19.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
கீழே வந்த ஈத்தனோ, குறிஞ்சிக்கு பதில் கூற சற்றும் இடம் தராது, “லெட்ஸ் ஈட் ப்ரேக்ஃபாஸ்ட் டூகெதர் குறிஞ்சி. கம் ஆன்…” என்றப்படியே நடக்க…
அதில் வேறுவழியின்றி அவனுடன் நடந்த குறிஞ்சி, டைனிங் டேபிளில் அவன் அருகே அமர…
முன்பே அவர்கள் இருவருக்கும் தேவையான அனைத்தும் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன…
இரண்டு பணியாளர்கள் வந்து இருவரையும் தனித்தனியாக கவனிக்க… குறிஞ்சிக்கு அவ்வளவு சங்கடமாக இருந்தது… எந்த ஊரில் உதவி கேட்டு வருபவர்களுக்கு இத்தனை கவனிப்பு தருவார்கள்…
அதிலும் அவள் முன்பு வைக்கப்பட்ட வெள்ளி தட்டும், டம்ளரும் அவளை அப்படி மிரட்டிவிட்டது…
அதன்பிறகு தான் மேஜையில் இருந்த உணவு பாத்திரங்கள் அனைத்துமே, கனமான வெள்ளி பாத்திரங்களாக இருப்பதையே குறிஞ்சி கவனித்தாள்…
ஈத்தனின் அணுகுமுறை எளிமையாக இருந்தாலும், அவனை சுற்றியுள்ள பொருட்கள் யாவும் அவளின் அடிவயிற்றில் பல பயப்பந்துகளை உருட்டிவிட்டுக்கொண்டே இருக்க…
மெல்லிய நடுக்கம் உடல் முழுவதும் குறிஞ்சிக்கு பரவியது…
சத்தியமாக அவள் முன்பு வைத்திருந்த வெள்ளி தட்டினை தொட்டு பார்க்ககூட அவளுக்கு விருப்பம் இல்லை… தன் தகுதிக்கு மீறியதாக அவள் அதை நினைத்துக்கொண்டு இருக்க…
அதற்குள், “இடியாப்பமும், இட்லியும் இருக்கு ம்மா. எதை முதலில் பரிமாற?” என்று அவளிடம் வேலையாள் கேட்டார்…
இப்பொழுது போய், வேண்டாம் என்று மறுப்பது மிகவும் அநாகரிகமாகவும், கவனத்தை ஈர்க்கும் செயலாகவும் இருக்கும் என்பதால், தன் உணர்வுகளை பொறுத்துக்கொண்ட குறிஞ்சி…
“இட்லி சாப்பிடறேன் அண்ணா” என்றாள்.
உடன், தொட்டுக்கொள்ள சைவமா, அசைவமா என்று கேட்டவர்…
சிறிய வெள்ளி கிண்ணங்களில், மூன்று வகையான சட்னி, சாம்பார் என்று வைத்துவிட்டு, விலகிக்கொள்ள…
நீரினை எடுத்து சிறிது பருகியப்படியே ஈத்தனை பார்த்தாள்…
வலது கையில் கத்தியும், இடது கையில் முட்கரண்டியும் பிடித்து இருந்தவன்… இட்லியை முட்கரண்டியால் பிடித்து, கத்தியால் வெட்டி,
வெட்டிய துண்டினை முட்கரண்டியில் எடுத்து, சாம்பாரில் தொட்டு சாப்பிட…
முதல் முறை இட்லியை இப்படி சாப்பிட்டவனை பார்த்து குறிஞ்சி அதிர்ந்து இருந்தாள். அதிலும் உதட்டில் லேசாக பட்டிருந்த சாம்பாரினை கூட அவன் டிஷ்ஷூ வைத்து துடைத்து விடுவதில், எச்சில் கூட்டி விழுங்கினாள்…
என்ன தான் தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டு இருந்தாலும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்த ஈத்தனுக்கு, கையில் ஒட்டும் படியாக உணவினை எடுத்து உண்பது என்பது சுத்தமாக முடியாத காரியமாக இருக்க… என்ன செய்வான் அவன்…
அப்போது தான், தான் கைக்கழுவாது அமர்ந்துவிட்டதை உணர்ந்த குறிஞ்சி… வேறு வழியின்றி தானும் கையில் ஸ்பூனை எடுத்து இருந்தாள்… ஈத்தன் அளவுக்கு இல்லை என்றாலும், அவனை ஓரக்கண்ணால் பார்த்தப்படியே, முடிந்தளவுக்கு மெல்ல நாசுக்காக, தட்டில் இருந்த இட்லியை அவள் எடுத்து உண்ண… சுவை மிகவும் பிடித்து இருந்தது…
எண்ணெய் பெரிதாக சேர்க்காமல், உப்பு, புளிப்பு போன்றவை மட்டும் சரியான அளவில் சேர்த்து, காரம் சிறிதும் இல்லாமல், செய்யப்பட்டிருந்த உணவின் சுவை முற்றிலும் புதிதாக இருந்தாலும், குறிஞ்சியின் நாவின் சுவை அரும்புகளை நன்றாக தூண்டிவிட்டது… அதில் ஆரம்பத்தில் தடுமாறியவள் மெல்ல பொருந்தி பசிக்கு உண்ண ஆரம்பித்துவிட்டாள்…
அடுத்து ஈத்தன் பவுலில் தேங்காய் பாலில் மிதந்துக்கொண்டிருந்த இடியாப்பத்தை, இரண்டு குச்சிகளை(chopsticks) மட்டுமே வைத்து, எடுத்து உண்ண ஆரம்பிக்க…
குச்சி வைத்து உண்பதெல்லாம் நமக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த குறிஞ்சி, மீண்டும் இட்லியையே வாங்கி ஸ்பூன் வைத்தே உண்டு முடிக்கவும்… டிரஸ்ட்டில் இருந்து மேனேஜர் வரவும் சரியாக இருந்தது…
பிறகென்ன மளமளவென வேலைகள் நடக்க ஆரம்பித்தன…
அனைத்தையும் ஈத்தனே இறங்கி செய்தான்…
சாந்தினியின் கேஸ் ரிப்போர்ட்டை மருத்துவருக்கு அனுப்பி, வீடியோ கால் மூலம் அவருடன் கலந்தாலோசித்தவன்…
அன்றே அட்மீஷன் செய்ய அனைத்தையும் ஏற்பாடு செய்து வைக்க கூறி, ட்ரெஸ்ட் மேனேஜரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு…
தன்னுடைய அறைக்கு சென்றவன்… திரும்பி வந்து குறிஞ்சியின் கைகளில்… ஐந்து ஒரு லட்ச ரூபாய் கட்டுகளை வைத்து இருந்தான்…
அதில் குழம்பிய குறிஞ்சி, “எதுக்கு சார் இந்த பணம்… ஏற்கனவே ட்ரஸ்ட் மூலம் மேனேஜர் சாரை தான் கட்ட சொல்லிட்டீங்களே” என்று கேட்க…
“ட்ரெஸ்ட் மூலம் ஹாஸ்பிடல் பில் மட்டும் தான் செட்டில் பண்ணுவாங்க குறிஞ்சி… அது தவிர்த்து நிறைய செலவுகள் வரும்… உனக்கு தேவைப்படும்… வச்சிக்கோ”, என்றவன், “இப்ப வீட்ல இவ்ளோ தான் சாலிட் கேஷ் இருந்தது… இன்னும் தேவைப்பட்டால் எனக்கு ஒரு மெஸேஜ் மட்டும் அனுப்பிவிடு, நான் என் பர்சனல் அக்கவுண்ட்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் செய்யறேன்” என்று வேறு கூற…
குறிஞ்சியின் கண்களில் இருந்து சரசரவென நீர் இறங்க ஆரம்பித்து இருந்தது…
அதில் அதிர்ந்துவிட்டான் ஈத்தன்…
“காட்… என்ன ஆச்சு குறிஞ்சி… ஏன் அழற… அம்மாக்கு சீக்கிரம் சரியாகிடும்… டாக்டர் சொன்னதை கேட்ட இல்ல… அழாத” என்றுக்கூற…
குறிஞ்சியின் அழுகை மேலும் அதிகமாகி இருந்தது…
அவன் கொடுத்த பணத்தை அப்படியே தன் மடியினில் வைத்தவள்…
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், “டூ மினிட்ஸ் சார்” என்றுவிட்டு, தன் துப்பட்டாவில் முகத்தை மறைத்துக்கொண்டு, சத்தம் வராமல் அவள் அழ…
ஈத்தனுக்கு அவள் அழுவது தெரியாமல் போகுமா என்ன?
“என்னமா அச்சு… சொன்னா தானே தெரியும்… ப்ளீஸ் டோன்ட் க்ரை…” என்றவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… பெரிதாக மனிதர்கள் உடன் பழக்கம் வைத்துக்கொள்ள முடியாது, உயர்தட்டு வாழ்க்கை வாழ்பவனுக்கு அவளின் உணர்வுகள் சட்டென்று புரியவில்லை.
இன்று காலை தானே குறிஞ்சி, மேற்கொண்டு வரும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் தவிக்க ஆரம்பித்து இருந்தாள்… சற்று முன் மேனேஜர் பேசும் போது கூட அவளுள் அந்த சிந்தனை தான்… பேசாமல் தன்னுடைய கிட்னியில் ஒன்றை விற்றுவிடலாம் என்றுக்கூட அவளுள் யோசனை… அந்தளவிற்கு நிராதரவான நிலையில் அவள் கடலுக்குள் நின்றிருக்க…
அவளுக்கு யாரிந்த ஈத்தன்…
திடீரென்று அவள் கைப்பற்றி மொத்தமாக இழுத்து வந்து கரை சேர்த்துவிட்டானே…!
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்ட குறிஞ்சி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்…
கடவுள் நேரில் இப்படி தான் இருப்பாரோ என்று அவளுக்கு தோன்றியது…
ஒரு பொறுப்பை கையில் எடுத்தால், அதை எப்படி முழுதாக முடிக்க வேண்டும் என்பதை ஈத்தனிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்… என்று நினைத்த குறிஞ்சிக்கு…
அவனுடைய செய்கையில் மீண்டும் கண்களில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்தது… பல்லை கடித்து அதனை அடக்கிக்கொண்டவள்…
“நீங்க எனக்கு செய்யுற உதவிக்கு எல்லாம், நான் நன்றி மட்டும் சொல்றது… ரொம்ப சின்ன வார்த்தை சார்… ஆனா அதுக்கு பதிலா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை… உங்களை மாதிரி இந்த உலகத்தில் யாருமே கிடையாது…” என்றவள்…
“எந்த காலத்திலும் உங்க உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார்…” என்றுக்கூற…
அவள் உணர்ச்சிகளின் வசத்தில் இருப்பதை புரிந்துக்கொண்ட ஈத்தன்…
“ஹே… இதெல்லாம் ஒன்னும் இல்லை குறிஞ்சி… ஃபீல் பண்ண கூடாது… உன் அம்மா உனக்கு நீ ஆசைப்பட்ட போல திரும்ப கிடைச்சாலே எனக்கு போதும்… அம்மாவை சீக்கிரம் ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேரும்மா…” என்றவன்… அவளை அனுப்பிவிட…
நிச்சயம் ஈத்தனுக்கு, அவன் கொடுத்த பணத்தினை எப்படியாவது திரும்ப செலுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பிய குறிஞ்சி…
முதல் வேலையாக, செல்லும் வழியிலேயே, பேங்கிற்கு சென்று, ஈத்தன் கொடுத்திருந்த பணத்தை, தன் அக்கவுண்ட்டில் போட்டு, பத்திரப் படுத்திக்கொண்டாள்…
பிறகு வீட்டிற்கு சென்று பிரபுவின் உதவியுடன் சாந்தினியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல… அதன் பிறகான அனைத்தையுமே அங்கிருந்த ஈத்தனின் மேனேஜரே பார்த்துக்கொண்டார்…
நடப்பது அனைத்தும் குறிஞ்சிக்கு கனவு போல் இருந்தது…
அதைவிட ஐஸ்வர்யாவிற்கு இருந்தது… பிரபு மூலம் விஷயத்தை அறிந்தவள்… மருத்துவமனைக்கே கிளம்பி ஓடிவந்துவிட்டாள்…
“என்னது ஈத்தன் சாரை நீ நேரில் பார்த்தியா… பேசுனயா… அவரா உனக்கு உதவி செய்றது…” என்று குறிஞ்சியை போட்டு குடைந்து எடுத்தாள். ஈத்தனின் தீவிர விசிறி அவள் ஆகுமே… மருத்துவமனை என்பதை எல்லாம் பார்க்காமல்… குறிஞ்சியின் உயிரை போட்டு எடுத்தாள்…
தோழி மூலம் சென்று உதவி கேட்டதாக மட்டும் கூறிய குறிஞ்சி… மறந்தும் ஈத்தனை தான் வேலைசெய்யும் மருத்துவமனையில் பார்த்தது குறித்ததோ… அவன் அவளுக்கு கையில் பணம் கொடுத்தது பற்றியோ அவள் மூச்சே விடவில்லை…
சாந்தினியை அழைத்துச்சென்று, அனைத்து பரிசோதனைகளையும் ஒவ்வொன்றாக செய்து முடித்தவர்கள்… முதல்கட்ட சிகிச்சையாக படுக்கை புண்ணிற்கும், சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த நோய் தொற்றிற்கும் மட்டும், சிகிச்சையை ஆரம்பித்து இருந்தார்கள்…
ஒருசில முக்கிய ரிப்போர்ட்கள் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றவர்கள், அது வந்த பிறகு தான் அறுவை சிகிச்சை பற்றிய முடிவு எடுக்க முடியும் என்று இருந்தார்கள்.
இரண்டு நாளும் முடிந்தது…
ரிப்போர்ட்டும் வந்தது…
ஈத்தனும் மருத்துவனைக்கு வந்து இருந்தான்…
___________________________
🔴 அடுத்த பாகம் வாசிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
Nice
பதிலளிநீக்கு👍👍👍
நீக்குInteresting
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குKurinji lucky girl pa Ava amma treatment start ayiduchu. Intha samar paiyan imbuttu nallavana... Athan Avan baby um apdiye valathi vechu irukana
பதிலளிநீக்குஎந்த சலசலப்பும் இல்லாமல் moves like a cool breeze with expections👍
பதிலளிநீக்குSuper 👍 very interesting 😍
பதிலளிநீக்குEthan ku kuzhandai ah veetuku teriama pethu kuduthu irupalo, nalla velai Ethan ah partha nu sollama vittale,
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குVery nice
பதிலளிநீக்கு