9.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘

அன்று இறுதி சதுரங்க போட்டியை காண ஈஷாவை உடன் அழைத்துச்சென்று திரும்பிக்கொண்டிருந்தான் ஈத்தன். பழையப்படி உடல் திரும்பிவிட்டதிலேயே ஈஷாவின் பழைய உற்சாகம் அவளிடம் திரும்பிவிட்டு இருந்தது.

வீட்டிலிருந்த குறிஞ்சி, நாளை காலை கிளம்புவதற்கு தயாராக, தன் பையில் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, அமைதியாக அறைக்குள் அமர்ந்து ஜன்னல் வழியாக தெரிந்த நிலவினை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவள் கையில் விழாவிற்கு செல்வதற்கு முன்னர் ஈஷா கொடுத்துவிட்டு சென்ற கிரீட்டிங் கார்ட் இருந்தது.

இன்றே ஆயிரம் தடவைக்கு மேல் அதை படித்துவிட்டு இருப்பாள்.

ஒவ்வொரு முறையும் அதன் சுவை கூடியதே தவிர சற்றும் குறையவே இல்லை. 

மீண்டும் அதன் சுவையறிய அவள் பார்வை கையில் இருந்த கார்டின் மீது திரும்பியது…

Dear Auntie,

You're the kindest and most gentle person I've ever met, next to my dad. You made me feel so safe and loved. I felt like I was with an angel, surrounded by love and care.

What's amazing is that even though we just met, I didn't feel like you were a stranger to me. You made me feel like I've known you forever.

Thank you for taking care of me when I needed it most. I'll never forget our time together and the way you made me feel.

Love,
Eesha Aurora.

வேலைப்பார்க்க வந்த சாதாரண செவிலியர் பெண் தானே என்ற சிறு அலட்சியம் கூட இல்லாது, ஈஷா பழகிய விதமும், அவளின் நன்றியுணர்வும், குறிஞ்சியின் மனதை அப்படி ஈர்த்திருந்தது.

ஈத்தனின் வளர்ப்பு வேறெப்படி இருக்கும். நினைக்க நினைக்க மனதிற்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. 

‘பேபி…’

‘பேபி…’

என்று இருவரும் மாறி மாறி உருகுவதையும், தாங்குவதையும் பார்க்க தனக்கு கோடி கண்கள் வேண்டும் என்று நினைத்தவள், போதும் போதுமென்னும் அளவிற்கு, மனதில் ஈத்தன் ஈஷாவுடனான நினைவுகளை அள்ளி நிரப்பிக்கொண்டு இருந்தாள்.

அதை வைத்தே தன் மீதி காலத்தை பொற்காலமாக கடத்தி விடுவாளே!

அப்பொழுது வீடு திரும்பிவிட்டிருந்த ஈஷா கதவை தட்டி, “ஆன்ட்டி… ஆன்ட்டி…” என்று அழைத்தப்படியே உள்ளே ஓடி வந்தாள்…

“வந்துட்டீங்களா ஈஷா” என்று குறிஞ்சி உடனே எழுந்துக்கொள்ள.

“ஆமாம் ஆன்ட்டி” என்றவள், “பேபி உங்களை டின்னர் சாப்பிட கூட்டுட்டு வர சொன்னாங்க ஆன்ட்டி. வாங்க சாப்பிட போகலாம்” என்று புன்னகையுடன் கைப்பற்றி அழைத்தாள்.

“போகலாம் குட்டிமா” என்று மகிழ்ச்சியாக எழுந்துக்கொண்ட குறிஞ்சி, ஈஷாவின் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொள்ளாமல், அவளின் வேகத்திற்கு ஏற்ப நடந்துச்சென்றாள்.

கொடைக்கானலில் பள்ளியில் இருந்து வரும் பொழுது ஈத்தனின் சிறிய ரக விமானத்தில் கிளம்பி, சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி, வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

அதேப்போல் குறிஞ்சி திரும்பி செல்லவும் ஈத்தன் தன் விமானத்தையே ஏற்பாடு செய்ய… பதறி மறுத்த குறிஞ்சி, அவன் தன் காரில் செல்ல கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை…

அன்று கிளம்பிய போதே, குறிஞ்சி அவர்கள் பள்ளிக்கு காரில் வந்திருப்பார்கள் என்று நினைத்திருக்க… பள்ளியின் பின்புறமிருந்த ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்களுக்கான Aviation Pad இருந்த இடத்திற்கு ஈத்தன் அழைத்து சென்றதில் பதறியவள், ஈத்தனிடம் தான் தனியாக வருவதாக கூறி மறுக்க…

“நாம மட்டும் தான் குறிஞ்சி. யார் பார்க்க போறாங்க. பார்த்தாலும் நர்ஸ்-ன்னு சொன்னா முடிஞ்சுது. ஏன் எல்லாத்துக்கும் வீணா பயந்துக்கற. இதனால் தான் நான் உன்னை கூட்டிட்டு போக வேண்டாம் நினைச்சேன். இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் பேபிக்கிட்ட பேசிக்கறேன்” என்றான் உடனே.

அதில் கடவுளின் மீது பாரத்தை போட்டு உடனே விமானத்தில் ஏறி அமர்ந்துக்கொண்ட குறிஞ்சி, அடுத்த சோதனையான சென்னை விமான நிலையத்தில் இருந்து எப்படியோ ஒதுங்கி பதுங்கி அவர்களுடன் வீடுவந்து சேர்ந்திருந்தாள்.

கடவுள் ஏதோ ஒருமுறை காப்பாற்றி விட்டார். மீண்டும் மீண்டும் அவரை தொல்லை செய்ய முடியுமா…? அதுவும் தனக்கு எதுக்கு அந்த சொகுசு எல்லாம்… தனித்து தெரிந்து நிச்சயம் மாட்டிக்கொள்வோமே... வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட வேண்டும்…

உறுதியுடன் ரயிலில் ஆன்லைன் முன் பதிவு மூலம் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டாள். 

ஈத்தனுக்கும் நடைமுறை பிரச்சனைகள் புரிந்ததால் வேறுவழியின்றி விட்டுவிட்டு இருந்தாலும்… இப்பொழுது வரை மனம் சற்றும் கேட்கவில்லை… கூடுதலாக பள்ளியில் தான் குடும்பமாக பணியில் இருக்கின்றார்கள் என்றால், பெரிதாக என்ன வசதி இருக்கும் போன்ற கேள்விகள் அவனுள் எழ… ஈஷா தூங்கும் வரை காத்திருந்தவன் எழுந்து வந்து குறிஞ்சியின் அறைக்கதவை தட்டி இருந்தான்…

🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘 


கருத்துகள்

  1. பிரபஞ்சத்தின் ஈர்ப்பு பிள்ளையின் மனதில் பெற்றவளின் நேசம் புரியாமல் போகுமோ...
    புரிந்ததால் என்னவோ பகிர்ந்து இருக்கிறாள்...

    ஆயிரம் கைகள் கொண்டு ஆதவனை மறைத்தாலும் அவன் ஒளி
    அணைந்திடுமா?

    ஈத்தனின் அன்பும்
    ஈஷாவின் நேசமும் ஈன்றவளை இருதலை கொள்ளியாய்
    இருக்க விடாமல் துரத்துகிறதோ....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻