11.2 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻😘📽️
ஆறுதலாக குறிஞ்சியின் நடுங்கும் கரத்தில் ஒன்றை மட்டும் எடுத்து தன் கரத்தினுள் பிடித்துக் கொண்ட ஈத்தன்…
“நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்னு உனக்கும் தெரியும் குறிஞ்சி. அப்படியும் இன்னும் தூங்கற மாதிரியே படுத்து இருந்தா என்ன அர்த்தம் கேர்ள். எவ்ளோ நாள் இப்படியே இருக்க முடியும்னு நினைக்கிற…?” என்றவன், ஏசியின் குளுமையை தாண்டி, குப்பென்று அவளின் மேல் உதட்டில் அரும்பிவிட்ட வியர்வை முத்துக்களை பார்த்து… ‘காட்…’ என்று தன் கண்களை அழுந்த மூடி திறந்தான்…
இப்பொழுது அவளின் உள்ளங்கை வியர்வை அவனுடைய கையை நனைக்க ஆரம்பித்து இருந்தது…
இப்படியே போனாள் அவளுக்கு மாரடைப்பு வருவது உறுதி. அவளை பார்த்தே தனக்கும் வரப்போவது உறுதி என்று நினைத்த ஈத்தன்… எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன்…
“ஈசி ஈசி குறிஞ்சி. நான் உன்னை எதுவும் கேட்கலை. பயப்படுறதை நிறுத்து. ரிலாக்ஸ் ஆகு” என்றான்.
ஆனால் ஈத்தனின் நெருக்கத்தில் குறிஞ்சிக்கு மேலும் மேலும் பதட்டம் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை...
அவன் அவளை இனி எதுவும் கேட்டால் என்ன?
கேட்காவிட்டால் என்ன?
அது தான் அவளின் குட்டு ஏற்கனவே வெளிப்பட்டு விட்டதே!
அவன் கட்டிய நொடி முதலே, அவள் அதை படாத பாடு பட்டு அவனிடம் இருந்து மறைத்து வைத்திருக்க, இன்று நடந்து விட்டதை அவளால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…
அப்பொழுது அவள் அருகில் இருந்த மேஜையின் மீது இருந்த மருந்துகள் ஈத்தனின் கண்களில் விழுந்தன… அதை எடுத்து பார்த்தவன் அது பிரிக்கப்படாமலேயே இருப்பதை உணர்ந்து… அதிலிருந்து இரவிற்கானவற்றை பிரித்து எடுத்தப்படியே…
“போதும் குறிஞ்சி எழுந்திரு. நான் தான் எதுவும் கேட்கலைனு சொல்லிட்டேன் இல்ல. இன்னும் என்ன?” என்றவன், “எழுந்து இந்த டேப்லெட்ஸ போட்டுட்டு படு…” என்றான்.
அதற்கும் நோ ரியாக்ஷன் அந்தப்பக்கம்.
எந்த மயில் இறகை போடு என்றதும் போட்டு இருக்கிறது.
ஈத்தனின் மொத்த கட்டுப்பாடுகளையும் இன்று உடைத்தே தீருவேன் என்று சபதம் எடுத்தவள் போல் குறிஞ்சி அசையவே இல்லை.
“ஒரு நர்ஸ் பண்ற வேலையா இது” என்றவன், “இப்ப நீயா எழுந்து மருந்தை சாப்பிடறியா? இல்லை நான் சாப்பிட வைக்கவா குறிஞ்சி…!” என்றான் அழுத்தமாக.
அதில் ஒரிரு நொடி மூச்சுவிட மறந்த குறிஞ்சி, மறு நொடி மின்னலென எழுந்து அமர்ந்து இருந்தாள். என்னவென்று ஈத்தன் உணரும் முன்பே, அவன் கையில் இருந்த மாத்திரையையும் நீரையும் வெடுக்கென்று பிடுங்கி வாயில் போட்டு விழுங்கியவள்… மறுநொடியே அவனுக்கு முதுகு காட்டி படுத்தும் விட்டாள்…
அவளின் வேகத்திலும், வெடுக்கிலும், தன் விழிகளை விரித்து விழித்த ஈத்தனுக்கு, சூழ்நிலையின் கனம் சற்று குறைந்து இதழ்களில் ஓரங்கள் குறுஞ்சிரிப்பில் விரிந்தன…!
ஈஷா கூட இப்படி எல்லாம் அவனிடம் நடந்துக்கொண்டது கிடையாது…!
அதில் ‘காட் குறிஞ்சி!’ என்று நினைத்தவன்… நிலைமையை உணர்ந்து…
“இந்த ஆயின்மெண்ட்டையும் போட்டுட்டு படு குறிஞ்சி…” என்றான், வரவழைத்த அழுத்தத்துடன்.
அதில், ‘ஐயோ கடவுளே… மனுஷன் விடவே மாட்றாரே’ என்று நினைத்த குறிஞ்சி, வேறுவழியின்றி அவஸ்தையாக எழுந்து படுக்கையில் அமர்ந்தாள்.
தொடும் தூரத்தில் ஈத்தன் அமர்ந்திருக்க… தன் தலையை சிறிதும் அவள் நிமிர்த்தவே இல்லை…
‘ஆயின்மெண்ட்டை போடுனா இவர் இருக்கும் போது எப்படி போடுறது’ என்று அவள் விழிக்கும் போதே…
அவள் கைப்பற்றி அதில் ஆயின்மெண்ட்டை வைத்த ஈத்தன், “நான் ஹாட் பேக் எடுத்துட்டு வரேன். டென் மினிட்ஸ்” என்று எழுந்து, கதவை மூடிவிட்டு சென்றுவிட்டான்.
இதில் இதில்தான் பெண்ணின் மனம் அவன் பின்னோடே சென்றுக்கொண்டே இருக்கிறது. ஒருவார்த்தை சொல்லாமலேயே எவ்வளவு அனுசரணையாக, கண்ணியமாக நடந்துக்கொள்கின்றான்.
தன்னை மறந்து ஒருசில நிமிடங்கள் ஈத்தனிடம் லயித்துவிட்ட குறிஞ்சி அதிர்ந்து, ‘திருந்தவே மாட்டியாடி நீ…’ என்று தன் தலையில் தானே கொட்டிக்கொண்டு, ‘ஏதோ பாவம் பார்த்து விட்டு வச்சு இருக்கார்… நேரம் அமையும் போது ஆடித் தீர்த்துடுவார்…’ என்று நினைத்தப்படியே குளியல் அறைக்குள் சென்று மருந்தை தடவிக்கொண்டவளுக்கு, அவள் செய்து வைத்ததையெல்லாம் நினைக்க நினைக்க மீண்டும் பயமேற தொடங்கிவிட்டது…
நேராக தன்னுடைய அறைக்கு சென்றிருந்த ஈத்தன், உறங்கும் ஈஷாவை ஒருமுறை சரி பார்த்துவிட்டே, கீழே இறங்கி சென்றான்.
நான்கைந்து ஹாட் வாட்டர் பேக்கில் அவனே சுடுநீரை பிடித்து நிரப்பிக்கொண்டு மேலே வரவும், குறிஞ்சி குளியல் அறையில் இருந்து வெளி வந்து மீண்டும் பழையப்படி படுத்துக்கொள்ளவும் சரியாக இருந்தது…
அதில் ஒரு பெருமூச்சுடன், “ஹாட் பேக் உன் பக்கத்திலேயே வைக்கிறேன் குறிஞ்சி. கொஞ்சம் நேரம் கழிச்சு பெயின் இருக்க ப்ளேஸ்க்கு யூஸ் பண்ணிக்கோ” என்று அவள் அருகே அனைத்தையும் வைத்த ஈத்தன்…
குறிஞ்சியின் பதிலை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.
கிடைக்காது என்று தெரிந்தப்பிறகு எதற்கு எதிர்பார்த்து ஏமாற வேண்டும்.
ரூம் டெம்ப்ரேச்சரை சரிப்பார்த்தவன், இரவு விளக்கை போட்டுவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து அறையை சுற்றி ஒருமுறை பார்க்க, கண்ணில் குறிஞ்சி போர்த்திக்கொள்ளாது படுத்திருப்பது பட்டது…
அதில் படுக்கையின் பக்கவாட்டில் இருந்த ட்ராவை இழுத்து பிளான்கெட்டை எடுத்தான்.
‘இவர் என்ன இன்னும் போகாமல் இருக்கார்’ என்ற நினைப்பில் இருந்த குறிஞ்சி, படுக்கைக்கு அடியிலிருந்து திடீரென வந்த சத்தத்தில், பதறியவள் என்னவென்று கண்களை மில்லிமீட்டர் அளவு மட்டுமே திறந்துப்பார்க்க…
ஈத்தன் போர்வைவை விரித்து அவளுக்கு போர்த்திவிட்டு இருந்தான்…
முன்பும் எத்தனையோ முறை இதையெல்லாம் அவளுக்கு அவன் செய்து இருக்கின்றான் தான். ஏன் இதையும் தாண்டி கூட நிறைய செய்து இருக்கின்றான். இருந்தும் இன்று இத்தனை நடந்த பிறகும் அவனின் மாறாத அக்கறையில் நெகிழ்ந்து விட்டவள், தன்னுடைய ஆடை நெகிழலை அறியாது போனாள்.
ஆனால் ஈத்தன் அவளின் நெகிழ்வையும், அவளின் ஆடையின் நெகிழ்வையும் ஒரு சேர கண்டுவிட்டு இருந்தான்.
பதட்டத்தில் இருந்தவளுக்கு கால் பக்கம் விலகியிருந்த சேலை கவனத்தில் படாமல் போக... போர்வையை விரித்தவன் கண்களில் மருதாணியின் சிவப்பில் மிளர்ந்த பெண்ணின் பால் வண்ண பாதங்கள் பளிச்சென்று விழ, அதற்கு கிரீடமாக அதில் வீற்றிருந்த தங்க கொலுசுகளும் கருத்தில் விழுந்தன…
அதில் அவனின் இதயம் எகிறி உள்ளே ஒருமுறை குதித்து இருந்தது.
‘கட்டிய தாலியை கழட்ட மனம் வராமல், ஏதோ செண்டிமெண்ட் முட்டாளாக யோசித்து வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருப்பாளோ. கேட்டு அதனை சரிசெய்ய வேண்டும்’ என்று இவ்வளவு நேரமும் நினைத்துக்கொண்டு இருந்தவனுக்கு, இப்பொழுது கழட்டாத கொலுசுகள் வேறு கதையை கூறுவது போல் இருந்தது.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அவன் அவளுக்கு அணிவித்துவிட்டு இருந்தவைகள் அவை…
அறுந்துவிடாமல் இருக்க… அதனை சுற்றி வேறொரு தங்கக் கயிறு பின்னல் போல் பின்னப்பட்டு இருந்தது…
அவள் கழுத்தில் இருந்த தாலி கயிற்றிலும் அப்படி எதோ பார்த்த ஞாபகம் அவனுக்கு வர…
சட்டென்று மூச்சு விடவே சிரமமாக ஆனது ஈத்தனுக்கு…
அவன் ஒன்றும் வாயில் விரல் வைத்தால் கடிக்க தெரியாத குழந்தை இல்லையே!
நிதானம் அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்ட உண்மையில், முன்பு அடைந்த அதிர்ச்சியை விட இப்பொழுது பலமடங்கு அதிகமாக அதிர்ச்சி அடைந்து இருந்தான்…
சற்று முன்னர் விடாது கேள்விகளை தொடுத்திருந்தவன், இப்பொழுது விடையறிந்ததும், தடதடக்கும் தன் இதயத்தை பற்றிக்கொண்டு, வெளியே ஓடிவிட்டான்…
____________________________
ஈத்தன் வெளியேறியப்பின்னர், எண்ணி ஐந்து நிமிடங்களுக்குள்ளே ஊசி மற்றும் மாத்திரையின் விளைவால், தன்னை மீறிய உறக்கத்தில் நீண்ட நேரம் ஆழ்ந்து இருந்த குறிஞ்சிக்கு மெல்ல முழிப்பு தட்ட, திரும்பி படுக்க முயன்றாள்…
அப்பொழுது இடுப்பிலும், முதுகிலும் ஆழம் வரை வலித்தெரிய, “ம்மா…” என்று வாய்விட்டே முனங்கியவளுக்கு, வலியில் உறக்கம் சுத்தமாக கலைந்துவிட்டது.
‘என்ன வலி இது’ என்று யோசித்தவளுக்கு மெல்ல நேற்றைய நினைகள் ஞாபகத்திற்கு வர…
‘கடவுளே…’ என்று பதறி எழுந்தமர்ந்தவள், சுவரில் இருந்த கடிகாரத்தை திரும்பி பார்க்க, மணி அதிகாலை 3.
அதைத்தொடர்ந்து, அடுத்த அரைமணி நேரத்தில் ஈத்தனின் தொலைபேசி அடிக்க ஆரம்பித்தது.
அதில் மேல் தளத்தில், திறந்தவெளியில் அமைந்திருந்த நீச்சல் குளத்திற்கு அருகே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில், அமர்ந்திருந்த ஈத்தனின் அமைதி கலைந்து இருந்தது.
தொலைப்பேசியை எடுத்து பார்த்தவன், அவனின் முதன்மை பாதுகாவலர் தாமஸிடம் இருந்து வரும் அழைப்பு என்பதால் உடனே எடுத்துவிட்டான்.
“சாரி சார்” என்று அவனை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டவர், “ஈஷா மேடமை பார்த்துக்க வந்திருந்த நர்ஸ் உடனே ஊருக்கு போகனும்னு கிளம்பி வந்திருக்காங்க சார். போக அனுமதிக்கவா? இல்லை” என்று தமாஸ் நிறுத்த…
நாற்காலியில் இருந்து எழுந்த ஈத்தன், வாயில் புறம் இருந்த மாடியின் சுற்று சுவர் பக்கம் வந்து நின்று கீழே பார்த்தான்…
அங்கு கையில் பையை பிடித்துக்கொண்டு குறிஞ்சி நின்றுக்கொண்டு இருந்தாள்…
ஈத்தன் எழுவதற்குள் சென்று விடலாம் என்று முடிவெடுத்தவளுக்கு, அவனின் அனுமதியின்றி அவளின் நிழலை கூட வெளியே செல்ல விட மாட்டார்கள் என்பது தெரியவர, ‘போச்சு போ’ என்று சுத்தமாக நொந்துபோனாள்…
பாதுகாவலர் ஈத்தனிடம் பேசுவதை அறிந்திருந்தவள், ஈத்தன் என்ன கூறுவானோ என்ற படப்படப்புடன் நின்றிருக்க… அப்பொழுது தீடிரென்று ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளுக்கு தோன்றியது…
அதில் பட்டென்று நிமிர்ந்து மேலே பார்த்தவள்… அங்கு நின்றிருந்த ஈத்தனை பார்த்து அதிர்ந்துப்போனாள்…
ஐந்தாவது மாடியில் இருப்பவனின் கண்களை பார்க்காமலேயே அவனுடைய கூர் பார்வையினை தன் தேகம் முழுவதும் உணர்ந்து… ஆடாது அசையாது அப்படியே அவள் நிற்க…
“லெட் ஹெர் கோ, தாமஸ்” என்று இருந்தான் ஈத்தன்.
ஆம்! அவளை செல்ல அனுமதிக்க கூறிவிட்டு இருந்தான்.
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/03/121.html
Kurimji ku enna age aguthu ippo chinna ponnu ah, illa avanuku equal ah irupala, kurimji nee poita unnai pathi terimjika mudiathu nu ninaikiriya ini anda velai dan parka poran nu thonuthu, appadi enna nadanthu irukum
பதிலளிநீக்குSo interesting dear.... Fb kaga waiting
பதிலளிநீக்குWriter yen ipdi... Nan Koda flashback inaiku varum nalaiku varum nu avlo aarvama pathukitu iruken.. en porumaiya roooomba sothikarenga. Enathan samar and kurinji ku Achu. Yen kurinji ipdi samar ah vitu thalli thalli pora. Paavam my samar
பதிலளிநீக்குWriter yen ipdi.. y ipdi kurinji lusu mathiriye Pani en samar baby ah tension panra.. paavam la pa samar paiyanum.. kurinji and samar lovers ah ena. Thaali katirukan en samar baby and kolusi athum gold la potu vitrukan. Ena nadakuthu inga
பதிலளிநீக்குஅஞ்சி ஓடும்
பதிலளிநீக்குஅஞ்சனை விழிகளில்
அசைந்த மனதை
அவள் பக்கம் புரிந்து
அகன்றிடும் ஈத்தன்...
தவறில் குறுகி
தவிக்கும் குறிஞ்சி
தப்பிக்க ஓட துடிக்க
தெரிந்தே விலகுகிறான்..
போ நீ போ
பதிலளிநீக்குபின்னாடியே நான் வருவேன்
போ நீ போ 😌😌
Very interesting.
பதிலளிநீக்கு