8.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘
மனம் சற்று தெளிந்து இருந்தது.
அதில், அப்பொழுது தான் ஈஷாவிற்கு பால் குடித்தப்பின் தலைக்கு குளிக்க உதவி செய்கிறேன் என்று சொன்னோமே என்பது அவளுக்கு ஞாபகம் வர…
குழந்தை போக சொன்னால் தனக்கு எங்கு சென்றது அறிவு, என்று தன்னையே கடிந்துக்கொண்டு மீண்டும் ஈத்தன் இருந்த அறைநோக்கி, சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி ஓடினாள்.
அங்கு ஈஷாவோ ஏற்கனவே தந்தையிடம் வாதம் செய்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
எப்பொழுதுமே ஈத்தன் தான் ஈஷாவிற்கு தலைக்கு ஊற்றி விடுவான். இடை தாண்டிய அடர்த்தியான நீண்ட கூந்தல் அவளுக்கு.
அவர்கள் வீட்டில் அதற்கு ஏற்றப்போல், பெரிய பெரிய அழகு நிலையங்களில் தலைக்கு மட்டும் ஊற்றும் வகையில் இருக்கும் இடம், குளியலறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இன்றும் ஈத்தன், “பேபி நீ ஸ்டூல்ல உட்கார்ந்துக்கோடா… டாடி ஹேர் வாஷ் மட்டும் பண்ணிட்டு வந்துடறேன்… நீ பிறகு குளிச்சுட்டு வா… ஏற்கனவே நீ டயர்ட் டா இருக்க இல்ல” என்றுக்கூற…
புது உடல் மாற்றங்களில், இயற்கையாகவே குழந்தை பருவத்தில் இருந்து பெண்ணாக தன்னை உணர்ந்திருந்தவள், “ப்ளீஸ் பேபி வேண்டாம். நான் ஒன்னும் பேபி இல்லை. நானே குளிச்சுக்குவேன்” என்றுவிட்டு உள்ளே சென்று இருந்தாள், ஈத்தனின் பேபி.
சரியென்று ஈத்தன் கிளம்ப வேண்டிய ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டிருக்க…
கதவை தட்டலாமா வேண்டாமா என்று தனக்குள் ஒரு பெரிய பட்டி மன்றத்தையே நடத்தி முடித்த குறிஞ்சி, இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப தானே போகின்றார்கள் என்ற தைரியத்தில் ஒருவழியாக கதவை தட்ட…
ஈத்தன் தான் வந்து கதவை திறந்து இருந்தான்.
“சாரி சமர் சார். ஈஷாக்கு தலைக்கு குளிக்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருந்தேன். அது மட்டும் செய்துட்டு போகவா…?” என்றாள் பாவமாக.
ஈத்தன் அவளுக்கு பதில் தருவதற்கு முன்பே, “பேபி நான் குளிச்சுட்டேன்… எங்க இருக்கீங்க…?” என்ற ஈஷாவின் குரல் உள்ளிருந்து வெளியே வந்தது.
“நான் ஒன்னும் பேபியில்லைன்னு அவளே குளிச்சுகிட்டா குறிஞ்சி” என்று புன்னகையுடன் கூறிய ஈத்தன், “உள்ளே வா” என்றுவிட்டு அறைக்குள் போக…
பெட்டியில் இருந்து ஹேர் ட்ரையரை எடுத்துக்கொண்டிருந்தாள் ஈஷா…
ஈத்தன் அதனை வாங்கி, அவளுடைய கூந்தலை உலர்த்தியப்படியே, “உனக்கு டியூட்டி இல்லையா குறிஞ்சி” என்று விசாரிக்க…
“டியூட்டில தான் சார் இருக்கேன். உங்களை கவனிச்சிக்கறதும் என் டியூட்டி தானே” என்றவள் சட்டென்று பல்லை கடித்து, “ஈஷாவை பார்த்துக்கிறதை சொன்னேன்” என்றாள்.
ஈத்தன் கொஞ்சமும் அவளின் தடுமாற்றத்தை கவனித்திருக்கவில்லை.
“சரி குறிஞ்சி நீ உட்கார்” என்றுவிட்டு இருந்தான்.
அவள் தெளிந்த நீரோடை என்று அவன் நினைத்திருக்க… என்றோ அவன் கள் வீசி அவளோ கலங்கி போய் இருந்தாளே.
ஈஷாவின் அவ்வளவு பெரிய கூந்தலை ஈத்தன் அசால்டாக ஒருக்கையால் உலர்த்தியப்படியே, மறுக்கையால் சிக்கு எடுத்துமுடிக்க… அவனின் நேர்த்தியை பார்த்தும் பார்க்காததும் போல் குறிஞ்சி மனதில் சேமித்து வைத்துக்கொண்டாள்...
“நான் குளிச்சிட்டு வரேன் பேபி. உனக்கு ஆன்ட்டி பிரேக் ஃபாஸ்ட் வச்சு கொடுப்பாங்க. சாப்பிடு மா” என்றவன் குளியலறைக்குள் சென்றுவிட…
தட்டில் இட்லியுடன் வந்து ஈஷா அருகே அமர்ந்த குறிஞ்சி, “ஈஷாக்கு உடம்பு டயர்டா இருக்கு இல்ல. ஆன்ட்டி ஊட்டி விடுறேன் சாப்பிடுறீங்களா” என்றாள் ஆசையாக.
குறிஞ்சியின் அம்முகத்தினை பார்த்த ஈஷா, என்ன நினைத்தாளோ, “ஓகே ஆன்ட்டி” என்று தன் வாயை திறந்து ஊட்டிவிட காட்டினாள்.
அதில் மகிழ்ச்சி பொங்க… குறிஞ்சி இட்லியை வில்லையாக்கி ஊட்டிவிட…
அதனை மென்றப்படியே ஈஷா, “நீங்க எனக்கு ஹேர் வாஷ்-க்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு ஏன் ஆன்ட்டி பண்ணலை. ஸ்டெயின்ஸ்லாம்(stains/கறை) இருக்கும்னு பேபியையும் என்னால் கூப்பிட முடியலை. எனக்கு ஃபிங்கர்ஸ்(fingers) எல்லாம் ரொம்ப பெயினா இருக்கு” என்றாள்.
அதில் அதிர்ந்த குறிஞ்சிக்கு கண்ணெல்லாம் மீண்டும் கலங்கிவிட்டது, “அச்சோ குட்டிம்மா ரொம்ப சாரி டா… ஆன்ட்டி மறந்துட்டேன்… தப்புதான்… மன்னிச்சிடு தங்கம்” என்றப்படியே குழந்தையின் கரத்தை ஒருக்கையால் பிடித்து நீவிவிட…
“இட்ஸ் ஓகே ஆன்ட்டி. நோ வொர்ரீஸ்” என்றுவிட்டாள் ஈஷா.
குறிஞ்சிக்கு தான் மனம் ஆறவே இல்லை. குழந்தை கேட்கும் அளவிற்கு நடந்துக்கொண்டோமே என்று பயங்கர குற்ற உணர்ச்சியாகிவிட்டது. அதுவும் ஈத்தனுக்கு மகளின் இந்த வலி தெரிந்தால் என்ன பாடுபடுவான். ஊட்டி முடித்தவள் குழந்தையின் இரண்டு கைகளையுமே இதமாக பிடித்து விட்டாள்.
அதற்குள் ஈத்தன் குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு தயாராகி வெளிவர… வந்த குப்பென்ற பர்ஃபியூம் மணத்தில் தலையை நிமிர்த்தாமலேயே அவன் வரவை உணர்ந்திருந்தாள் குறிஞ்சி.
“சாப்டீங்களா பேபி” என்ற வண்ணம் வந்து அமர்ந்த ஈத்தனுக்கு… காலை உணவை குறிஞ்சி எடுத்து வைக்க…
நீயும் உட்கார் குறிஞ்சி என்று அவளுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்தான் ஈத்தன்.
ஈஷா எழுந்து ஈத்தனுக்கு பரிமாறிவிட்டு, குறிஞ்சிக்கும் பறிமாற, மறுக்காது உண்ண ஆரம்பித்தாள் குறிஞ்சி.
பின்னே இந்த வாய்பெல்லாம் இந்த ஜென்மம் தீர்ந்தாலும் இனி கிடைக்காது அல்லவா!
ஈத்தன் மகளுக்கு அனைத்திலுமே “கொஞ்சம் தான் பேபி… கொஞ்சம் தான்…” என்று மீண்டும் உணவை ஊட்டிவிட…
குறிஞ்சிக்கு கவிதையானது அக்கணங்கள்.
ஒருவழியாக ஈத்தனும் ஈஷாவும் கிளம்பும் நேரம் வந்து சேர்ந்தது.
பாதுகாவலர்கள் வந்து உடைகள் அடங்கிய பெட்டிகளை எடுத்துச்செல்ல…
குறிஞ்சியின் கையில் தன் பர்சனல் விசிட்டிங் கார்ட் ஒன்றை கொடுத்த ஈத்தன், “முன்னாடி கொடுத்த கார்ட் வச்சு இருக்கயா தெரியலை குறிஞ்சி. இதை பத்திரமா வச்சுக்கோ. என்ன தேவைனாலும் கூப்பிடு” என்றுவிட்டு “கிளம்பலாமா பேபி” என்று ஈஷாவிடம் கேட்க.
“ஒரு நிமிஷம் பேபி. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு சென்றவள் உள்ளிருந்து “ஆன்ட்டி…” என்று குரல் கம்ம அழைக்க…
“வரேன் டா” என்று குறிஞ்சி உடனே உள்ளே ஓடினாள்.
முதல்முறை அணையாடையை(napkin) தனியாக பொருத்தியிருந்த ஈஷா, சரியாக பொருத்தாது விட்டிருக்க, அதற்குள்ளே உடையில் கறை பட்டுவிட்டு இருந்தது.
“இதுக்கெல்லாம் ஏன் ஈஷாக்குட்டி அப்செட் ஆகறீங்க. எல்லா கேர்ள்ஸூக்கும் இப்படி நடக்கும். டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ஓவர். இருங்க நான் புது டிரெஸ் எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு வெளிவந்த குறிஞ்சிக்கு அப்பொழுது தான் உடை பெட்டிகளை அவர்கள் எடுத்துச்சென்றுவிட்டது ஞாபகத்திற்கு வந்தது.
“சமர் சார் ஈஷாவோட லக்கேஜ் திரும்ப எடுத்துட்டு வர சொல்றீங்களா” என்றாள்.
மறு கேள்வி கேட்காது எடுத்து வர செய்தான் ஈத்தன்.
ஒருவழியாக மீண்டும் உடை மாற்றிக்கொண்டு வெளிவந்த ஈஷாவிற்கு இந்த உடல் மாற்றம் மொத்தமும் இப்பொழுது பெரும் பயத்தை அள்ளி கொடுத்தது.
குறிஞ்சி கூறியிருந்தவாறு தான் காலை எல்லாம் செய்திருந்தாள்.
அப்படியிருந்தும் இப்படி ஆகிவிட்டதே…
அதைவிட யாரேனும் தன்னை அவ்வாறு பார்த்துவிட்டு இருந்தால், என்ன நினைத்திருப்பார்கள், எத்தனை அவமானம் என்று வேறு தோன்ற ஆரம்பித்து விட்டது…
அவ்வயது பிள்ளைகளுக்கு பொதுவாக தோன்றும் உணர்வுகள் தான்… இதில் ஈஷா வேறு தனியாக, அதுவும் சிறு அழுக்கு கூட படாது வளர்ந்திருக்க, அது சற்று அதிகமாக இருந்தது…
அதில் வெளிவந்த ஈஷா ஈத்தனிடம், “பேபி, குறிஞ்சி ஆன்ட்டியையும் நம்ம கூடவே கூட்டிட்டு போகலாமா…?” என்று கேட்டு இருந்தாள்.
அதில் “ஏன் பேபி” என்று அதிர்ந்த ஈத்தனுக்கு ஒருகணம் தலையே சுற்றிவிட்டது.
திரும்பி குறிஞ்சியை ஒரு பார்வை பார்த்த ஈஷா “ப்ளீஸ் பேபி” என்று ஈத்தனிடம் மீண்டும் கேட்க.
“ஆன்ட்டிக்கு இங்க பர்சனல் கமிட்மென்ட்ஸ் நிறைய இருக்கும் பேபி” என்றப்படியே திரும்பி குறிஞ்சியை ஈத்தன் ‘என்ன இது’ என்று படப்படப்புடன் பார்க்க…
ஈஷாவின் கண்களில் இருந்த பரிதவிப்பையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சி, “உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க சமர் சார். ஈஷாக்கு சைக்கிள் முடியும் வரை, ஒரு நர்ஸா நான் கூட இருந்து பார்த்துக்கறேன்” என்று நர்ஸில் நன்கு அழுத்தம் கொடுத்து கூறி இருந்தாள்.
அவளின் அனைத்து கட்டுபாடுகளையும், குழந்தையின் பரிதவிப்பு அடித்து தள்ளி வென்றுவிட்டிருந்தது.
___________________________
🔴 அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/91.html
Very nice sis interesting story
பதிலளிநீக்குVery nice👍
பதிலளிநீக்குதாயாக என்றும் மகளை
பதிலளிநீக்குதந்தை பார்த்துக் கொள்ள
பெண் பிள்ளையின் அவஸ்தையை பெற்றவனால் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க
தாய் அன்போடு பார்த்துக் கொண்டவளோ
தாய் ஸ்தானத்தில் இல்லாமல்
செவிலியாய் வருகிறேன் என்கிறாள்
தள்ளி நிற்க நினைத்தாலும்
தெய்வம் பிரித்தவர்களை சேர்க்க நினைக்கின்றதோ...