மாட்டிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சமர் சார். இப்ப நான் இங்க இருந்து கிளம்ப போறேன் சார். இந்த நிமிஷத்தோட ராத்திரி நமக்குள் நடந்தது எல்லாத்தையும் பிளீஸ் மறந்துடுங்க.
என்று எழுதி இருந்தவள்… மேலும் தொடர்ந்து…
இன்னொரு முறை நாம இரண்டு பேரும் நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தா, அதுக்கு பிறகு நான் நிச்சயம் உயிரோட இருக்க மாட்டேன் சமர் சார். ரொம்ப அசிங்கமா இருக்கு சமர் சார் எனக்கு. தாங்கமுடியலை. நம்ம உறவு முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டுமே. என்னை இத்தோட விட்டுடுங்க. ப்ளீஸ்.
என்று எழுதியிருந்தவள் என்ன நினைத்தாளோ இறுதியாக…
அச்சோ உங்களை ரொம்ப பயப்படுத்திட்டனா சமர் சார். சாரி சாரி. ஏதோ பதட்டத்தில் அப்படி எழுதிட்டேன். அம்மா மேல சத்தியமா கண்டிப்பா நான் எதுவும் செய்துக்க மாட்டேன். ஆனா இப்ப இருக்க இடத்தைவிட்டுடு, வேற எங்கேயும் உங்க கண்ணுக்கு தெரியாத இடமா ஓடிடுவேன்.
உணர்ச்சிகளின் உச்சத்தில் மனதில் தோன்றியதையெல்லாம் எழுதிவைத்து இருந்தவள்…
ஈத்தனுக்கு பதிலாக ஈஷாவோ, வேலையாட்களோ இக்கடிதத்தை எடுத்து படித்து பார்த்துவிட்டால் என்ன ஆவது என்று கசக்கி எறிந்துவிட்டு இருந்தாள்…
ஈத்தனுக்கு இன்னுமே கைகால்களில் எல்லாம் எடுத்த நடுக்கம் நிற்கவில்லை…
அவள் ஒன்றும் செய்துக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தாலும், எப்படி அம்மாதிரியான எதிர்மறை சிந்தனைகள் குறிஞ்சிக்கு மனதில் தோன்றலாம்… மிகவும் தவறானதே… அதிலேயே நின்றான்…
உடனே தன் தொலைபேசி மூலம் தாமஸிற்கு அழைத்து “எங்க இருக்கீங்க தாமஸ்?” என்றான்…
அதில், ‘என்னது மீண்டுமா’ என்று தாமஸ் எண்ணுவதற்கு முன்னர், ஈத்தனின் குரலில் இருந்த மாறுதல் அவரின் கவனத்தை இழுத்துக் கொள்ள…
“இன்னும் த்ரி ஹவர்ஸ் இருக்கு சார் ட்ரெயின் வர. நீங்க சொன்னப்படி ஸ்டேஷன்ல தான் வெயிட்டிங் ஹாலில் இருக்கோம்” என்றார்.
“குட்… அங்கேயே இருங்க தாமஸ்…” என்ற ஈத்தன், “நான் இப்ப சொல்றதை எல்லாம் கவனமா கேட்டுக்கோங்க. எல்லாமே ஹைலி கான்ஃபிடென்ஷியல்” என்றவன்…
அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியவன், “நீங்க ஃபாலோ பண்றது எக்காரணம் கொண்டும் குறிஞ்சிக்கு தெரிஞ்சுட கூடாது தாமஸ். பார்த்துக்கோங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க…
தாமஸ் சென்று தனக்கும், தன்னுடன் வந்திருந்தவர்களுக்கும், குறிஞ்சி செல்லவிருக்கும் ரயிலின் பயணச்சீட்டை பெற்றுவந்து இருந்தார்.
இங்கு ஈத்தன், குறிஞ்சி அவனுக்கு எழுதியிருந்த பேப்பரை சுக்கு நூறாக கிழித்து தடம் தெரியாதப்படி அழித்துவிட்டு… அவள் ஈஷாவிற்கு எழுதியிருந்ததை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று ஈஷாவிடம் கொடுத்தவன்…
அடுத்த அரைமணி நேரத்தில் தயாராகி, ஈஷாவுடன் சென்னை ஏர்போர்ட்டிற்கு கிளம்பி இருந்தான்…
அங்கிருந்து தன் தனி விமானத்தில் கிளம்பியவன், இங்கு சென்னையில் குறிஞ்சி ரயில் ஏறுவதற்கு முன்னராகவே, அங்கு கொடைக்கானலில் பள்ளியில் தன் கால்களை பதித்துவிட்டும் இருந்தான்…
ஒருவினாடி கூட அவன் விணாக்கவில்லை…
நேராக மதர் சுப்பீரியர் முன்பு சென்று அமர்ந்துவிட்டான்… குறிஞ்சியை பற்றிய கேள்விகளுடன்…
இடையில் அவன் குறிஞ்சியின் வீட்டை குறித்து விசாரிக்கக்கூறியதை விசாரித்து அவனுக்கு தகவலும் அனுப்பி இருந்தனர். அனைத்துமே அவனுக்கு பதட்டத்தை கூட்டியதே தவிர குறைக்கவில்லை…
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/13.html
விழி சொல்லும் உண்மை மொழி
பதிலளிநீக்குவார்த்தையில் இல்லை...
தவறு செய்ததாக எண்ணி தப்பிச் செல்ல பார்க்கிறாய்....
மறைக்கும் பொருளில் மறையாத உண்மை என்னவோ...
மாசற்ற அன்பில்
மயில்தோகை நேசத்தில்
மகளைப் பார்த்துக் கொண்டவள்
மருகி உருகி எழுதிய மடலை மடித்து எடுத்துக்கொண்டு மகளுடன் சென்று விட்டான்....
Wow mam,ur kavithai was simply superb
நீக்குInteresting sppi superb 👌👌👌😍
பதிலளிநீக்குThank you for the nice update.
பதிலளிநீக்குNext ud appo varum , interesting
பதிலளிநீக்குSuper dear... Kurinji oda unmai theriyum neram .... Waiting
பதிலளிநீக்குKurimji ini nee Avan kanla irunthu thappave mudiathu, ini parka.kudathu nu nee ninaicha mattum pothum ah Ethan um.ninaikanume loose ponne,
பதிலளிநீக்குVery interesting. How Ethan is caring . So sweet
பதிலளிநீக்குMmmm enaku mandai vedikuthu writer.. nejama serial pakarapo athu enanu theriyama amma athai nu mandaiya pichukuvangala antha mathiri adutha ud varaikum nanum athe nilamai than.. ivlo late ah solrenga na samar and kurinji ku nadula etho perusa iruku. Sollunga nu sona solidava porenga. Ena panrathu wait panren. Panithanaa aganum....
பதிலளிநீக்குInteresting mam
பதிலளிநீக்கு