9.3 சங்கீத வானில் ஓர் அந்திப்போர்

குறிஞ்சி எங்கிருந்து அதற்குள் தூங்கிருக்க போகிறாள். முழித்து தான் இருந்தாள்.


கதவு தட்டும் சத்தம் கேட்டதும், ‘யார் இந்த நேரத்தில்’ என்று அவள் யோசிக்கும் போதே, “நான் தான் குறிஞ்சி ஈத்தன். டோர் ஓப்பன் பண்ணு” என்றிருந்தான் ஈத்தன்.


உடனே ஓடிவந்து கதவை திறந்தாள் குறிஞ்சி.


“என்ன ஆச்சு சார். ஈஷா நல்லா இருக்கா தானே” என்று அவள் படபடக்க…


“ஹே! ஈஷாக்கு ஒன்னும் இல்லை குறிஞ்சி. அவ நல்லா தூங்கிட்டா. நான் தான் உன்கிட்ட பேச வந்தேன்” என்றவன், “உள்ளே போய் பேசலாமா?” என்றான்.


அதில் சடுதியில் அதிவேகமாக குறிஞ்சிக்கு அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது.


“வாங்க சார்” என்றப்படியே திரும்பி நடந்தவள், தன் படபடப்பை பெரும் பாடுப்பட்டு மறைத்துக் கொள்ள…


“இன்னும் இந்த சாரை நீ விட மாட்ற” என்றப்படியே, அங்கிருந்த நீள் சோஃபாவில் அமர்ந்த ஈத்தன், “உட்கார் குறிஞ்சி” என்று தன்னருகே இடம் காட்டினான்…


அவள் வேண்டவே வேண்டாம் என்று நினைத்த தனிமை. 


எப்பொழுதும் போல் தன் உணர்வுகளை ஈத்தன் படித்துவிடுவானோ என்ற பயம் அவளை பயங்கரமாக ஆட்கொள்ள, வரவழைத்த புன்னகையுடன் முள் மேல் அமர்வது போல் அவனருகே அமர்ந்தாள் குறிஞ்சி…


“அப்புறம் குறிஞ்சி… நாளைக்கு கிளம்பிடுவ இல்ல” என்ற ஈத்தன், “என்கிட்ட ஏதாவது சொல்லனும்னு நினைக்கறியா” என்று கேட்டான் சாந்தமாக.


“இல்லை சார்” என்றாள் உடனே குறிஞ்சி.


அதற்கு “ம்…” என்றவன், “குழந்தைங்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணி இருப்பாங்க இல்ல குறிஞ்சி. பாவம் ஃபோர் டேஸா பார்க்காம இருக்காங்க” என்று விசாரிக்க…


சில வினாடிகள் தேங்கிய குறிஞ்சி, “அவங்க அப்பா கூட இருக்கும் போது என்னை மிஸ் பண்ணவே மாட்டாங்க சார்” என்றாள் உண்மையாக தோன்றிய புன்னகையுடன்.


குழந்தைகள் பற்றி பேசியதும் அவள் முகம் மலர்ந்து விட்டதை பார்த்த ஈத்தன், திருப்தியுடன் “நைஸ் நைஸ். அப்பா செல்லங்களா” என்றுவிட்டு, “எந்த உதவி தேவைப்பட்டாலும் என்கிட்ட தயங்காமல் கேளு குறிஞ்சி. உங்களுக்கு செய்ய நான் காத்துட்டு இருக்கேன்” என்றான்.


அதில் அவன் வந்ததன் நோக்கம் குறிஞ்சிக்கு புரிந்துவிட, நொடியில் உள்ளுக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. எப்பொழுதுமே அவளை அவன் அக்கோட்டிலேயே நிறுத்திவிடுவதில் வரும் ஏமாற்றம்.


முயன்று ‘மனமே தேவையில்லாமல் எதையும் அவரிடம் எதிர் பார்க்காதே… அவர் என்ன செய்வார்… நீதானே ஆரம்பித்து வைத்தாய்’ என்று அவளுக்கு அவளே ஆறுதல் கூறிக்கொண்டே, “கண்டிப்பா தேவை வரும் போது கேட்கிறேன் சார்” என்றாள் அவனிடம். 


ஈத்தன் எதிர்பார்த்த பதில் தான். அதில் மேலும் மென்மையேறிய கண்களுடன் அவள் கண்களை பார்த்தவன், “பன்னிரண்டு வருஷம் இருக்குமில்ல குறிஞ்சி…” என்று சிறு இடைவெளிவிட்டு, “நீ கொஞ்சமும் மாறவேயில்லை” என்றான், பழைய நினைவுகளில்.


‘நீங்களும் தான் சமர் சார்’, மனதினுள் கூறிக் கொண்டாள் அவளும் கசப்பாக.


எதிரில் இருப்பவளின் மனவோட்டத்தை அறியாத ஈத்தன், “எப்படி‌ குறிஞ்சி? எனக்கு தேவை வரும் போதெல்லாம், சரியா வந்துடற! யூ ஆர் மை ரியல் ஏஞ்சல். தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்றது எனக்கு தெரியலை” என்றான் உணர்ந்து.


“தேங்க்ஸ் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை சார். நான் என்ன பெருசா பண்ணேன். நீங்க எனக்கு செய்ததில் கடுகளவு கூட நான் பண்ணது இருக்காது சார். நீங்க சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்” என்றாள் உளமார்ந்து.


அதில் குறிஞ்சியின் கண்களை நேருக்கு நேர் நோக்கியப்படி இருந்த ஈத்தனின் கண்கள் சற்று விரிந்து பளப்பளத்தது.


என்ன பெண்ணவள் இவள்? சிறிதும் தன்னலமில்லாது மற்றவரின் நலனை வேண்டுகிறாளே. இப்படியே ஒவ்வொரு கணமும் என்னை பிரம்மிக்க வைக்கின்றாளே! என்ற பொருள் அவன் பார்வையில் கசிந்துருக…


உச்சி வெயிலில் கடலை போல் தகதகக்கும் அவனின் அப்பார்வையை தான் அவளால் கொஞ்சமும் எதிர்க்கொள்ள முடியவில்லை. 


குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்தே அவளை கொன்றது…


உள்ளுக்குள் தன் தாடை தசைகளை பற்களால் கடித்து, உணர்வுகளை அடக்க பெரும் பாடு பட்டாள்.


எத்தனை எத்தனையோ முறை அந்நீல விழிகளில் இதை அவள் கண்டு இருக்கின்றாள்.


அப்பார்வை தான், மீண்டும் மீண்டும் அவளின் வாயை அடைத்து, உணர்வுகளை புதைக்க செய்கிறது.


‘நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை சமர் சார்…’ என்று உள்ளுக்குள் அப்படி கத்தினாள்.


பாவம் ஈத்தனுக்கு அது எப்படி கேட்கும். 


நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே அவனுக்கு காட்டப்பட… மறைக்கப்பட்ட மறுபக்கத்தை இறுதிவரை அவன் உணராமலேயே போனான்…


“இது உனக்கு இல்லை குறிஞ்சி, உன் குழந்தைகளுக்கு, ஈத்தனோட சின்ன அன்பு. என்னால் வேற எதுவும் அவங்களுக்கு வாங்கி கொடுக்க முடியலை. அதுவே எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. பிளீஸ் வாங்கிக்கோ” என்று, மூன்று குழந்தைகள் என்று குறிஞ்சி கூறியிருந்ததால் மூன்று காசோலைகளை அவள் கையில் ஈத்தன் தந்தான். அவன் வந்ததே அதற்கு தானே. வந்த வேலையை முடிக்க பார்த்தான்.


ஆனால் அவன் செயலில் உடனே தன் கரத்தினை இழுத்துக்கொண்ட குறிஞ்சி “இல்லை சார். இதெல்லாம் எதுவும் வேண்டாம். நீங்க ஏற்கனவே கொடுத்த பணமே நிறைய இருக்கு. பிளீஸ்” என்று மறுத்தாள்.


ஈத்தன் என்னன்னவோ கூறிப் பார்த்தான்.


மாட்டேன் என்று உறுதியாக மறுத்து விட்ட குறிஞ்சி, “சாரி சமர் சார்” என்று இருக்கையில் இருந்து எழுந்து நின்றுக்கொண்டாள்.


அதில் வருத்தத்துடன் எழுந்துக்கொண்ட ஈத்தன், “சரி குறிஞ்சி. மணியாகிடுச்சு நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு உனக்கு லாங்க் ட்ராவல் இருக்கே. மார்னிங் பார்க்கலாம்” என்றுவிட்டு கதவை நோக்கி நடந்தான்…


அவன் வருத்தம் அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது. அதற்காக எத்தனை முறை தான் அவனிடம் காசோலையை அவளால் வாங்க முடியும். முதல்முறை வாங்கியதற்கே தன்னை அவனிடம் மொத்தமாக தொலைத்துவிட்டு இருந்தாள். அதையே அவளால் இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுமுறை அவனுக்காக என்று வாங்கி…


எண்ணங்கள் மனதினுள் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தாலும்… விரைந்து அவனை தாண்டி சென்ற குறிஞ்சி, அவனுக்காக கதவை திறந்துவிட்டு, அங்கேயே ஓரமாக நின்றாள்.


அதில், “தேங்க் யூ” என்றவண்ணம் அவளை நெருங்கிய ஈத்தன். புன்னகையுடன் அவளின் கன்னத்தில் லேசாக தட்டி, “மார்னிங் பார்க்கலாம் கேர்ள். குட் நைட்” என்றுவிட்டு வெளியேற…


எதிர்பாராத அவனின் ஸ்பரிசத்தில் தன்னைமீறி சிலிர்த்து சிலையானவள்… பிடிப்பின்றி ஏதோவொரு ஞாபகத்தில் அப்படியே பின்புறமாக சாய முற்பட…


அவ்வளவு தான்… பின்புறம் அழகிற்காக பெரிதாக நிற்க வைக்கப்பட்டிருந்த உலோக குவளை(metal vase) உருண்டோட, கீழே விழுந்துவிட்டு இருந்தாள் குறிஞ்சி.


பத்தடி கூட ஈத்தன் கடந்திருக்க மாட்டான்…


கேட்ட சத்தத்தில் அதிர்ந்து திரும்பி ஓடிவந்தவன்…


“ஓ மை காஷ்(Gosh)... சாரி குறிஞ்சி… ஆர் யூ ஓகே” என்று விழுந்து கிடந்தவள் கைப்பற்றி தூக்க…


ஏற்கனவே சத்தம் எழுப்பியதிலும், விழுந்துவிட்டதிலும் பதட்டத்தில் இருந்தவளுக்கு, ஈத்தன் வேறு விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டதில் சங்கடம் சேர்ந்துக்கொண்டது.


“எனக்கு ஒன்னும் இல்லை சார்” என்ற குறிஞ்சி உடனே எழுந்து நிற்க முற்பட, அவளின் முந்தானை அவளின் பாதத்தில் மிதிப்பட்டு, ஹூக்கில் இருந்து வெளிவந்து கீழே விழுந்து இருந்தது…


அதில், “அச்சோ…” என்று பதறியவள், ஈத்தன் கையிலிருந்த தன் கரத்தினை உருவிக்கொண்டு, மீண்டும் கீழே அமர பார்க்க…


“ரிலாக்ஸ் கேர்ள்… ரிலாக்ஸ்… நான் எடுத்து தரேன்” என்ற ஈத்தன் அவளின் முந்தானையை எடுக்க குனிய… அதேநேரம் பதட்டத்தில் அவன் கூறியது எதையும் காதில் வாங்கியிருக்காத குறிஞ்சியும் முந்தானையை எடுக்க குனிய…


மின்னலென ஒருப்பொருள் ஈத்தன் முகத்தை வந்து அடித்து தீண்டியது… அதன் அதீத குளிர்ச்சியில் என்னவென்று அன்னிச்சையாக தன் கண்களை உயர்த்தி பார்த்த ஈத்தனின் பார்வை… சட்டென்று கூர்மை பெற….


மறுகணம், “குறிஞ்சி…” என்று வீடே அதிரும் வகையில் தன் வழக்கத்திற்கு மாறாக கத்தி இருந்தான், ஈத்தன்.


அதில் என்னவென்று பதறி அவன் முகத்தை பார்த்து, அவன் கண்கள் நிலைத்த இடத்தை பார்த்த குறிஞ்சிக்கு பகீரென்று ஆனது. அடிவயிறு தடதடவென நடுங்க ஆரம்பித்துவிட்டு இருந்தது.


“இ து இது… நான் கட்டியது தானே” என்ற ஈத்தன் தன் நடுங்கும் கரத்தினால் அவள் மார்பில் தொங்கும் மாங்கல்யத்தை பற்ற வர…


பட்டென்று தன் சரிந்திருந்த முந்தானையை தூக்கிய குறிஞ்சி, மாங்கல்யத்துடன் சேர்த்து தன் மார்பை மறைத்துக்கொண்டாள்.

🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 😘 📽️ 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/10.html

கருத்துகள்

  1. Thali kattinana ithu eppo iva en rumba bayanthutu iruka yar enna pannuvamga oru velai ivaloda family ah illa Ethan oda amma ah irukumo,

    பதிலளிநீக்கு
  2. Suspenc ah muduchuttigaley next ud eppo varum

    பதிலளிநீக்கு
  3. Super.... Suspense... Waiting for next ud.

    பதிலளிநீக்கு
  4. Super sis very very nice and interesting ud 😊❤️❤️❤️❤️❤️❤️

    பதிலளிநீக்கு
  5. Rightra... Namala aduthu enanu yosika vechu mandaiya pichuka veikarathaye oru velaiya intha writer vechu irukum pola. Mandai kaayuthe enathan nadanthu irukum... Aiyaa.. Nan keta flashback varuthudoi..

    பதிலளிநீக்கு
  6. குழந்தைக்காக கல்யாணம் பண்ணி இருப்பானோ🤔🤔🤔very interesting 😍😍😍

    பதிலளிநீக்கு
  7. Think so esha's mom uh kurunji

    பதிலளிநீக்கு
  8. Super dear.. suspense oda mudichitengalae

    பதிலளிநீக்கு
  9. I think, Kurinji is Isha’s surrogate mother. For the same, she has been paid by Eethen.

    As Kurinji doesn’t want to carry a baby in the tag of unmarried.. so she would have demanded him to tie her knot.

    This concludes, Eethen doesn’t have a wife in real.

    பதிலளிநீக்கு
  10. தள்ளி நிற்கிறாள் துடிக்கிறாள்
    தவிக்கிறாள்
    தாங்க முடியாத பாரம் தூக்கி சுமக்கிறாள்
    தவிர்க்கப் பார்க்கிறாள்..
    துணையில்லாமல் தனித்து வாழ்கிறாள்...

    தன்னவன் ஸ்பரிசம்
    தன்னை தீண்டியதும்
    தன்னிலை மறந்து
    தவறி கீழே விழ
    தனக்குள் மறைத்திருந்த
    தன் மாங்கல்யம்
    தெரிந்தே அவளின் கள்ளத்தனத்தை
    தன்னவனுக்கு காட்டி
    கொடுத்து விட்டது...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻